Wednesday, August 5, 2020

வெஜிடபிள் பிரியாணி/வெஜிடபிள் போண்டா

வெஜிடபிள் பிரியாணி

தேவை: பாஸ்மதி அரிசி - 2 உழக்கு, கேரட் - ஒன்று, பீன்ஸ் - 10, முட்டைகோஸ் - ஒன்று (சிறிய அளவு), காலிஃப்ளவர் - ஒன்று (சிறிய அளவு), பட்டாணி - (உரித்தது) ஒரு கப், சோளம் - 2, வெங்காயம் -2, பூண்டு - 10 பல், இஞ்சி - சிறிய துண்டு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, புதினா - சிறிதளவு, தேங்காய்ப்பால் - ஓர் உழக்கு, முந்திரி - 6, பாதாம் - 6, தக்காளி - 4 (நறுக்கவும்), பட்டை - சிறு துண்டு, கிராம்பு - 3, வாசனை (பிரிஞ்சி) இலை - சிறிதளவு, ஏலக்காய் - 2, தயிர் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மல்லித்தழை - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன், தண்ணீர் - 3 டம்ளர், எண்ணெய் - 2 குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை நீரில் சிறிது நேரம் ஊறவைத்து களைந்துவைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி அரிசியை லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். சோளத்தை அவியவைத்து முத்துகளாக எடுத்து வைக்கவும். காய்கறிகளைச் சிறிய அளவில் நறுக்கிவைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.பூண்டு, இஞ்சி, முந்திரி, பாதாமை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, வாசனை இலை, கிராம்பு, ஏலக்காய் போடவும்.பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா, அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கவும். நன்றாக எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். பிறகு தயிர் சேர்க்கவும். அடுத்து நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அரிசியையும் சோள முத்துகளையும் சேர்த்து, உப்பு தூவி நன்றாகக் கலக்கி தண்ணீரையும் தேங்காய்ப்பாலையும் ஊற்றி குக்கரை மூடவும். குக்கரில் இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி, ஆவி வெளியேறிய பின்பு எடுத்துப் பரிமாறவும்.
=====================================================================
வெஜிடபிள் போண்டா

தேவையானவை:  (மேல் மாவுக்கு) கடலை மாவு - 1 கப், ஆப்ப சோடா - சிட்டிகை, உப்பு - ருசிக்கேற்ப, கலர் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு - 1, கேரட் - 1, பீன்ஸ் - 4, பட்டாணி - ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:  காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் காய்கறிகளையும் மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள். காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள். பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்

No comments:

Post a Comment