Sunday, July 24, 2022

தர்ப்பண பூஜை முறைகள். பகுதி - 5

 ஆடி அமாவாசைக்கு ஸ்பெஷல்

எளிய தர்ப்பண பூஜை முறைகள். பகுதி - 5

தர்ப்பணம் இடுதல் - விளக்கம் 

போகர் : "தர்ப்பணம் இடுதல் என்றால் என்ன என்று அறிய விரும்புகிறோம். குருதேவா!"

ஸ்ரீஅகஸ்தியர் : "தர்ப்பணம் இடுதல் என்றால் 'பித்ருக்களை நினைத்து அவர்களை முறையாக வணங்கி, ஆசி பெறுதல் என்று பொருள்.'"

தர்ப்பண பூஜைகளை முறையாகச் செய்து வரும் தமது வம்சாவழியினர் அன்ன தானம், உழவாரத் திருப்பணி, இலவச மருத்துவ உதவி, கல்வி தானம், வஸ்திர தானம் போன்ற இறைப்பணிகளில் ஈடுபடும்போது, பித்ருக்கள் மிக்க ஆனந்தத்துடன் தங்கள் ஆன்மீகச் சக்தியை அளிக்கின்றனர். பித்ருக்களின் இந்த ஆசீர்வாதமே தன பாக்யம், வாகனம், வீடு அமைதல், திருமணம் கைகூடுதல், பிள்ளைப்பேறு போன்ற அனுக்ரகங்களாக மாறி அமைகின்றன. 

புலிப்பாணி : "தர்ப்பை, எள், நீர் கொண்டு தர்ப்பணம் இடுவது ஏன்? குருதேவா!"

ஸ்ரீஅகஸ்தியர் : "மனிதர் உயிர் வாழ அன்னம் தேவை. தேவர்கள் அதனை அக்னி மூலமாகவும். கந்தர்வர்கள் பசுநெய் மூலமாகவும், பித்ருக்கள் நீர் மூலமாகவும் ஆஹூதிகளை ஏற்கின்றனர்."

தர்ப்பைப் புல் தேவலோகத்து மூலிகை. எத்தகைய மின்சக்தியையும் தாங்கக் கூடிய வல்லமை வாய்ந்தது. கடும் மின்னல்களை ஏற்கக் கூடிய சக்தி கொண்டது.

மேலும் பல்லாயிரக்கணக்கான பித்ரு லோகங்களில் விதவிதமான பித்ருக்கள் தங்கள் தினசரி பூஜையில் எள் தானிய மணிகளைக் கொண்டு பித்ரு லோகங்களின் நாயகரான ஸ்ரீ மஹா விஷ்ணுவை பூஜிக்கின்றனர். அவர்தம் உடலிலிருந்தே எள்ளாகிய புனிதமான தாவரம் தோன்றியது. மேற்கண்ட காரணங்களால்தான் தர்ப்பண பூஜைக்கு எள், நீர், தர்ப்பை பயன்படுத்தப்படுகின்றன.

போகர் : ''குருதேவா! தர்ப்பண பூஜைகள் யாவருக்கும் உரித்தானதல்ல என்ற கருத்து நிலவுகிறதே!"

ஸ்ரீஅகஸ்தியர் : ''அது மிக மிகத் தவறான கருத்து. இப்பூவுலகில் மானிடப் பிறவி எடுத்த அனைவருமே தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றியே தீர வேண்டும். ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய இறை வழிபாட்டு முறைகளில் முதலிடம் வகிப்பது தர்ப்பண பூஜையே. அதுவும் பகுத்தறிவுடன் கூடிய ஆறறிவு உடையவனாக மனிதன் இருப்பதால் பூலோகத்திலுள்ள ஓரறிவு முதல்

ஐந்து/ஆறு அறிவுடைய ஏனைய ஜீவன்களுக்கும் தர்ப்பணம் அளிக்க வேண்டிய கடமை உண்டு." 

புலிப்பாணி : "தர்ப்பண பூஜை முறைகளும், மந்திரங்களும் மிகவும் கடினமாக இருப்பதாகப் பலர் கருதுவதாலேயே தர்ப்பணம் கொடுக்கும் வழக்கம் குறைந்து விட்டதா? குருதேவா!"

ஸ்ரீஅகஸ்தியர் : 'அப்படி இல்லை சீடனே! மனிதனின் அசிரத்தையான மனப்பாங்கும், குறுகிய மனப்பான்மையுமே இதற்கு காரணம்! தொலைக்காட்சிப் பெட்டி (TV) முன் மணிக்கணக்காக அமர்ந்திருப்பதோ. திரை அரங்குகளில் பல மணிநேரம் கால் வலிக்க நின்று கொண்டிருப்பதோ கடினமாகத் தெரியவில்லையே!"

