Sunday, July 17, 2022

பேட்டி - சுஜாதா

 பேட்டி  - சுஜாதா சிறுகதை

(இதயம் பேசுகிறது தீபாவளி இதழ் - 1983)

அழைப்பு மணியைத் தொட்டபோது வராந்தாவின் இடப் பக்கத்தில், 'வெர்கம், வெர்கம்' என்று குரல் கேட்டது. திரும்பிப் பார்த்துத் திடுக்கிட்டோம். குறுக்குக் கம்பியில் ஒரு கிளி!

கேமரா பாபு, "தாங்க் யூ' என்றான். கிளியும் 'தாங்க யூ' என்றது.

கதவைத் திறந்ததும் டாக்டர் தேவேந்திரகுமார், 'வாங்க வாங்க.. ஏன் எட்டு நிமிஷம் லேட்? உள்ள வாங்க... சாயங்காலம் டெல்லி ஃபிளைட்டுக்குப் போகணும்னு சொன்னனில்லை' என்று எங்களை உள்ளே அனுமதித்து "சுலோசனா!" என்று! கூப்பிட்டார்.

டாக்டருக்கு ஐம்பது வயது. தலை வழுக்கையைச் சாமர்த்தியமாக கோல்ஃப் வகைக் குல்லாவினால் மறைத்திருந்ததால் வயது சொல்ல முடியவில்லை. கொடிக்கொம்பு போல விண்ணென்று இருந்தார். தொப்பையின் ஆரம்ப அடையாளங்கள்கூட இல்லை, கண்ணாடிப் பட்டைக்குள் விழிகள் எங்களை ஊடுருவிப் பார்த்தன. வரிசையான பொய்யில்லாத பற்கள், கை குலுக்கியது வலித்தது.

உள்ளே ஹால் முழுவதும் பறவைகளின், மிருகங்களின் படங்கள் இருந்தன. கம்பளத்தில் பொன் கலர் பூனை ஒன்று எங்களை நிமிர்ந்து பார்த்துக் கொட்டாவி விட்டது. சோபாவுக்கு அடியிலிருந்து உள்ளங்கையளவுக்கு நாய்க்குட்டி வெளிப்பட்டு, எங்களைப் பார்த்து ஒரு முறை வள்ளிவிட்டு, 'சிவுக், சிவுக்' என்று உள்ளே ஓடியது.

"பாம்பு கீம்பு இருக்குமோ ?” என்றான் பாபு தயக்கத்துடன்.

"இருக்கு பயப்படதீங்க எல்லாம் பெட்டிக்குள்தான் இருக்குது. பார்க்கறீங்கள?!"

"வேண்டாங்க"

டாக்டர் சிரித்தார். வராந்தாவில் சந்தித்த  கிளி  குறுக்கே.அபத்தமாகப் பறந்து வந்து டாக்டரின் தோளின் வடமேற்கு ஓரத்தில் உட்கார்ந்து "வெர்கம்" என்றது.

"என்ன சொல்லுது?" என்றான் பாபு.

"வெல்கம்ங்கறது நல்லாவரலை!"

"ராதா ராதா" வன்றது கிளி

‘தமிழ் வராதா?’

"அதெல்லாம் இல்லை. நாம் பேசறதுல  கடைசியைத் திருப்பிச் சொல்லும். என்னடா ரங்கா!"

"ரங்கா, ரங்கா"

பாபு சற்று உற்சாகப்பட்டு, உம் பேர் என்னடா? " என்றான்.

'போடா மயிரு' என்றது. நான் பிரமித்து டாக்டரைப் பார்க்க,

"ஷ் ஷ் ஷ் ரங்கா! மறக்க மாட்டியா நீ? எல்லாம் அந்த வேலைக்காரப் பையனை உதைக்கணும். சுலோசனா, இந்த ரங்கனை வாங்கிட்டுப் போ " என்றார் டாக்டர்.

இரண்டு கோப்பைத் தேநீருடன் வந்த டாக்டரின் மனைவி, "வணக்கங்க!' என்று எங்களைப் பார்க்காமல் புன்னகை செய்துவிட்டு. தேநீர்க் கோப்பைகளை முன் வைத்தாள்.

*டாக்டர், உங்களுக்கு?"

