Thursday, July 21, 2022

விஜயாஸனர் திருக்கோவில்

 

*🕉️🙏 இன்றைய கோபுர தரிசனம் 🙏🕉️*

*🕉️🙏ஓம் நமோ நாராயணாய நம🙏🕉️*

*🕉️🙏நவ திருப்பதிகளில் இன்று...*

*🕉️அருள்மிகு வரகுண மங்கை , (வரகுண வல்லி) தாயார் உடனுறை விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோவில்🕉️*

🔆வரகுணமங்கை (நத்தம்),
தூத்துக்குடி மாவட்டம்

*தலம் : சந்திரன்*

*🔆திருவரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோவில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது, பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோவிலும் ஒன்றாகும், நவதிருப்பதியில் இது 2-வது திருப்பதி. வரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோவில் என்றழைக்கப்படும் இந்தத் திருக்கோவில், நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தலம் ஆகும்*

*🔆 வரகுணமங்கை என்று சொல்லுவதை விட, ‘நத்தம் கோவில்’ என்று கேட்டாலே பொதுமக்கள் எளிதில் அடையாளம் காட்டுகிறார்கள்*

*🔆வரகுணவல்லி, வரகுணமங்கை என்ற இரு தாயார்கள் பெருமாளுடன் உள்ள தலம் இதுவாகும்,அவர் பெயராலேயே ஸ்ரீ வரகுணமங்கை என்று ஊருக்கு பெயர் அமைந்துள்ளது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டத் தலம் இது!அதுவும் ஒரே ஒரு சொல்லால் மங்களாசாசனம் செய்துள்ளார்*

*🔆 அக்னிக்கு இந்தப் பெருமாள் காட்சி தந்து அருள்புரிந்த தலம், தேவ புஷ்கரணி, அக்னி தீர்த்தம் என இரு தீர்த்தங்களைக் கொண்ட தலம். இந்தத் தலத்தில் பெருமாள் விஜயகோடி விமானத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் அமர்ந்து அருள்புரிகிறார்*

*🔆பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். பெருமாளுக்கும், நரசிம்மருக்கும் ஏலக்காய் மாலை சமர்ப்பித்து வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை🙏🕉️*

No comments:

Post a Comment