உண்மையான ஆர்வத்துடன் தக்க பெரியோர்களை நாடி. பயின்று, முறையான தர்ப்பணம் அளித்தால் விசேஷமான பலன்கள் நிச்சயம் உண்டு. இதை அனைவரும் மனதில் கொள்ளட்டும்!

போகர் : ''அனைத்துப் பாமர மக்களும் உய்வடைய எளிமையான தர்ப்பண பூஜை முறை ஒன்றினை அருள வேண்டுகிறோம். மஹாதேவா!"

ஸ்ரீஅகஸ்தியர் : "தர்ப்பண பூஜை மட்டுமல்ல, அனைத்து பூஜை முறைகளையும் அந்தந்த கால கட்டத்திற்கேற்பவும், மனிதனின் தேவைக்கேற்பவும். எளிமையாக முறைப்படுத்தி எமது வழித்தோன்றல்கள் மூலம் அறிவிக்கத் திருவுளம் கொண்டுள்ளேன்! மக்கள் அவர்களைத் தேடி, நாடி, அறிந்து பயன் பெறட்டும். 

💢பிதுர் தோஷமும்...    

ஆடி அமாவாசையும்

      எதிர்வரும் 28.07.2022 வியாழக்கிழமை அன்று ஆடி அமாவாசை தினம்.

      புதன் இரவு 10.06 முதல் வியாழன் இரவு 11.58 வரை அமாவாசை திதி.

      நம் முன்னோர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நமக்கும் நமது சந்ததியினருக்கும் பல அசுப பலன்களை தருவதைப் போல

      முன்னோர்கள்  இறந்த திதி அன்று ஆண்டு தோறும் உங்களுக்கு அவர்களை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்களுக்கு உரிய  முன்னோர் சிரார்த்தத்தை செய்ய வேண்டும்.

      ஆண்டு தோறும்  அவர்களுக்கு உரிய உணவை நாம் அளிக்காமல்  இறந்த முன்னோர்கள்  ஏமாற்றம் அடைந்தால் 

🔥திருமணத்தடை,

🔥தொழில் தடை அல்லது        வேலை யின்மை,

🔥குழந்தை பாக்கிய தடை,

🔥நீங்கா வறுமை,

🔥அகால மரணம்,

🔥தீரா நோய்,

🔥எண்ணிய காரியம் நிறைவேறாமை,

  போன்ற அசுப பலன்கள் தருகிறது.

  இறந்த திதி அன்று  சிரார்த்தம் கொடுக்க இயலாதவர்கள் ஆடி,புரட்டாசி,தை மாதங்களில் வரும் அமாவாசையில் ஏதேனும் ஓரு அமாவாசையில்  சிரார்த்தம் செய்யலாம்.

       தாய்,தந்தையை குறிக்கும் சூரியன், சந்திரன் இணைந்த நாளே அமாவாசை ஆகும்.

     ராகு பாட்டனாரையும், கேது பாட்டியையும் குறிக்கும் கிரகம்.

🌹பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றும் நமது முன்னோர்களை  குறிக்கும் 

5 அல்லது 9ம் இடங்களில் பாவ கிரங்கள் இருப்பது,

🌹  5 (அ) 9 ம் இடத்து அதிபதிகளுடன் பாவ கிரகங்கள் இணைந்து இருப்பது,

🌹5 (அ) 9ம் அதிபதி நீசம் அடைவது,

🌹5 (அ)9ம் அதிபதி அஸ்தமணம் அடைவது,

🌹5 (அ) 9 ம் அதிபதி லக்கனத்துக்கு 6,8,12ல் மறைவது,

🌹சூரியன்,சந்திரன் உடன் ராகு அல்லது கேது இணைவது, போன்ற காரணங்களினால் சில விதி விலக்குகளுக்கு உட்பட்டு அசுப பலன்களை தருகிறது.

      அகல மரணம் அடைந்தவருக்கு தில ஹோமம் ராமேஸ்வரத்தில் செய்து அவர்களை சாந்தி செய்து நற்பலனை பெறலாம்.

        நதிக் கரைகளிலும், கடற்கரையிலும் மூத்தோர் காரியங்களை செய்து முழுக்கு செய்வது  சிறப்பு.

               இயலாதவர்கள் அவர்களின் இல்லத்திலும் செய்யலாம்.

