ஆடியும் அமாவாசையும்
ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒருதடவை என்று சொல்கிறோம். ஆடி என்பது இங்கே ஆடிப்பிறப்பு, மாச தர்ப்பணம் பண்ணுவது. ஆடி மாசம் 17.7.22 ஞாயிறு அன்று பிறந்தது. அன்றும் ஆடி அமாவாசை அன்று ஒரு தர்ப்பணமும் பண்ணுவதைக் குறிப்பது.
ஆடி அமாவாசை திதி ஜூலை 28 வியாழன் அன்று சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாள் தான் அமாவாசை. ரெண்டுமே சக்தி வாய்ந்த கிரஹங்கள். எனவே அவற்றின் ஆகர்ஷண சக்தி அமாவாசை அன்று அதிகமாக இருக்கும். இதனால் சிலர் மூளையில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. மனம் கொந்தளிப்பு அல்லது சில சஞ்சலத்துடனேயே இருக்கும்.
சந்திரன் முழுசாக மறைந்திருக்கும் நாள். அன்றிலிருந்து மீண்டும் வளர்ந்து கண்ணில் படும். என்பதால் வெள்ளைக்காரன் நியூ மூன் NEWMOON என்று அமாவாசைக்கு பெயர் வைத்தான். சமஸ்கிருதததில் "அமா' என்றால் "ஒண்ணாக '' என்று அர்த்தம். "வஸ்யா" என்றால் சேர்ந்து வசிப்பது. அமாவாசை அன்று நாம் செய்யவேண்டிய, செய்யக்கூடாத விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.
குலதெய்வத்தை வழிபடுவதும், அம்மன் வழிபாடு நடத்துவதும் மிகவும் சிறப்பானதாகும்.
உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். கோபம், பதற்றம் வேண்டாம். முடிந்தால் பேசாமல் மெளன விரதம் இருக்கவும்.
மாதம் ஒரு அமாவாசை வந்தாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை (புரட்டாசி அமாவாசை) தினங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பண்ண முக்கிய நாட்கள்.
பொதுவாக அமாவாசைக்குப் பின் பெளர்ணமி வரை வளர்பிறை, சுக்ல பக்ஷம் என்பது. பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை கிருஷ்ண பக்ஷம். தேய்பிறை.
சுக்ல பக்ஷத்தில் எந்த ஒரு புதிய காரியங்கள், சுப காரியங்களையும் ஆரம்பிக்கலாம். கிருஷ்ண பக்ஷத்தில் தேய்பிறையில் புதிய செயல்களைத் தொடங்குதல், சுப காரியங்கள் செய்வது இல்லை.
அமாவாசை அன்று முன்னோர்களையும், பெரியோர்களையும் வழிபட்டு தர்ப்பணம் கொடுக்கிறோம். அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டில் மணி அடிப்பதில்லை. படையல் வைப்பதோடு, காக்கைக்கு உணவு வைத்துவிட்டுத் தான் குடும்பத்தில் எல்லோரும் சாப்பிடுவது வழக்கம்.
முன்னோர்கள் படம் வைத்து, பூ வைத்து, சந்தனம் குங்கும பொட்டு வைத்து படையல் வைக்காவிட்டாலும், அவர்களை வணங்கி, நாம் தயாரித்த உணவை காக்கைக்கு வைத்து விட்டு தான் சாப்பிட வேண்டும்.
குலதெய்வத்தை வழிபடுவதும், அம்மன் வழிபாடு நடத்துவதும் மிகவும் சிறப்பானதாகும்.
முடிந்த அளவு ஏழை,எளியோருக்கு தான, தர்மங்கள் செய்து வரலாம். பசுவுக்கு கீரை வழங்கலாம்.
வாசலில் கோலமிடுவது இறைவனை வரவேற்க. ஆனால் அமாவாசை தினங்களில் நம் முன்னோர் கள், பித்ருக்கள், நம் வீட்டின் வாசலில் பசி தாகத்தோடு வந்து நிற்பார்கள். உள்ளே வர நினைத்தாலும், வீட்டு வாசலில் இருக்கும் கோலத்தால் திரும்பிப் போய்விடுவார்கள். இறந்தவர்களாக இருப்பதால் அவர்கள் வரும் போது ஒரு சில அதிர்வலைகளை ஏற்படும், அதனால் சில வித பிரச்னைகள் ஏற்படலாம்.
அமாவாசை தினத்தில் நாம் மிக கடினமான, புதிய முயற்சிகளை செய்யக்கூடாது. அப்படி செய்யும் போது நம் உடலில் ஏதேனும் சிறு காயம் ஏற்பட்டாலும் அதன் வீரியம் மிக அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் காயம் ஆறுவதற்கும் காலதாமதம் ஆகலாம். அதனால் தான் அமாவாசை அன்று உணர்ச்சி வசப்படுவ தைத் தவிர்க்கவும். கோபம், பதற்றம் வேண்டாம். முடிந்தால் பேசாமல் மெளன விரதம் இருக்கலாம்.
மறுபடியும் சொல்கிறேன். நமது பஞ்சாங்கம் லூனார் காலண்டர் LUNAR CALANDER. சந்திரன் இயங்குவதை வைத்து காலத்தை கணிப்பதால் சந்திரமானம் என்று பெயர். சந்திரன் ஒருமுறை முழுசாக சுற்ற ஒரு மாதம். 15 நாட்கள் வளர்ந்து பௌர்ணமியாக, அடுத்த 15நாள்
தேய்ந்து மறைந்து மறுபடி அமாவாசை. இதற்கு உண்டான கால அளவு 29 நாட்கள் 12 மணி 44 நிமிடங்கள் 3.00 வினாடி.
சந்திரன் தேய்வது வளர்வது தொடர்பாக சந்திர மாதத்தை ரெண்டாக பிரித்து 15 நாள் வளர்பிறை காலம் 'சுக்ல பட்சம்' , 15 நாள் தேய்பிறை காலம் 'கிருஷ்ண பட்சம்' . இதில் 14 திதிகள் எனும் சந்திர நாட்கள். அவற்றின் பெயர்கள் :பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி,சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி. அப்புறம் அமாவாசையோ பௌர்ணமியோ வரும்.
முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபாடு செய்வது தர்ப்பணம் ஆகும். பசுமாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது தர்ப்பணம் ஆகும்.
அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து அதை படையலிட்டு பிறகு அதில் கொஞ்சம் எடுத்து காக்கையை சாப்பிட அழைத்து வைக்க வேண்டும். கூடி வாழ்ந்து சேர்ந்து உண்ணும் வழக்கம் காகங்களிடம் மட்டுமே உள்ளது. நம் முன்னோர்கள் காகங்கள் வடிவில் வந்து நாம் அளிப்பதை பெற்றுக் கொள்வார்கள் என்பது காலம் காலமாக உள்ள நம்பிக்கை. அவர்கள் உணவை சுவீகரித்து விட்டு நம்மை மனப்பூர்வமாக
ஆசிர்வதிப்பார்கள், குடும்பம் க்ஷேமமாக இருக்கும் என்று நம்பிக்கை. அசையாத நம்பிக்கை.
No comments:
Post a Comment