“அவர் டீ, காபி எதுவும் சாப்பிட மாட்டாருங்க..' என்று உள்ளே சென்றாள்.

'முருகேசன் பய சொல்லிக் கொடுத்ததை இன்னும் ரங்கன் மறக்கலை!"

*அப்படியா! ரங்கா, அப்படி எல்லாம் சொல்லலாமா நீ?"

'மானிபாணி போடாம் மயிரு'

''பாத்தியா! வெரி வெரி பாட்! இன்னிக்கு இதுக்குப் பழம் கொடுக்காதே அதை எடுத்துக்கிட்டுப் போ!'" போகிறபோது அந்தக் கிளி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க,

டாக்டர், 'ஸாரி என்றார்.

*மிருகங்களைக் கெடுக்கிறதுகூட மனுசங்கதாங்க! வேலைக்காரப் பய ஒருத்தன் சொல்லிக் கொடுத்துட்டுப் போயிட்டான். பிடிச்சுக்கிச்சு!"

"பரவால்லைங்க! அதுக்கு அர்த்தம் தெரியுமா என்ன?' என்றான் பாபு.

"அர்த்தம் தெரியாதுங்க ஆனா கோபம் இருக்குது பாருங்க! தாங்க முடியாது.. அதுக்கு எம் மேல கோபம் காலைல கொஞ்சலைன்னு-இல்லாட்டா அந்த வார்த்தை பேசாது!"

‘அப்படிங்களா?" என்றேன்.

இன்னும் எத்தனை காலையில் கொஞ்சப்படாத கோப ஐந்துகள் உள்ளனவோ என்று வியந்துகொண்டு. சற்றும் உத்தேசமில்லாமல்தான் உட்காரந்திருந்தோம்.

எந்த நிமிடமும் எந்தத் திசையிலிருந்தும் எந்த மிருகமும் பறவையும் வெளிப்படக்கூடும் என்று தோன்றியது. பாபுவுக்கு பாம்பு என்றால் அலர்ஜி கேமராவைப் பக்கத்தில் வைத்துவிட்டு, அதன் தோல் பட்டையைப்

பார்த்தே பயந்துகொண்டிருந்தான். 'முதல்ல போட்டோ எடுத்துரலாமா?"

"என்னை எடுக்காதிங்க பிள்ளைங்களை எடுங்க.  சுலோ நம்ம குப்பனைக் கொண்டுவா"

"குப்பன்கிறது.""

அதற்குப் பதில் சொல்வதற்கு முன்பே பாக்டரின் மனைவி உள்ளேயிருந்து, குரங்குக் குட்டியைப் போல இருந்த.... வெய்ட் எ மினிட்..... குரங்குக் குட்டி இல்லை இது........

“டாக்டர், என்ன இது?’

"தேவாங்கு !  இதெல்லாம்தான் என் குழந்தைங்க எட்டு பூனை, நாலு நாய், ஒரு தேவாங்கு ஆறு அணில் பத்து முயல், நூறு லவ் பரட்ஸ் இந்த வீடே ஒரு *மெனாஜரீ (menagerie)  தான் ஆனா, எல்லாம் சுதந்திரம்தான் சண்டைச் சச்சரவு கிடையாது. கூண்டே கிடையாது பாம்புங்களை மட்டும் தான் மத்தவங்க பயப்படுவாங்கன்னு  பெட்டியில் போட்டு வச்சிருக்கோம் இல்லை கலோ"

'உங்களுக்குப் பயம் கிடையாதாம்மா?" என்றேன் அவர் மனைவியைப் பார்த்து.

"அதுங்க ஒண்ணும் பண்ணாதுங்க நாமதான் பயப்படறோம்".

அவள் தோளில் தொத்தியிருந்த அந்தத் தேவாங்கு டாக்டரைப் பார்த்ததும் அவர் மார்பில் கவலைக்கிடமாகத் தொத்திக்கொண்டது.

பாபு கேமராவை எடுத்து,

'அம்மா, அப்படியே டாக்டர் பக்கத்தில் வந்து நில்லுங்க. இது என்ன தேவ் ஆனந்தா... அதோட....."

"தோவாங்குடா  டேய், உன்னைப் போயி அழைச்சுட்டு வந்தேனே!'

"இதோட ஒரு ஷாட் எடுத்துட்டா நல்லாயிருக்கும்ல அண்ணே" என்றான் பாபு.

கேமராவைத் தவிர மற்ற யாவற்றிலும் பாமரன் ஃபிளாஷ் அடிக்க தேவாங்கு  பாபுவை ஒரு மாதிரிப் பார்த்துப் பல்லைச் சிக்கனமாக, ஹாஸ்யமில்லாமல்  விரித்துக் காட்டியது. உடலில் முக்கால் பாகம் கண்கள்.

''என்ன பத்திரிகைங்க"

* இதயம் பேசுகிறது தீபாவளி மலர்ங்க. உங்களைப் பத்தி எடிட்டர் ரொம்பச் சொன்னார் டாக்டர். பி.எம். கிட்ட ஏதோ விருது வாங்கப் போறீங்களாம்! நீங்க பறவைகள், மிருகங்கள் எல்லாத்திலயும் அத்தாரிட்டி அதுவும் மைக்ரேஷன்ல உலகத்திலேயே முதன்மையானவர்கள்ல  ஒருத்தர். உங்கள் புகழ் பற்றின விவரங்கள்லாம் எனக்குத் தெரியும். ஆனா நாங்க பேட்டிக்கு வந்திருக்கிறது டாக்டர் தேவேந்திர குமார்ங்கிற மனிதரைப் பற்றித் தெரிஞசுக்க!'

'சாப்பிடுங்க!' என்றாள் மனைவி சுலோசன

டாக்டர் மெலிதான புன்னகையுடன், "டாக்டர் தேவேந்திரகுமாரங்கிற மனிதரைப் பற்றின்னா அவ கிட்டதான் கேக்கணும் என்ன சுலோசனா?" என்றார். சுலோசனா'

எங்களைப் பாராமல் பொதுவாகச் சிரித்தாள்

'சொல்லுங்கம்மா!!

அந்தப் பெண்ணுக்கு முப்பத்தி ஆறு வயதிருக்கலாம் அவசரத்தில் அவளைக் கவனிக்க தவறி விட்டான், எப்போதும் வாத்சல்யத்துடன் கணவரையே பார்த்துக்கொண்டிருந்தாள் எங்களுக்குப் பதில் சொல்லும்போதும் கணவரைப் பார்த்துக்கொண்டு நான் பேரினாள்

'இவருக்கு எப்பவுமே வாயில்லா ஜீவன்களோடு  இருந்தாகணும். அதுதாங்க சந்தோஷம்"

'உங்களுக்கு?"

'எனக்கு இதாங்க பிடிக்கும். எல்லா பிள்ளைங்களும் என்னோட பழகிடுச்சுங்க!"

"பாம்பைத் தொடுவீங்களம்மா நீங்க? என்றான் பாபு

"ஏன் தொடாம..?' எடுத்துட்டு வா கலோ"

"அய்யோ அதுக்குச் சொல்லலைகட அப்புறம் வெச்சுக்கலாம்"

நான் காஸெட்டை ஒரு மேஜையில் வைத்து அதை இயக்கி விட்டு "டாக்டர் உங்களுக்கு எத்தனை வருஷமா இந்த மாதிரி மிருகங்கள் பறவைகள் மேல் ஈடுபாடு?"

"எத்தனை வருஷமா அதுங்களுக்கு என் மேல் ஈடுபாடுன்னு கேளுங்க. சின்னப் பிள்ளையிலிருந்தே தெருநாய்ங்கள்லாம் என் பின்னே வாலாட்டிகிட்டு வரும்.  பூனைங்க வந்து கால்ல தேச்சுக்கும் ஆட்டு குட்டி அம்மாவை  விட்டுட்டு.

என்னைப் பார்த்து தயங்கி நிற்கும். என்னவோ தெரியல, அதுங்க பாஷை எனக்குப் புரிஞ்சதோ. என் பாஷை அதுங்களுக்குப் புரிஞ்சதோ...........

"மிருகங்களோட பேச முடியுமா?'

'ஏன் பேசாம? குப்பா, அம்மா கிட்ட போ!' என்றதும், தேவாங்கு திடீர் என்று தாவி சுலோசனாவின் மேல் உட்கார்ந்தது.

"அட" என வியந்தான் பாபு.

'எங்கே அவன் சேரன்? கணக்குப் போடுவான்'

"சேரன்கிறது?"

"நாயி.. சின்ன வயசில எங்க வீட்டுக்கு எதிர்த்த சௌகார் வீட்டுக்கு ஜைன முனிவர் வந்தாரு. என்னைப் பார்த்ததுமே சொல்லிட்டாரு 'மகனே... எங்கூட வா! சரணாலயத்தைக் காமிக்கிறேன். உனக்கு மிருகங்கள், பறவைகள் எல்லாமே அடி பணியும்'னாருங்க. இடையில ஜைன மதத்துக்கு மாறிக்கலாமான்னுகூட யோசிச்சேன் அப்புறம் அது தேவையில்லைன்னு பட்டுது. இதுங்களுக்கெல்லாம் மதம் உண்டா? ஏண்டா?' என்று கீழே வந்து படுத்திருந்த குட்டி நாயைக் கேட்டார். அது தன்னைக் கேட்கிற சந்தோஷத்தில் கண்களில் ஆனந்தம் பொங்க ஒரு மாதிரி கீச்சு சத்தம் பண்ணியது.

“மைக்கிரேஷன்ல நீங்க பெரிய அத்தாரிட்டிங்கிறாங்க “

"அது என்னங்க... மைக்ரேஷ்னை ஸ்டடி பண்றதுக்கு ஒரு வாழ்நாள் போதாது மனுசங்கள்ளாம் பறவைங்க முன்னாடி எந்த அளவுக்குத் துச்சம்னு தெரிய வரும். பாயிண்ட் காலிமர், பரத்பூர்லயே வருவு கணக்கா டேரா போட்டு ரிங் மாட்டி எத்தனை ரிஸர்ச் ! எத்தனை ஸ்டடி!! என்ன சுலோ?"  என்று ஒரு முறை அவளிடம் ஆமோதிப்பை வாங்கிக்கொண்டு தொடர்ந்தார்.

அவர் பேசப் பேச சைபீரிய பறவைகள் குளிர் காலத்துக்குப் பரத்பூர் வந்தன. இங்கிருந்து சில ஆப்பிரிக்கா, பிரான்ஸ் என்று தூர தேசம் சென்றன. சில ஆஸ்திரேலியா போவதும், அலாஸ்காவிலிருந்து மூவாயிரம் கிலோ மீட்டர் 'நான் ஸ்டாப்பாகப் பறந்து ஹவாய்த் தீவுகளுக்கு வருவதும் கதைகதையாக அந்தப் பறவைகள் விரிந்தன.

"இதுங்களுக்கெல்லாம் யாருங்க நாவிசேஷன் சொல்லித் தரங்க யாருங்க இந்த மாதிரி போகணும்னு எங்கங்க சொல்லி வைச்சிருக்காங்க ஆர்க்ட்டிக் டெர்ன்னு (Artic Tern)  ஒரு பறவை வருடத்துக்கு ரெண்டு முறை வட துருவத்திலிருந்து  தென் துருவம் வரைக்கும் பறக்குது. பறவைங்களோட ஓப்பிட்டா மனுசங்க சாதனை பூராவும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தாகூட இல்லளவுதாங்க ' என்று  சைகை காட்டினார்.

'ரிமார்ககபிள் டாக்டர்" என்றேன்.

"அந்தப் பறவைங்களே வேண்டாம்- கலோ. நம்ம சுப்பனைக் கொண்டுட்டு வா. கொண்டு வந்துட்டியா?"  என்றார்

சுலோசனா கொண்டு வந்த பறவை கருந்தவிட்டு நிறத்தில் இறக்கையில் மஞ்சள் தென்பட்டது. உற்சாகமாகப் பறந்து சிதறிய போது  இறக்கையில் வெண் பட்டை கொஞ்சம் தெரிந்தது. இது என்ன பறவை சொல்லுங்க" என்றார் டாக்டர்.

"விசிலடிச்சான் குஞ்சா ஸார்?' என்றான் பாபு பிரகாசமாக.

நான் அதட்டிணேன்.

*ரொம்ப சாதாரணமா நாம் எல்லாரும் பார்க்கக் கூடிய பறவை மைனா! இத பாருங்க...'

பறவையை சுலோசனா கையில் ஏந்தி வர, அதை வாங்கிக்கொண்டு அதனருகில்  உதட்டைக் காட்டி, 'டிகீக் கீக்' என்றார். அது பதிலுக்கு 'கோக் கோக்' என்றது. டாக்டரும் மைனாவும் சுவாரஸ்யமாகச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததை பாபுவும் நானும் புரியாமல் வியந்து கொண்டிருந்தோம்.

"ரொம்ப ஃப்ரெண்ட்லி! ரொம்ப ஃப்ரெண்ட்லி! டேய் ஒரு முத்தா கொடு' என்றதற்கு,

அது உடனே பணிந்து டாக்டரின் உதட்டைச் சின்னதாகத் தொட்டுக் காட்டியது. 'ஆன. பொறாமைனா இவனுக்கிருக்கற பொறாமை!"

சுலோசனா அந்தக் கெட்ட வார்த்தைக் கிளியைக் கிட்டே கொண்டு வர, உடனே சுப்பன் எனப்பட்ட மைனா 'ராடியோ, ராடியோ என்று திட்டுவதுபோலச் சத்தம்  போட்டது. தலையசைப்பதும் வேடிக்கையாக இருந்தது

"எப்படி? இதுங்க எல்லாத்துக்கும், எல்லா அசைவுக்கும் பாஷை இருக்குதுங்க... ஆசாபாசங்கள் இருக்குதுங்க ஆனா, துரோகம் கிடையாது. கூழை புத்தி கிடையாது! குள்ள நரியைப் போயி தந்திரக்காரன்னு சொல்றாங்களே. எங்கிட்ட ஒரு குள்ள நரி வெச்சிருந்தேன் பேப்பர் பொறுக்கிக்கிட்டு வரும்.

* படிக்கவும் செய்யுங்களா?" என்றான் பாபு அசம்பாவிதமாக.

'படிக்காதுங்க! இதுங்களுக்கெல்லாம் படிப்பு தேலையில்லை. அதெல்லாம் வந்துதானே எல்லாத்தையும் கெடுத்து வச்சிருக்கோம்!"

பாபு கலர் ஃபிலிம் லோடு பண்ணிக்கொண்டு தோட்டத்துக்கு வரச் சொன்னான். சுலோசனா புடைவை மாற்றிக்கொண்டு வர, தோட்டத்துக்கு வந்தோம். எனக்குச் சற்று அச்சமாகத்தான் இருந்தது. எங்கேயாவது 'தொப்புள்ளான் என்று பெயர்கொண்ட பாம்பை உருவப் போகிறாரோ என்று அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். பாபு அதற்கு மேல் பயப்பட்டான், தோட்டத்தில் வெயில் நிறையவே இருந்தது. சுலோசனா ஒரு பக்கத்திலும், மான் மறுபக்கத்திலுமாக டாக்ரைப் போட்டோ எடுத்தான் சுலோசனா "நான் பாம்பு கொண்டு வரவா? என்று கேட்டாள்

பாபு தீர்மானமாக மறுத்துவிட்டான் 'எனக்குக் கை கொஞ்சம் ஷேக் அடிக்கும். வேற போட்டோகிராபரை அனுப்பிக்கலாம்!' என்றான்.

"டாக்டர், நீங்க ஃப்ளைட்டைப் பிடிக்கணுன்னீங்களே?'

"ஆம். வண்டி வந்துரும் இப்ப"

'ரொம்ப தாங்ஸ் டாக்டர் என்றேன் . "உங்கபயோடேட்டா எந்த இயர் புக்லயும் இருக்குது. ஆன, இன்னிக்கு நேர்ல பார்த்துச் சந்தித்தது எங்களுக்கு வேறு அனுபவங்க!"

"போயிட்டு வாங்க, பேட்டியில் ஒண்ணை மட்டும் முக்கியமா போடுங்க! என் வெற்றிக்கு முக்கியமான காரணம் என் வாழ்க்கையில் சுலோசனாதான்" மனைவியை அணைத்துக் கொண்டபடி

"இவளுடைய  ஒத்துழைப்பில்லேன்னா என்னாலே எதுவுமே சாதித்திருக்க முடியாது"

"நான் என்னங்க செய்துட்டேன் உங்களுக்குப் பிடிச்சது எனக்கும் பிடிச்சுப் போச்சு!"

