குச்சனூர் - சனீஸ்வர பகவான்.
*************************************
ஆடி சனிக்கிழமை
**********************
தமிழகப் பெருங்கோவில்களில் சனீஸ்வர பகவானை உபசந்நிதியிலேயே காண முடியும். ஆனால், இங்கே அப்படியல்ல!
சனீஸ்வர பகவான் தலை நாயகனாக மும் மூர்த்தியாக மற்ற தெய்வங்களோடு இணை இல்லாமல் தனிப்பெருந்தெய்வ மாக நின்று விளங்கும் திருத்தலம் ‘குச்சனூர்’ ஆகும்.
சனீஸ்வர பகவானே இங்கு மூலவர். ‘குச்சனூரான்’ என்ற திருப்பெயரும் பேச்சு வழக்கில் இங்கே வழங்கி வருகின்றது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபி நதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் குச்ச னூர் எனுமிடத்தில் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.
🌷தலவிருட்சமும் - மூலஸ்தானமும்
மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுயம்பு வாகத் தோன்றியவர். கருநிறமுடன் லிங்க வடிவில் தோற்றம். உடன் உற்சவ மூர்த்தி யும் உள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை உற்ச வர் பவனி வருவார்.
முப்பெரும் தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் சேர்ந்து இருப்ப தால் (ஐக்கியமாகி இருப்பதால்) மூலவரு க்கு ஆறு கண்கள் இருக்கின்றன.
அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சன க் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.
திருக்கோவிலின் வளாகத்தில் வினாயக பெருமான், முருகன் சந்நிதிகள் உள்ளன. உட்புறமாக லாடசந்நியாசியின் கோயில் உள்ளது. வாய்க்கால் கரையில் சோணை கருப்பனசாமி கோவில் உள்ளது.
அதற்குப் பக்கத்தில் கன்னிமார் கோவிலு ம், நாகர் கோவிலும் உள்ளன. மூல ஸ்தானத்திற்கு பின்புறம் விடத்தலை மரம் உள்ளது. விடத்தலை மரம் ஸ்தல விருட்சமாகும்.
🌷காகத்திற்கு முதல் மரியாதை
நாள்தோறும் முக்கால பூஜைகளும் தவ றாமல் நடைபெறுகிறது. பூஜை முடிந்த பின் தளிகை காகத்திற்கு வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அன்றைய தினம் தடையாகக் கருதி மீண்டும் பூசாரிகள் மன்னிப்புக் கேட்டு மீண்டும் காகத்திற்கு தளிகையை வைப்பர்.
தளிகையை காகம் உண்டபின்தான் பக்தர் களுக்கு பரிமாறப்படும். இது மிகவும் சிறப்பானது. தவிர, சனி பகவானுக்கு உகந்தது என எள் பொங்கலும் வைக்கப்படும்.
🌷சனிப்பெயர்ச்சியும் - ஆடித்திருவிழாவும்
சனிப்பெயர்ச்சி தினம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடிமாதம் சனிக்கிழமை தோறும் உற்சவகாலம் சிறப்பாகக் கொண் டாடப்படும். மூன்றாம் சனிக்கிழமை மிகவும் பிரசித்தமாகும்.
அன்று கம்பளத்தார் மேல்ப்பூலாநந்தபுரம் ஊரைச் சேர்ந்தவர்கள் ஆட்டம் ஆடி கோவி லில் சிறப்பு பூஜை செய்வார்கள். இந்த திருக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் ஆளுகைக்கு உட்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
🌷தலவரலாறு
செண்பகநல்லூர் என்ற பகுதியைசேர்ந்த அரசன் தினகரன் குழந்தைப் பேறின்மை யால் அவதிப்பட்டான். குழந்தைக்காக இறைவனிடம் வேண்டிவந்தான். கோயிலி ல் அவனுக்கு அசரீரி ஒன்று கேட்டது.
அந்த அசரீரியில் அவனது வீட்டிற்குப் பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வளர்த்து வர வேண்டும் என்றும், அதன் பிறகு அரசனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது.
அசரீரியில் சொன்னபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் அவனிடம் வந்து சேர்ந்தான். அந்த மன்னனும் அந்தச் சிறுவனுக்குச் சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான்.
அதன் பின்பு, அசரீரியில் சொல்லியபடியே அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அரசனும், அரசியும் அந்தக் குழந்தைக்குச் சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர்.
இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரிய வர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். சதாகன் அப்படி இருக்கவில்லை.
இதனால், அரசன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனையே அரச னாக்குவது என்று முடிவு செய்து அவனுக் கே முடிசூட்டினான்.
🌷அரசனுக்கு சனி
இந்நிலையில் அரசன் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. இதனால் தினகரன் பெரும் துன்பத்திற்கு ஆளானான். தந்தை யின் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென் று இரும்பால் சனியின் உருவத்தை படை த்து வழிபடத் தொடங்கினான்.
அவனது வழிபாட்டால் மன மிறங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றி, “மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்க ளின் முற்பிறவிப் பாவ வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது.
பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன.
இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு, நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும்” என்று கூறினார்.
🌷தந்தையின் தோஷம் ஏற்ற மகன்
சந்திரவதனன் தனது தந்தையின் துன்பத் தைக் குறைக்கும்படி வேண்டினான். சனீ ஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகை காலம் சனி தோஷம் பிடிக்கும் என்றும், அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும்.
அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக் க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவ தனனும் சம்மதித்தான்.
சனீஸ்வர பகவான் அளித்த துன்பங்களை யெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதன னின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான், இந்த ஏழரை நாழிகைக் கால சனி தோஷம்கூட சந்திரவதனனின் முற் பிறவியின் வினைகளுக்கேற்பதான் வந்த தாகவும் இனி யாருக்கும் எக்குறையும் இருக்காது என்றும் உறுதியளித்தார்.
உடனே சந்திரவதனன் சனீஸ்வர பகவானி டம், சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்க ளை அத்துன் பத்திலிருந்து மீட்க அங்கே யே எழுந்தருள வேண்டினான். சனீஸ்வர னும் அக்கோரிக்கையை ஒப்புக்கொண்டு, அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றினார்.
சந்திரவதனன், சுயம்பு வடிவிலான சனீஸ் வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற் குக் குச்சுப்புல்லால் கூரை அமைத்தான்.
அதன் பிறகு செண்பகநல்லூர் என்றிருந்த ஊர் குச்சனூர் என்று பெயர் மாற்ற மடை ந்து விட்டது. அதன் பிறகு, சனி தோஷம் பிடித்துத் துன்பப்படும் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுத் துன்பம் நீங்கிச் செல்கின்றனர்
சங்கடம் தீர்க்கும் சனி பகவான் திருவடி போற்றி போற்றி...🙏🙏🙏
No comments:
Post a Comment