      திருவள்ளுவர் மூத்தோர் கடன் பற்றி  அன்றே திருக்குறளில் தெளிவாக  தெரிவித்துள்ளார்.

   காஞ்சி பெரியவர்  வாழ்வில் முன்னேற மூத்தோர் கடனும்,குலதெய்வ வழிபாடும் இரண்டு கண்கள்  போன்றது என்று தெரிவித்து உள்ளார்.

       மாதம் தோறும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை நினைத்து வீட்டில்  கோலமிடாமல் வழிபட வேண்டும்.

    சாமிப் படத்துடன் இறந்த முன்னோர் படங்களை வைத்து வழிபட கூடாது.

       பிதுர் காரியத்தை செய்யாமல் விட்ட அனைவரும் எதிர் வரும் ஆடி அமாவாசை தினத்தில் பிதுர் சிரார்த்தத்தை செய்து வாழ்வில் முன்னேற்றம் அடையுங்கள்.

ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணம் என்பது மறையோர் பார்பான்ளுக்கு  இன்றியமையாத ஒன்றாகும். பௌத்ததில் சில பிறிவுகளும் 

பித்ரு தர்ப்பணம் செய்வதை கடை பிடிக்கின்றனர். பித்ரு தர்ப்பணம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள்  பற்றிய சில தகவல்கள்

அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பே எழுந்து தர்ப்பணங்களை எப்போதும் காலை 7 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.

எள்ளுடன் தண்ணீரும் கலந்து  தர்ப்பணம் அளிக்கப்பவேண்டும்

பித்ரு காரியத்துக்குள் தர்ப்பைப் புல் பயன்படுத்துவது நல்லது. தர்ப்பைப் புல்லில் சூரிய ஒளி ரூபத்தில் பித்ருக்கள் வந்து அமர்வதாக ஐதீகம்.

நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை சுவதாதேவி, தர்ப்பைப்புல் மூலம்தான் பித்ருலோகத்துக்கு எடுத்து செல்வதாக ஐதீகம்.

தர்ப்பணங்கள்  எப்போதுமே நதிகளின் கரைகளில் செய்யப்படவேண்டும் .

 நம் முன்னோர்கள் மரணம் அடைந்த நேரம், திதியை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களை தரும்.

தர்ப்பணம் செய்யும் போது தாய், தந்தை வழியில் 6 தலைமுறைக்கு முன்பு மறைந்த முன்னோர்களுக்கும் சேர்த்து செய் வேண்டும்.

 அமாவாசை, சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது செய்யப்படும் தர்ப்பணத்துக்கு மிக அதிக சக்தி உண்டு.

மறைந்த முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, மகாளயபட்ச நாட்களில் ஆசி வழங்க நம்மை நிச்சயம் தேடி வருகிறார்கள். இதை புரிந்து கொண்டு அவர்களது ஆசிகளைப்பெற வேண்டியது நமது பொறுப்பாகும்.

பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணமானது பல யாகங்களுக்கு சமமானது.

 கன்யா ராசியில் சூரியன் இருக்கும்போது செய்யப்படும் சிரார்த்தம் பித்ருக்களை ஓராண்டு காலத்துக்கு திருப்தி அடைய செய்யும்.

ஒரு ஆண்டில் ஒருவர் 96 தடவை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

                             ★*******★

பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு ஆன்மீக பூர்வமாக விளக்கங்கள் தந்துள்ளேன் என்பது ஒருபுறம் இருந்தாலும் பித்ரு தர்ப்பணம் செய்வதால் நமது பூர்வீக வரலாறு காப்பாற்றபடுகிறது என்பது யதார்த்த உண்மையாகும்.  

ஆதாவது நாம் தர்ப்பணம் செய்யும் போது தாய், தந்தை  குலம் கோத்திரத்தின் பெயரை சொல்லி தர்பனம் செய்வதோடு தாய் மற்றும் தந்தை வழி வழியில் 6 தலைமுறை முன்னோர்களின் பெயர்களை  சொல்லி  தர்பனம் செய்கிறோம். இப்படி நாமும் நமது வாரீசுகளும் தொடர்ந்து செய்வதால் நமது மூதாதையர்களின் பெயர் வரலாறு மறக்கபடாமல் காப்பாற்றபட்டு அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லபடுகிறது. பிதுர் தர்பனம் தொடர்ந்து செய்யடுவதால் எத்தனை நூற்றாண்டுகள்  ஆனாலும் நம் வரலாறு  அழிவதுமில்லை

                              ★*******★


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment