இன்றைய கோபுர தரிசனம்🙏🏻🙏🏻
*பத்மாவதி கோயில்* அல்லது
*அலர்மேல் மங்கை கோயில்*
மும்மூத்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமான வெங்கடாசலபதியின் துணைவியான பத்மாவதி தேவி எனும் அலர்மேல் மங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பத்மாவதி தாயார் எனும் அலர்மேல் மங்கை ஆவார். இக்கோயில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதிக்கு அருகே 4 கிமீ தொலைவில் உள்ள திருச்சானூரில் உள்ளது. இக்கோயில் நிர்வாகம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ளது. இக் கோயிலின் கட்டிடம், திராவிடக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. இக்கோயிலில் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடக் கல்வெட்டுகள் உள்ளது.
இக்கோயிலின் புண்ணிய தீர்த்த குளத்திற்கு பத்மாவதி தீர்த்தக் குளம் என்பர். இக்கோயிலின் முக்கிய திருவிழாக்கள் பத்மாவதி தீர்த்தப் பிரம்மோற்சவம்
மற்றும் வரலட்சுமி விரதம் ஆகும்.
No comments:
Post a Comment