காலாணி குணமாக வீட்டு மருத்துவம்
மயில்துத்தம் 1கிராம் பொரித்து,தேங்காய் எண்ணையில் இழைத்து பூச காலாணி குணமாகும்
திருநீற்று பச்சையை அரைத்து கட்ட காலாணி குணமாகும்
அம்மான்பச்சரிசி பாலை பூசிவர காலாணி குணமாகும்
மஞ்சள் 1 துண்டு, வசம்பு 1 துண்டு. மருதோன்றி இலை10 கற்பூரம் சிறிது சேர்த்தரைத்து கட்ட காலாணி குணமாகும்
கடுக்காய், மஞ்சள் சேர்த்தரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து பற்றிட காலாணி குணமாகும்
மருதாணி வேர்பட்டையை அரைத்துக்கட்ட காலாணி குணமாகும்
இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வர கால் ஆணி நீங்கும்.
5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்ட (20 நாட்கள்) கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறையும்.
பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வர குணமாகும்.
இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப் போட்டு காலையில் எடுத்துவிட (ஒரு வாரம்) கால் ஆணி குணமாகும்
மல்லிகை இலைச் சாறை எடுத்து பாதத்தில் பற்று போட கால் ஆணி குணமாகும். பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாது.
வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை பற்றிட கால் ஆணி குணமாகும்
மருதாணி இலை, மஞ்சள் துண்டு இரண்டையும் நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவு , இரவு தூங்குவதற்கு முன் கட்ட (தொடர்ந்து 10 நாள்) கால்ஆணி குணமாகும்.
No comments:
Post a Comment