Tuesday, July 12, 2022

மாம்பழம்

மாம்பழம்

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு  கடல் வழியாக இந்தியா வந்த போர்த்துகீசியர்கள் இந்திய மாம்பழங்களில் மல்கோவா, அல்ஃபோன்ஸாவை அறிமுகப் படுத்தினார்கள்.

    மாம்பழம் என்று பெயரிட்டவர்கள் தமிழர்கள் தான். பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழம், மா,பலா,வாழை என்ற முக்கனிகளில் முதலிடடம் வகிக்கிறது.

  மாம்பழத்தில் சர்க்கரை 15%,புரதம் 1%, உயிர்ச்சத்துக்கள் ஏ(4%),  பி (10%), சி (46%) உள்ளன.

  மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை அதிகமாகும்.சர்க்கரை வியாதி வரக்கூடும்.

  மூட்டுவலி,மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் ஒரு சிறிய அளவு மாம்பழம் மட்டுமே சாப்பிடலாம்.

     மாயவரம் பாதிரி மாம்பழம் பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.ஜெர்மனியைச் சேர்ந்த பாதிரியார் ஒக்ஸ், மதப் பிரசாரத்திற்காக 1847ல் மாயவரம் வந்தார்.சர்ச் வளாகத்தில் உள்ள தோட்டத்தில்,ஒட்டு முறையில் ஒரு மாங்கன்று ஒன்றை நட்டு வளர்த்து வந்தார்.அதன் பழம் மிகவும் சுவையாக இருந்தது. பாதிரியார் மாம்பழம் என்று பெயர் பெற்று,பிற்காலத்தில்   பாதிரி பழம்  என்று பிரபலமானது.வீட்டில் 2,3 பழங்கள் இருந்தால் வீடே மணக்கும்.இந்தப் பழத்தின் தோல் சுருங்க,சுருங்க சுவை அதிகமாகும்.

   ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் கார்டன் மாம்பழங்கள் மிகவும் பிரசித்தம்.சுமார் 100  ஏக்கர் நிலத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பல வகை மாமரங்கள் பயிரிடப்பட்டு பராமரித்து வருகிறார்கள்.பல ஆராய்ச்சிகள் செய்து ஒட்டுவகை மரக் கன்றுகள் நடப்பட்டு  வளர்த்து வருகிறார்கள்.இந்தத் தோட்டம் அமைந்துள்ள இடத்திற்கு மாம்பழச்சாலை என்றே பெயர்.தாத்தாச்சாரியார் கார்டனில் உற்பத்தி செய்யப்படும் 10 க்கும் மேற்பட்ட வகைகள் --- செந்தூரா,நீலம் ,கல்லாமணி ,ருமானி,அல்ஃபோன்ஸா,ஆப்பிள் பச்சரிசி,இமாம் பசந்த்.இதில் இமாம் பசந்திற்கு ஏகப்பட்ட டிமாண்டு.குடியரசுத் தலைவர் முதல் முதலலமைச்சர்கள்,நடிகர்கள்,அரசியல்வாதிகள் மற்றும் இதர பிரபலங்களுக்கும் தாத்தாச்சாரியார் கார்டனிலிருந்து இமாம் பசந்த் பழங்கள் செல்கின்றன.

சேலத்தில் கிடைக்கும் மாம்பழங்கள் :-

++++++++++++++++++++++++++++++++++

அல்ஃபோன்ஸா,மல்கோவா,இமாம் பசந்த்,பெங்களூரா,நடுசாலை ( பீத்தர் ), சேலம் குதாதாத்.

ஹைதராபாத்தில் மே,ஜூன் மாதங்களில் எல்லா இடங்களிலும் ஏராளமாகக் கிடைக்கும் மாம்பழம்  பங்கனப்பள்ளி.ருசி அருமையாக இருக்கும்.

டெல்லியில் தசரி,சோசோ மாம்பழங்கள் கிடைக்கும்.

 உ.பி.மாநிலம் பாட்னா அருகே ஒரு விவசாயின் தோட்டத்து மாம்பழங்களுக்கு பாட்னா கடைகளில் கிராக்கி அதிகம்.மாமரங்கள் பற்றி  ஆராய்ச்சிகள் செய்ததற்காக,அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

எழுத்தாளர் கல்கி அவர்கள் மாம்பழம் பற்றி எழுதிய கட்டுரைகள் " ஓ! மாம்பழமே " என்று புத்தகமாகக் கிடைக்கிறது.

சினிமாப் பாடல்களிலும்  மாம்பழம் இடம் பெற்றிருக்கிறது.

---> கோவா மாம்பழமே

--->மாம்பழமாம் மாம்பழமாம் சேலத்து மாம்பழம்

---> மாம்பழம் விக்கிற கண்ணம்மா

--->மாம்பழத் தோட்டம் மல்லிகைக் கூட்டம்

ஒரு மாநிலக் கட்சியின் தேர்தல் சின்னம்  மாம்பழம்.

ஜூலை 22ம் தேதி தேசீய மாம்பழ தினம்

-------------------------------

வி.வெங்கட்ராமன்

----------------------------------

No comments:

Post a Comment