இன்று முதல் ஆரம்பம்
எளிய தர்ப்பண பூஜை முறைகள் : பகுதி - 1
அன்று நிறைந்த ஆடி அமாவாசை தினம். கும்பகோணம் சக்கரப் படித்துறையருகே அமைந்துள்ள ஸ்ரீ பெருமாள் கோயிலில் பரம்பொருளாம் ஸ்ரீ ஆதி சிவனின் பூர்ணாம்ச அவதார மூர்த்தியாம் ஸ்ரீஅகத்தியப் பெருமானும், அவர் தம் அருமைச் சீடர்களும் அமர்ந்து இருக்கின்றனர். அப்புனித நாளுக்குரித்தான ஜபம், பூஜை. தியானம் மற்றும் தர்ப்பணங்களைத் தங்கள் குருநாதரின் முன்னிலையில் செய்து முடித்த மன மகிழ்ச்சியும், நிறைவும் சீடர்களின் முகத்தில் தாண்டவமாடுகிறது.
போகர் : ''சற்குரு மஹாதேவா! எந்த ஒரு நற்காரியத்தையும் குருநாதர் முன்னிலையில் செய்யும்போது அதன் பலனை அளவிடவே முடியாது என்று தாங்கள் ஏற்கனவே அருளியுள்ளீர்கள். இந்நன்னாளில் தங்கள் கருணையால் தாங்கள் உடனிருந்து அனைத்து பூஜைகளையும் செய்யும் பேறு பெற்றோம். நாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள்!"
ஸ்ரீஅகஸ்தியர் : 'ஆம், சீடனே! எல்லாம் இறைவனின் கருணை!"
போகர்: ''ஆனால், குருதேவா! தற்காலத்தில் மக்கள் இதுபோன்ற புனித நாட்களில் செய்யவேண்டிய பூஜை. தர்ப்பணம் போன்ற வழிபாடுகளைச் செய்வதில்லையே."
ஸ்ரீஅகஸ்தியர் : ''இவற்றை மட்டுமா, கலியுக மக்கள் எத்தனையோ இறை விஷயங்களை, நித்ய வழிபாட்டு முறைகளை மறந்துவிட்டனரே! 'கண்டதே. காட்சி, கொண்டதே கோலம்' என்று மனம்போனபடி வாழ்வை நடத்திச் சென்று கர்ம வினைகளை மூட்டை மூட்டையாகச் சேர்த்துக் கொண்டது தான் மிச்சம்."
போகர் : ''கலியுக மாந்தர் அறியாமையால் அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடப்பதைப் பொறுத்தருளி, அவர்கள் நல்வாழ்வு வாழத் தேவையான விளக்கங்களைத் தந்தருள வேண்டுகிறோம். குருதேவா!"
ஸ்ரீஅகஸ்தியர் ( சிரித்துக் கொண்டே) : "புரிகிறது. எனதருமைச் சீடனே! கலியுக மக்களுக்காக இந்நன்னாளில் ஏதேனும் பெற்றுத் தர வேண்டும் என விரும்புகிறாய் போலும்! ஒவ்வொரு கணப்பொழுதும் பிறர் நலனையே கருத்தில் கொண்டவனாயிற்றே நீ! சரி, கேட்க விரும்புவதைக் கேள்!"
தர்ப்பண பூஜைகள் முக்கியமே !
போகர் : 'இன்றைய உலகில் மனிதர்களுக்குப் போதிய உடல் ஆரோக்கியமோ, மன வலிமையோ இல்லை. ஒவ்வொரு மனிதனும் காலை எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை பலதரப்பட்ட பிரச்னைகளை தினந்தோறும் சந்திக்க வேண்டியுள்ளது. ஒருவருக்கொருவர் பிரச்னைகளின் வகைகள்தான் மாறுபடுகின்றனவே தவிர, பிரச்னைகள் இல்லாத மனிதனே இல்லை. பூவுலகில் அனைத்து மாந்தரும் பிரச்னைகளில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருப்பதன் காரணத்தை அறிய விரும்புகிறோம். குருதேவா!"
