நல்லெண்ணெய், பட்சணம், பட்டாசு எல்லாம் கொண்டு போய்க் கொடுத்துட்டு வாங்கோ… சட்டுனு போங்கோ!’
(இரண்டு சம்பவங்கள்)
சொன்னவர்-பாலு.
அதுவொரு தீபாவளி சமயம்! எல்லோரும் புடவை, வேஷ்டி எல்லாம் கொண்டு வந்து தேனம்பாக்கத்தில் அவரிடம் கொடுப்பார்கள். அங்கே கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு தொட்டி உண்டு. அதில் ஜவுளி வகையறா எல்லாவற்றையும் போட்டு மூடி வைத்துவிடுவோம்…”
”குண்டு-ன்னு ஒரு பையன்… 18, 19 வயசு இருக்கும். இங்கே எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தான்.
பெரியவாளுக்கு அவன் மேல ரொம்பப் பிரியம். ஒரு நாள் காலம்பர எங்களை யெல்லாம் கூப்பிட்டுத் தொட்டியைக் காட்டினார். தொட்டி காலியாக இருந்தது; உள்ளே ஜவுளி எதுவும் இல்லை. எப்படி அத்தனையும் மாயமா மறைஞ்சு போச்சுன்னு எங்களுக்குத் தெரியலை. மகா பெரியவா எங்களைக் கூப்பிட்டு, நிறைய பட்சணம்லாம் வாங்கிட்டு வரச் சொன்னார். தீபாவளி அன்னிக்கு எண்ணெய் ஸ்நானம் பண்ண எண்ணெய் வேணுமே… அதையும் வாங்கிட்டு வரச் சொன்னார். எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. பட்சணம், நல்லெண்ணெய் வந்து சேர்ந்தது. பட்டாசு வேணும்னு சொன்னார் பெரியவா. அதுவும் வந்தாச்சு!
எல்லாவற்றையும் வாங்கி வைத்துக் கொண்டு, ‘இங்கே வேலை செய்றானே ஒரு பையன் குண்டுன்னு… அவனுக்கு வெறுமனே வேட்டியும் புடவையும் இருந்தா போறுமா, தீபாவளி கொண்டாட?! அதை மட்டும் வெச்சுண்டு, பாவம் அவன் என்ன செய்வான்? நல்லெண்ணெய், பட்சணம், பட்டாசு எல்லாம் கொண்டு போய்க் கொடுத்துட்டு வாங்கோ… சட்டுனு போங்கோ!’ என்றார் பெரியவா.
அப்புறம்தான் எங்களுக்கு, புடவை- வேஷ்டிகளை எல்லாம் எடுத்துண்டு போனது குண்டுதான்னு தெரிஞ்சுது. ஆனா, பெரியவாளுக்குத் துளிக்கூட அவன் மேல கோபம் வரலை!” என்ற பாலு, சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்…
___________________________________________
“பெரியவாளுக்கு ரொம்பநாளாஒருஆசை…
முக்குறுணிக்கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு…” என்றவர், அது பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
”மதுரை, திருச்சி, ராமேஸ்வரம்னு சில தலங்களில் முக்குறுணிப் பிள்ளையார் உண்டு. முக்குறுணின்னா… ஆறு படி அளவு. பெரியவா அரிசி அரைச்சுட்டு வரச் சொன்னார். பிரம்மசாரி ராமகிருஷ்ணன் கிட்ட ஐம்பது தேங்காயை உடைச்சு துருவிக் கொண்டுவரும்படி சொன்னார். பூரணம் பண்ணி ஒரே கொழுக் கட்டையா செய்யணும். பெரியவா ஆலோசனைப்படி எட்டு முழ வேட்டியில் கட்டி, வரதராஜ பெருமாள் கோயில்ல இருந்து பெரிய அண்டா கொண்டு வந்தோம். அன்னிக்கு காலைலேர்ந்து சாயங்கால வரைக்கும் கொழுக்கட்டை வெந்தது.
சரி… பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணுமே
கொழுக்கட்டையை பெரியவா முன்னாடி வைத்ததும்… ‘தேனம்பாக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அங்க வாசல்படியில் வெச்சுட்டு வந்துடுங்கோ’ன்னார் பெரியவா. பக்தர்களும் அப்படியே செஞ்சாங்க. அங்க என்னடான்னா… கோயில் வாசல்ல பெரிய மூட்டை கணக்கா இருந்த அண்டாவைப் பார்த்ததும், ஊர் ஜனங்க என்னவோ ஏதோன்னு பதறிட்டாங்க. அப்புறமா, அது பிள்ளையாருக்கான நைவேத்தியம்னு தெரிஞ்சதும், கட்டைப் பிரிச்சிருக்காங்க. உள்ளே பிரமாண்டகொழுக்கட்டை!
எல்லாருமா பிரிச்சு சாப்பிட்டதுக்குப் பிறகு, ‘சாமி,கொழுக்கட்டை நல்லா இருந்தது’ன்னு பெரியவாளை நமஸ்காரம் பண்ணினாங்க. பெரியவாளுக்கோ,பிள்ளையாருக்கு நைவேத்தியம்
பண்ணணும்கற ஆசை நிறைவேறியதோட, ஜனங்களுக்கு அந்தக்கொழுக்கட்டையைத் தின்னக் கொடுத்த திருப்தி!” என்ற பாலு
Jaya Jaya shankara hare hare shankara
No comments:
Post a Comment