Wednesday, August 5, 2020

தேங்காய் பாயாசம்

தேங்காய் பாயாசம் 

தேவையான பொருட்கள் :பொருள் - அளவு
தேங்காய் துருவல்முக்கால் கப்
பச்சரிசிமுக்கால் கப்
வெல்லம் முக்கால் கப் 
ஏலக்காய்1

முந்திரி10

காய்ச்சி குளிர வைத்த பால்கால் கப்

நெய்தேவைக்கேற்ப
செய்முறை :

  முதலில் பச்சரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

  பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதே நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தை போட வேண்டும். வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  அடுத்து மற்றொரு அடுப்பில் உள்ள பச்சரிசி கலவையானது ஓரளவு கெட்டியாக கஞ்சி போன்று வரும் போது, அதில் வெல்லப் பாகுவை ஊற்றி, பின் அதில் ஏலக்காயை நன்கு தட்டிப் போட்டு கிளறி, கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

  இறுதியில் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்துடன் ஊற்றி கிளறி, 5 நிமிடம் கழித்து அதில் பாலை ஊற்றி கிளறினால், தேங்காய் பாயாசம் ரெடி.

No comments:

Post a Comment