ஸ்ரீஅகஸ்தியர் : "ஒரே வரியில் உனக்கு பதில் அளிக்கிறேன். கலியுகத்தில் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூல காரணம் தங்களுடைய முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பித்ரு தர்ப்பண நீத்தார் கடன் பூஜைகளை முறையாகச் செய்யாததே."
புலிப்பாணி : 'கேட்கவே வியப்பாக இருக்கிறதே. குருதேவா! பித்ரு தர்ப்பண பூஜைகள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையா?''
ஸ்ரீஅகஸ்தியர் : ''ஆம், எனதருமைச் சீடனே! பூவுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய இந்த மானிட வாழ்வுக்குக் காரணமான தனது பித்ருக்களை முறையாக வணங்கி அவர்களுக்கு உரித்தான தர்ப்பணங்களையும், தான தருமங்களையும் செய்தே ஆக வேண்டும். இதற்கு விதிவிலக்கே கிடையாது."
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் சுடராம் திருஅண்ணாமலையாரே வல்லாள மஹாராஜாவுக்குத் தர்ப்பண பூஜைகளை நிகழ்த்துகின்றார் என்றால் சாதாரண மனிதன் எவ்வளவு சிரத்தையுடன் தன் மூதாதையருக்குத் தர்ப்பணம் அளித்தல் வேண்டும் ? ( இன்றும் கூட திரு அண்ணாமலையில் ஸ்ரீ சிவ பெருமான் வல்லாள மஹாராஜாவுக்குத் தர்ப்பணம் கொடுக்கும் விழா வருடம்தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் திரு அண்ணாமலையில் தமது மூதாதையருக்காகத் தர்ப்பணம் அளிக்கின்ற எவரும் ஸ்ரீசிவபெருமானுடன் சேர்ந்து தர்ப்பண பூஜைகளைச் செய்யும் பாக்கியத்தைப் பெறுகின்றனர். எத்தகைய கிடைத்தற்கரிய வாய்ப்பு ! )
✡மூதாதையர் தர்ப்பண பூஜை மிக மிக எளிதானதே ✡
🕉இந்த எளிய பூஜையிலேயே மூதாதையர்கள் திருப்தி அடைகின்றார்கள் என்றால் இதனைத் தவற விட்டது பெரும் தப்புதானே?
🕉அக்னி குண்டத்தில் தேவர்களுக்கு நாம் உணவாக அளிக்கின்ற பசு நெய், அவல், பொரி, உடைத்த கடலை, பேரீச்சம்பழம், திராட்சை போன்றவற்றை *ஸ்வாஹா தேவதைகள்*தான் எடுத்துச் சென்று தேவர்களுக்கு அளிக்கின்றார்கள்.
🕉இதேபோல் தர்ப்பணத்தில் நாம் கொடுக்கும் தர்ப்பண நீரை *ஸ்வதாதேவி*யே எடுத்துச் சென்று நீத்தார் உலகத்தில் கண்ணுக்குத் தெரியாத வடிவில் உள்ள நம் மூதாதையர்களுக்கு அளிக்கின்றாள்.
🕉பொதுவாக அனைத்து அமாவாசை திதிகளிலும் ஸ்வதாதேவி நாம் ஊற்றும் எள்ளையும் தண்ணீரையும் வாங்கி வானத்தில் எங்கெங்கோ உள்ள நீத்தார் உலகங்களுக்கு எடுத்துச் செல்கின்றாள்.
🕉மற்ற அமாவாசைத் திதிகளில் நம் மூதாதையர்களைத் தேடி எங்கெங்கோ செல்கின்ற ஸ்வதா தேவிகள், மாளய அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய சந்திர உலகத்திற்கு வந்து போவதால், ஸ்வதா தேவி மிகவும் சுலபமாக இறந்த எல்லார் கையிலும் நாம் ஊற்றுகின்ற எள் தண்ணீரை சேர்த்து விடுகின்றாள்.
