Friday, July 22, 2022

பன்றிக்கு நன்றி சொல்லி

 #ஶ்ரீநிவாசனும்_குலசேகரனும்_வராகமும் .

 பன்றிக்கு_நன்றி_சொல்லி ..... 🙏

         "பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குல சேகரனை…”

இது சாதாரணமாக வரும் வார்த்தை விளையாட்டல்ல. இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு உள்ளது.

      #குலசேகரன் என்றால் "குலத்தை இரட்சிப்பவன்"  என்று பொருள். #ஸ்ரீ என்றால் #செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி இலட்சுமியை மணக்கப்  பெருமாளுக்கே செல்வத்தைக் கொடுத்தவர்   குபேரன்.   எனவே  பெருமாளின் குலம் பெருக  இரட்சித்த குபேரன்தான் _பெருமாளின் குலசேகரன்.

        'இக் கலியுகம் முடியும் வரை எனது ஆலயத்தில் வரும் பக்தர்கள் தரும் அன்பளிப்பு உன்னிடம் நான் வாங்கிய பணத்துக்கு வட்டி ஆகவும்,  கலியுக இறுதியில் எப்பொழுது எனது ஆலயத்தில் பக்தர்கள் வராமல் இருக்கிறார்களோ அப்பொழுது  மொத்தப் பணத்தையும் திருப்பித் தருவேன்' என்று ஸ்ரீநிவாசப் பெருமாள், குபேரனுக்கு வாக்குறுதி அளித்தாராம் .

      அவ்வாறு பெருமாள வாசம் செய்ய (ஆலயத்திற்கு)  ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப்பெருமாள். அதானால் பன்றியாகிய ஸ்ரீ வராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்ற கோலத்தில்  மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து,  கடனை வென்றாராம் பெருமாள்.

      இது தான் “பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை” என்ற விடுகதைக்கான விளக்கம்.🙏

No comments:

Post a Comment