அருமையான ஆச்சரியமான இரண்டு நரசிம்மர் திருத்தலங்கள்...
🍒 1. தோஷங்களை போக்கும்
பெரும்பாக்கம் லட்சுமி நரசிம்மர்..
🌹 இந்த கோவிலில் ஸ்ரீவேங்கட வரதராஜ பெருமாள் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறார்.
🌹 விழுப்புரத்தில் இருந்து மாம்பழப்பட்டு வழியாக திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 7 கிலோ மீட்டர் தூரத்தில் பெரும்பாக்கம் என்ற பகுதி உள்ளது. இங்கு ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவேங்கடவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இது பல்லவர் காலத்திற்குட்பட்ட பழமையான கோவில் ஆகும். திருக்கோவிலூர் தேகளீச பெருமாளுக்கு அபிமான தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது.
🌹இந்த கோவிலில் ஸ்ரீவேங்கட வரதராஜ பெருமாள் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறார்.
🌹மூலவரின் மார்பில் சிம்ம பதக்கம் காட்சி தருகிறது. இதனால் இந்த கோவில் தென்அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது.
🌹பெரியபெருமாளின் வலது கை அபய ஹஸ்தமாகவும், இடது கை கடி ஹஸ்தமாகவும் இருப்பதால் இந்த பெருமாளை தரிசிப்பவர்கள் திருப்பதி, காஞ்சிபுரம், அஹோபிபலம் போன்ற இடங்களில் உள்ள பெருமாள்களை தரிசித்த பலன்களை அடையலாம் என்பது ஐதீகம்.
🌹இந்த கோவிலில் லட்சுமி நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு லட்சுமியை மடியில் தாங்கி கிழக்கு நோக்கி லட்சுமி நரசிம்மர் காட்சி அளிக்கிறார். தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இவருக்கு பானகம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் மிகுந்த சிறப்பை அடையலாம். அவ்வாறு செய்தால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும். தோஷங்கள் நீங்கும். மேலும் சுவாதி நட்சத்திரத்தன்று இவரை வழிபாடு செய்வது உகந்தது.
🌹 இந்த கோவிலில் கல்யாண ஆஞ்சநேயருக்கும் தனி சன்னதி உள்ளது. அவர் மேற்கு முகமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு மட்டை தேங்காய் அர்ச்சனை செய்தால் திருமண தடை நீங்கும்.
2. விசித்திர வடிவ நரசிம்மர்...
*************************************
கீழப்பாவூர் நரசிம்மர் விசித்திர வடிவம் உடையவர். 16 திருக்கரங்களுடன் திரிபங்க நிலையில் கண்களை மூடி தவக்கோலம் பூண்டு சேவை சாதிக்கிறார்.
🌺 இரண்யனை மடியில் கிடத்தி இரண்டு கரங்களால் தாங்கிப் பிடிக்க, இரண்டு கரங்களால் குடலை உருவ, இதர கரங்களில் சக்கரம், சங்கு தாரியாய் ஆயுதங்களுடனும், வாழ்த்தும் கரங்களுடனும் ஹிரண்ய வதத்தோற்றம் கொண்டுள்ளார்.
சூரியனும் சந்திரனும் வெண் சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க கம்பீர சிங்கமுகத்துடன் தலைக்குமேல் வெண் கொற்றக் குடையுடன் காட்சியளிக்கிறார். ஹிரண்யனின் தந்தையும் பிரகலாதன், அவனுடைய தாய் ஆகியோர் குடும்ப சகிதமாக நரசிம்மர் அடியொற்றி துதித்துக் கொண்டிருக்கின்றனர்.
🙏🙏 நாரதர், காசிமன்னரும் நரசிம்மரை தரிசிக்கின்றனர். கருங்கல் புடைப்புச் சிற்பமாக (சித்தரார்த்தம்) காட்சி தரும் கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால்
🍁 அறிந்தும் அறியாமலும் போன இந்த ஜென்பத்தில் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். உலகியலான இன்பமும் கிடைக்கும். பஞ்ச பூதங்களால் ஏற்படும் தோஷமும் நீங்கும்.
No comments:
Post a Comment