🕉எள் நீரை வார்க்கும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதுவது சிறப்புடையது
🌞உதாரணமாக கிருஷ்ணசாமி என்பது மூதாதையர் பெயராக இருந்தால்
கிருஷ்ணசாமி ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி என்று *மூன்று முறை கூறி மூன்று முறை எள் கலந்த நீரை தாரையாக வார்க்க வேண்டும்*.
🕉மூதாதையர் பெயர் தெரியாதவர்கள், உறவு முறையைச் சொல்லி (உதாரணம் அப்பாவின் தாத்தா, அம்மாவின் பாட்டி, எனக் கூறி மூன்று முறை தர்ப்பணம் அளிக்க வேண்டும்)
🕉எளிய தர்ப்பண பூஜை முறைகள் சிறிய புத்தகம் ஸ்ரீ அகஸ்திய விஜயம் சென்னை, திருச்சி கேந்திராலயாவிலும், திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலும் கிடைக்கும்
🕉குழந்தைகள் நல்ல பண்புடன் நல்ல ஒழுக்கத்துடன் வளர்ந்து கல்வி கற்று நல்ல வேலையில் அமர்ந்து நன்முறையில் திருமண வாழ்வை அடைவதற்கு மாதப் பிறப்பிலும், அமாவாசை திதியிலும், சூரிய சந்திர கிரகண நாட்களிலும் செலவே இல்லாத எளிய தர்ப்பண பூஜையைச் செய்து வரவேண்டும்.
🙏 _குரு அருளும் பித்ரு க்ருபையும் கூடி(ட) தொடரும்_ ✡வாத்தியார் ஒவ்வொரு வருட மாளய பட்சத்திற்கும் *சித்தர்கள் போற்றும் சிறப்பான தலங்களை* அருளி வருகின்றார்.✡
தலம் *மேலூர்* என்று தற்போது வழங்கப்படும் *பண்டைய உன்னதபுரி*
🕉 *ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் அருளும் தலம்*.
🕉 *ஸ்ரீரங்கம் அணைக்கரை வழியில் 3 கி.மீ தொலைவில் காவிரி நதி முனையில் மேலூர் உள்ளது.*
🕉இந்த இரு வார மாளய பட்ச காலங்களிலும் நம் அடியார்கள் *சத்சங்கமாக பித்ரு ஹோமங்களை நடத்தி அதன்பின்னர் சத்சங்க தர்ப்பணங்களை இலவசமாக நடத்தித் தருகின்றார்கள்.* அதன்பின்னர் அன்னதானமும் நிகழ்கின்றது.
🕉இயன்ற நாட்களில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள். குறைந்த பட்சம் ஒரு தினமாவது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
🕉கும்பகோணம் அருகே சேஷம்பாடியிலும் (ஆலங்குடிக்கு முன்னர் வருவது) நமது அடியார்கள் நடத்தித் தரும் சத்சங்க தர்ப்பண வழிபாடும் இந்த 15 நாட்களிலும் நடைபெறுகின்றது..