"என்னைப் போலவே அவளுக்கும் மிருகங்கள் மீது  ரொம்ப நேசம்"

*அதுங்களை நாம நேசிக்கலைன்னா வேற யாருங்க?"

ஃபிளைட்டுக்கு அழைத்துச் செல்ல கார் வந்து நிற்க, டாக்டர் என்னைக் கூப்பிட்டுத் தன் உள்ளங்கையைக் காட்டினார். பேனாவால் சிலுவை ஒன்று சின்னதாக வரைந்திருந்தது. 'பாத்திங்களா (SPCA) யோட நீலச் சிலுவை இது! எனக்கு ஞாபகப்படுத்திக்க தினப்படி கையிலே வரைஞ்சுப்பேன்.'

*டாக்டர். உங்க ரெண்டு பேரையும் சந்திச்சது எங்களுடைய பாக்கியம்னுதான் சொல்லணும்!' சுலோசனானைப் பார்த்து, 'உங்க ரெண்டு பேர் மாதிரி அண்டர்ஸ்டாண்டிங் உள்ள தம்பதிகளை நான் பார்த்ததே இல்லேம்மா' என்றேன்.

'அதை எழுதுங்க' என்று காருக்குள் நுழைந்தார். . திரும்ப நானும் பாபுவும் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்தபோது பாபு,

'சுலோசனாலை டெலிலென்ஸ் போட்டு அவள் அறியாம ஒண்ணு எடுத்துட்டேன் டாக்டருக்குக் கொஞ்சம் யங்காதான் இருக்கா, சுவனிச்சியோ?" என்றான் "காஸெட் தீர்ந்திடும்னுட்டு........டேய் பாபு காஸெட்!  காஸெட்டை அவங்க வீட்டு சோபாவிலேயே விட்டு விட்டு வந்துட்டோம்"

"இல்லைடாட்டேப்ரிக்கார்டையும் விட்டு வந்தாச்சு, மணியன் கிட்டயிருந்து ஓசி ! வண்டியைத் திருப்பு, பரவாயில்லை,'

"சரியாப் பேச்சு மறுபடி கிளியா?"

மறுமுறை அந்த வீட்டுக்கு வந்து மணிப் பொத்தானை அழுத்தியதும் கலோசனாதான் கதவைத் திறந்தாள்.

"டேப் ரிக்கார்டரை விட்டுட்டுப் போயிட்டீங்களே, போன் பண்ணலாம்னா நம்பர் தெரியல" .

"ரொம்பா தாங்க்ஸ். ஸாரி,  தோட்டத்திலிருந்தே கிளம்பிட்டோம்மா",

"பரவாயில்லைங்க பேட்டி எப்ப வரும்?"

"தீபாவளி மலரை படிச்சுப் பார்த்துட்டு எழுதுங்க என்ன?'

"அதெல்லாம் படிக்கமாட்டருங்க மிருகங்கள், பறவைகளைப் பத்தின புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் வீட்டில சேர்க்கக்கூடாது".

"அப்படியா ஆச்சரியமா இருக்குதுங்க !!"

"இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்குதுங்க"

"சொல்லுங்க"

"அதெல்லாம் பேட்டில வர வேண்டாம். வந்துச்சுன்னா கொன்னு போட்டிருவாரு புகழ். பிரபலம் இதுக்கெல்லாம் யாராவது ஏதாவது தியாகம் பண்ணித்தான் ஆகணும்" என்று பயத்துடன் சிரித்தாள்.

போகிற போது மறுபடி அந்தக் கிளி "போடா மயிறு" என்றது.

பாபு, "இந்தக் கிளியைக் கொஞ்சம் அடக்கினா தேவலை எங்க வேலைக்காரப் பையன் கெட்ட வார்த்கை கத்துக் கொடுத்துட்டான் . பிடிச்சுகிடுச்சுன்னு டாக்டர் சொன்னாரு"

"இல்லிங்க.. நான்தாங்க கத்துக் கொடுத்தேன்' என்று அந்தக் கிளியை எடுத்துத் தடவிக் கொடுத்து, உள்ளே பறக்க விட்டுக் கதவை எங்கள் மேல் சாத்தினாள்,

No comments:

Post a Comment