காஞ்சீபுரம் இட்லி
வரதராஜ பெருமாள் கோயிலில், பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளுக்கு இரண்டு இட்லிகளை நைவேத்தியம் செய்த பிறகு, ஓர் இட்லி கோயில் கைங்கர்யம் செய்பவர்களுக்கும், மற்றொரு இட்லி கட்டளைதாரருக்கும் கொடுக்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்பு 200 வகையான இட்லி இருந்துள்ளது.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வல்லபாச்சாரியார் என்பவர் வரதராஜப் பெருமாளுக்கு நிவேதனமாக ‘காஞ்சிபுரம் இட்லி’யைப் படைத்துள்ளார். மருத்துவ குணம் கொண்ட பொருட்களால் இது தயாரானதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
வல்லபாச்சாரியார் பெருமாளுக்கு மிளகும் சுக்கும் சேர்த்த இட்லியை மந்தாரை இலையில் நைவேத்தியம் செய்திருக்கிறார்.
அன்று முதல் இந்தப் பழக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
தேவையான பொருட்கள் :
செய்முறை: அரிசி, பருப்பு, வெந்தயம் - மூன்றையும் ஒன்றாக 3 மணிநேரம் ஊற வைத்து மணல் பதத்திற்கு அரைத்து அத்துடன் மிளகு, சீரகத்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, சுக்குத்தூள், உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து, கட்டி தட்டாமல் கலந்து வைக்கவும்.‘‘முதிர்ச்சி அடையாத பசுமையான மூங்கிலை மெல்லியதாக, குடலையாக சீவ வேண்டும்.
அதில் மந்தாரை இலையை வைத்து, இட்லி மாவு கலவையை ஊற்றி பெரிய அளவு பித்தளைப் பாத்திரத்தில் இட்டு மேலே வாழை இலையை வைத்து வேக வைக்க வேண்டும். பச்சை நிற வாழை இலை வெந்து வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறும். வாழை இலையின் சாறும், மந்தாரை இலையின் வாசமும் கோயில் இட்லியில் இறங்கும். மண மணக்கும் காஞ்சிபுரம் இட்லி பிரசாதம் தயார்.
No comments:
Post a Comment