🕉 *ஆந்திராவில்* மந்த்ராலயம், ஸ்ரீசைலம்
*தமிழ்நாட்டில்:-*
🕉திருஅண்ணாமலை, விருத்தாசலம், பவானி, திருச்செந்தூர், கன்யாகுமரி, கோடிக்கரை, வேதாரண்யம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, நவபாஷாணம், அக்காமடம், தங்கச்சி மடம்
🕉 *புதுக்கோட்டை அருகே* காஞ்சாத்துமலை, தேனிமலை, வேங்கடகுளம், நெடுங்குடி, மணமேல்குடி
🕉 *திருவாரூர் அருகே* திருவாரூர், குருவி ராமேஸ்வரம், கேக்கரை, திருவிடைமருதூர்
🕉 *மன்னார்குடி அருகே* ஆவிக்கோட்டை - மெய்கை, இடும்பாவனம், திருக்கொள்ளிக்காடு
🕉 *தஞ்சாவூர் அருகே* பாபநாசம், திருவையாறு
🕉காசிக்கு வீசம் பெரிதான ஆறு தலங்கள் - திருவெண்காடு, சாயவனம், மயிலாடுதுறை, ஸ்ரீவாஞ்சியம்,., திருவிடைமருதூர், திருவையாறு
🕉 *ஆவுடையார் கோவில் அருகே* மீமிசல், பொன்பேத்தி, திருப்புனவாசல், தீர்த்தாண்டதானம், முத்துக்குடா
🕉 *செங்கல்பட்டு அருகே* காஞ்சிபுரம், சதராஸ், திருக்கழுக்குன்றம், முக்கூடல் - பழையசீவரம்
🕉 *சென்னை அருகே* அரசர்கோயில், திருவள்ளூர், விரிஞ்சிபுரம், காவேரிப்பாக்கம், திருநின்றியூர் ஸ்ரீ ராமர் கோவில் ஏரி
🕉 *மயிலாடுதுறை அருகே* திலதைப்பதி, ஆறுமொழித்தேவன், திருவெண்காடு, சாயாவனம்
🕉 *கும்பகோணம் அருகே:-* மஹாமகக் குளக்கரை, சக்கரப் படித்துறை, சேஷம்பாடி, நரிக்குடி, கஞ்சனூர் அருகே திரைலோக்கி, ஸ்ரீவாஞ்சியம், திருவையாறு
🕉 *திருச்சி அருகே* ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், மேலூர், திருமாந்துறை அன்பில் திருவேணி சங்கமம், லால்குடி அருகே பூவாளூர், நத்தம், கரூர் அருகே நெரூர்
🕉 *கடலூர் அருகே* திருவஹீந்திபுரம் கருட தீர்த்தம்
🕉 *மதுரை அருகே* திருக்கோளக்குடி, திருப்பூவணம
🕉காசிக்குச் செல்ல இயலாதோரும், தம் குடும்பத்தில் முன்னோர் பலருக்கும் ஈமக் கிரியைகளை முறையாக நிகழ்த்தாதோரும், பன்னெடுங்காலமாய் முறையாய்ப் படையல், திவச வழிபாடுகளை ஆற்றாமையால் குடும்பத்தைச் சூழ்ந்திருக்கும் பற்பலப் பித்ரு சாபங்களையும் உடனடியாக அகற்றிடவும்
🕉ஆறு *காசிகுணாம்பரத் தலங்களில்* தக்க சடங்குகளை, வழிபாடுகளை நிகழ்த்தி வருதல் வேண்டும்
✨ *(1)*திருவெண்காடு
✨ *(2)*சாயவனம்
✨ *(3)*மயிலாடுதுறை
✨ *(4)*ஸ்ரீ வாஞ்சியம்
✨ *(5)*திருவிடைமருதூர்
✨ *(6)*திருவையாறு
🕉இந்த ஆறு பிதுர் முக்தித் தலங்களில் *தரணி பந்து, பவ க்ஷீராஸ்* போன்ற பிதுர் தேவர்கள் ஒவ்வொன்றிலும் ஒருவராய் வந்து அருள்வர்.
🕉இந்த ஆறு தலங்களிலும் அமாவாசை தோறும் வழிபட்டு வந்திடில், பல வகையான பிதுர் சாபங்களும் அகலும்.
🕉கரடு முரடாய்ச் செல்லும் இல்லற வாழ்க்கை நன்கு ஸ்திரமாகிட, *சாயவனம் தலத்தில் தரணி பந்து எனும் மூத்த பித்ருக்களின் ஆசிகள் திரள்வதாம்.*
🕉சாயவனத்தில் திரட்டுப் பால், லஸ்ஸி, ரசமலாய் போன்ற இனிப்பு வகை தானம் விசேஷமான பலன்களை வார்க்க வல்லது.
🙏 _குரு அருளும் பித்ரு க்ருபையும் கூடி(ட) தொடரும்_
தர்ப்பண மகிமை தொடரும் ..
No comments:
Post a Comment