உப்புமா கொழுக்கட்டை*
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி (ரவை போல உடைக்கவும்) - அரை கப், தண்ணீர் - ஒன்றரை கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, இஞ்சி - சிறு துண்டு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஊற வைத்த கடலைப்பருப்பை சேர்க்கவும்.
இதனுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பெருங்காயத்தூளையும் சேர்த்துக் கிளறவும்.
வதங்கியவுடன், ஊறவைத்த பாசிப் பருப்பைப் போட்டுக் கிளறவும்.
பின்னர் தண்ணீரை விட்டு வேகவிடவும். முக்கால் பதம் வெந்தவுடன் பச்சரிசி ரவை, உப்பு சேர்த்துக் கிளறவும். தீயைக் குறைத்து வைத்து, வாணலியை மூடி வைக்கவும். ரவை வெந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.
தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறி மூடிவைக்கவும்.
ஆறியதும் உப்புமாவைக் கொழுக் கட்டைகளாகப் பிடித்து வேகவிடவும்
No comments:
Post a Comment