மௌனம் பேசுகிறது
ஹோட்டல் போய் அமர்ந்து இரண்டு இட்லி ஒரு ஸ்பெஷல் தோசை ஆர்டர் பண்ணிட்டு சுத்தி பார்த்தான் ரமணன்....
செம கூட்டம்....சர்வர்கள் பம்பரமாக சுழன்று வேலை செய்றாங்க.... அப்படியே பக்கத்தில் பார்சல் போடுற டேபிள் ..அதில் வேகமாக லாவகமாக பார்சல் போடும் பெண்மணி... உதவி செய்த இளைஞன் கண்ணில் பட்டார்கள்....
பக்கத்தில் என்பதால் இட்லி ஹாட்பேக்... கொழுக்கட்டை ஹாட் பேக்...வடைகள்.... தேங்காய் சட்னி தூக்கு.... வெங்காயச் சட்னித்தூக்கு....சாம்பார் வாளி....அழகாக அடுக்கி வைத்திருந்த கவர்கள்.....வட்டமாக நறுக்கி வைக்கப்பட்டிருந்த வாழை இலைகள்... தொங்கின நூல் கண்டு..... எல்லாம் நல்லா தெரிந்தது..
அந்தம்மா பேப்பரில் இலை வைத்து கேட்பதற்கு தக்க இட்லி வைத்து மடிப்பதற்குள்....பக்கத்தில் இருந்த இளைஞன் சின்ன கவர்களில் சட்னிகள்.. சாம்பார் ஊத்தி கட்டி ரெடியாக வேகமாக வைத்தான்....
குறிப்புணர்ந்து வடை அல்லது கொழுக் கட்டை என்றால் சட்னி மட்டும்...இட்லினா எல்லா சட்னி சாம்பார்....இட்லிக்குத்தக்க பெரிய கவர்கள் என வேகம் ...ஆனால் மௌனமாக....
அந்த பையனுக்கு காது கேட்காது பேச முடியாதென்பதை உணர ரமணாவிற்கு ஐந்து நிமிடமானது...
பேச்சியம்மாவிற்கு சீக்கிரம் சில்லரை கொடுத்தணுப்புங்க பாவம் பஸ் போயிடும்......மோட்டர் ரொம்பிடுச்சு ஸ்விட்ச் ஆஃப் பண்ணு.....இட்லி எடுத்துட்டு வா.....
இப்படி பரபரப்பா பேசிக்கிட்டிருக்கும் அந்தம்மா....
பக்கத்திலிருக்கும் இளைஞனிடம் 5....2...8...... என சிரித்த முகமாக இட்லி வடை கொழுக்கட்டை காட்டி சட்னி வைக்க அளவுக்கு சைகையால் உணர்த்துவதைப் பார்த்த ரமணாவிற்கு கண்ணீர் வடிந்தது....
எவ்வளவு கூட்டம்... எவ்வளவு பிஸி... எவ்வளவு டென்ஷனா வேலை பார்க்கும் இடத்தில் அந்த இளைஞனிடம் குறிப்பால் வேலை வாங்கினாலும் சிரித்த முகம் மாறாமல் சைகை காட்டும் கனிவு...
தன்னை நினைத்து வெட்கி வேகமாக சாப்பாட்டை முழுங்கி விட்டு...... காஜூகத்லி.... பக்கோடா.... கொழுக்கட்டை என மனம் போல் வாங்கி சிரித்தபடி வீட்டிற்கு போனான்.....
மணி 8..... கண்ணில் பயத்துடனும் நீருடனும் கதவைத்திறந்த மனைவி கையில் எல்லாம் கொடுத்து .....
சாரிமா....சாரிமா..என்னை மன்னித்து விடு.....இனி கோபப்பட மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டதும்மல்லாமல் தட்டு எடுத்து வைத்து மனைவியை அமர வைத்து பரிமாறினான்.....
மல்லிக்கு ஒன்றும் புரியவில்லை.... சாயந்திரம்..ரமணா ஆபிஸில் பிரமோஷன் கிடைத்துள்ளதை ஆர்வமாகப் சொல்ல .,...மல்லி கேட்டு புன்னகையோடு ஸ்வீட் பரிமாறினால் ....
எவ்வளவு பெரிய விஷயம் சொல்லி யிருக்கேன்....
வாயைத் திறந்து பேசேன்.... உனக்கு சந்தோஷமாக இல்லையா என ரமணா கத்த.....
....வியாழன் காலை 8....முதல் .இரவு 8 மணி வரை மௌனவிரதம் .....உபவாசம்.....
8 மணிக்கு மேல் பேசறேன் என எழுதிக் காட்ட.....
நீயும் உன் விரதமும் என சட்டுனு கோபப்பட்டு...... நான் ஹோட்டல் போய் சாப்பிட்டுக்கறேன்....சந்தோஷமா வீட்டுக்கு வந்தா ....விரதம் கிரதம்னு.. கோபத்தோடு.. கிளம்பின கணவன்.....கையைப்பிடித்து இழுத்தும் ..கையெடுத்து கும்பிட்டும்... தடுத்தாலும் தள்ளிவிட்டு.,.வெளிய போன மனுஷனுக்கு....இப்ப என்ன ஆச்சு ......திடீர் ஞானோதயம்.....யோசித்தாள் மல்லி....
காது கேட்காத பேச முடியாத இளைஞனை வேலைக்கு வைத்ததே பெரிய விஷயம்....அதிலும் அந்த இளைஞன் மனம் நோகாமல் சிரித்த முகத்துடன் குறிப்புணர்த்தி சைகையில் வேலை வாங்கும் அந்த அம்மாவின் நல்ல குணம் எங்க....
வாரம் ஒரு நாள் பச்சைத் தண்ணீர் குடிக்காம .....சாப்பிடாம....பேசாம ....கணவன் நல்வாழ்விற்காக தன்னை வருத்தி விரதமிருக்கும் மனைவியையே காயப்படுத்திய தான் எங்கே என வெட்கி வருந்தினான்.......ரமணா
மனைவி மனதுக்குப் பிடித்ததெல்லாம் வாங்கிவந்து சாப்பிடவைத்து.....மன்னிப்பு கேட்டு ....தப்பை உணர்ந்து....
இனி அன்பான கணவராக இருப்பான் என்று நம்பிக்கையை மல்லி மனதில் ஏற்படுத்தினான் ரமணா.......
அந்த மீனாட்சி பவனில் ..... சிரித்த முகத்தால் மௌனத்தை உணர்த்திய அம்பிகைக்கு மனதார நன்றி சொன்னான் ரமணன்.....
நன்றி ஸ்ரீமதி வைகுண்டம்
No comments:
Post a Comment