Wednesday, July 27, 2022

உப்புமா பொட்டலங்கள்

 *"உப்புமா   பொட்டலங்களை   பெரியவா கொடுக்கச்   சொன்னா!"*                                                                      திருவாரூரிலிருந்து    சில பக்தர்கள்    ஸ்ரீ மடம்  வந்தார்கள்...  பெரியவா  தரிசனம்   செய்து  விட்டு   கிளம்பினார்கள்.. 

போகும்   போது  ஒரு  அம்மா, "வழியில்  எதுவும்   சாப்பிட  முடியாது ;  பழம்   ஏதாவது   வாங்கிக்கலாம்"  என்று  சொல்லி   வாங்கிக்  கொள்கிறார்கள். 

ரயில்  கிளம்பப்   போகிற  சமயம்...  பிளாட்பாரத்தில்   ஒருவர்,  "திருவாரூர்க்காரா   எங்கே   இருக்கா?"  என்று கத்திக்   கொண்டே   வருகிறார். 

அட!  ஸ்ரீ கண்ட  மாமா   கையில்   பொட்டலங்களுடன்    ஓடி  வருகிறாரே  என்று    திருவாரூர்க்காரர்கள்    திகைக்கிறார்கள்.. 

"உப்புமா   பொட்டலங்களை   பெரியவா கொடுக்கச்   சொன்னா! "   என்று  ஓடி வந்தவர்   மூச்சிரைக்க   அவற்றைத்  தருகிறார்.. 

பெரியவா   கருணையினை   கண்ட பக்தர்கள்    கண்களில்  கண்ணீர்  வழிய நமஸ்காரம்   செய்தனர்.... 

கல்லினுள்  உள்ள  தேரைக்கும்  படியளக்கும்    சங்கரர்  நம் பெரியவா...

No comments:

Post a Comment