புடவூர் திருஎஸ் விஜயராகவன் ஸ்வாமிகள் வழங்கும் மலை நாட்டு திவ்யதேச யாத்திரை பகுதி7,8,9
7. திருச்செங்குன்னுர் திருச்சிற்றாறு
“வாசு. நாளைக்கு நிறைய ப்ரோக்ராம் இருக்கு. ரொம்ப பிளான் பண்ணனும்” என்றேன். “சரி சொல்லு. உன் மனசில் ஒரு பிளான் வைத்திருப்பாய் அது சரியாக தான் இருக்கும்”
“இங்கிருந்து திருவல்லா எட்டு மைல். திருவல்லாவிலிருந்து செங்கன்னூர் பத்து மைல்..நாளை காலை கோட்டயம் கொல்லம் PASSENGER ஒரு டிக்கெட் ரூ.5/- தான், அரை மணியில் செங்கன்னூர் போய்விடும். 5-4௦க்கு வண்டி. 6-15-க்கு போகும்.செங்கன்னூர். நாம் சேவிக்கப் போகும் ஐந்து திவ்ய தேசங்களுக்கு சென்டர் PLACE. செல்போனில் 4-3௦-க்கு அலாரம் வைத்து உள்ளேன். சரியாக இருக்கும். இப்போ மணி எட்டாகிறது. வா சாப்பிட்டு வருவோம்.”
7. திவ்ய தேசம் திருசெங்குன்னுர் திருசிற்ராறு
மேலே உள்ள போட்டோ திருச்சென்குன்னூர் திருச்சிர்ராறு ஸ்ரீ இமயவரப்பன் சன்னதி அங்குள்ளவர்கள் இதை ஸ்ரீ தர்மபுத்திரர் பிரதிஷ்டை பண்ணியதாக சொல்வர்
மறுநாள் காலை ஒரு சிரமமும் இன்றி செங்கன்னூர் காலை 6-15 க்கு வந்தடைந்தோம். ஒரு LODGE-ல் இடம் பிடித்தோம். வாடகை ரூ.2௦௦/- போல் ஆயிற்று.. எங்களுக்கு எங்கள் BAGS-ளை வைக்கணும். அவகாசம் கிடைக்கும் போது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்.. அவ்வளவே. நாங்கள் செங்கணாசேரியிலேயே குளித்து விட்டதால் உடனே கிளம்பி விட்டோம். காபி டிபன் செங்கன்னூர் ஸ்டேஷனிலேயே முடித்துக் கொண்டோம். முதலில் திருசெங்கன்னுர் திருசிற்றாரு திவ்ய தேசம் செங்கன்னூர் ஊர் நடுவில் இருந்தது. உள்ளே சென்று பெருமாளை செவித்தோம்.ஆண்கள் மட்டும் பெருமாள் அருகே செல்ல விடுகின்றனர். பெண்கள் சற்று தூரத்தில் நின்றே சேவிக்க வேண்டும். அர்ச்சனைகளை முடித்தகொண்டு பிரகாரத்தில் அமர்ந்து திருவாய்மொழி தனியங்களை சேவித்து பதிகத்தை சேவிக்க தொடங்கினோம். எட்டாம் பத்து 4-ம் பதிகம்:
வார்கடாவருவியயானைமா மலையின்
மருப்பிணைக்கு வடிறுத்துருட்டி
ஊர்கொள்திண்பாகனுயிர்செகுத்து
அரங்கின்மள்ளரக்கொன்று சூழ் பரண்மேல்
போர்கடாவரசர்புறக்கிட
மாடமீமிசைக்கஞ்சனைத்தகர்த்த
சீர்கொள்சிர்ராயன் திருச்செங்குன்ரூரில்
திருச்சிற்றாரெங்கள் செல்சார்வே
அர்ச்சனை முடிந்து பிரசாதத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து செல்லும் பிரைவேட் பஸ்களில் ஒன்றில் திருப்புலியூர் பெருமாளை சேவிக்க புறப்பட்டோம். டிக்கெட் ரூ.6/- தான். மணி எட்டு
அடியேனுடைய மலைநாட்டு திவ்ய தேச யாத்திரை
( இரண்டு வைதீக/ லௌகீகர்களின் அனுபவங்கள் )
8. திவ்ய தேசம் குட்டநாட்டு திருப்புலியூர்
வழக்கம்போல் நிறைய பிரைவேட் பஸ்காரர்கள் படிகளில் நின்று கொண்டு
திருப்புலியூர், திருப்புலியூர், என்று கூறியபடியே இருக்க, எங்களை பார்த்ததும் “புலியூரானும்! கேறு, கேறு வேகங் கேறு” என்று கூறி எங்களை அழைக்க, நாங்களும், உள்ளே சென்று வசதியாக உட்கார்ந்தோம். கண்டக்டர் 2 திருப்புலியூர் டிக்கட்களை நம்மிடம் தருகிறார்.ரூ.8/-தான். (ஏறு என்பதை மலையாளத்தில் கேறு என்கிறார்கள்.நெற்றியில் திருமண் ஸ்ரீசூர்ணம் பார்த்தாலே இவர்கள் இங்கே கோயிலுக்கு போகிற தமிழ்நாட்டு ஐயங்கார்கள் என்று அந்த பக்கங்களில் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள். உங்கள் ஆழ்வார் எங்கள் ஊரை பாடியிருக்கிறாராமே! என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த திவ்ய தேசங்கள் நம்மாழ்வாரால் பெருமை பெற்றுள்ளது பற்றி சந்தோஷம்தான்.செங்கன்னூரில் வசிக்கும் பாமர ஜனங்கள் கூட இந்த விஷயத்தை அறிந்து வைத்திருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை தந்தது. நம் ஆட்களும், சோழ, பாண்டிய திவ்ய தேசங்களை சேவிக்கிறார்களோ என்னமோ ஆனால் மலைநாட்டு திவ்ய தேசங்களை சேவித்து விட்டு வந்து விடுகிறார்கள். கூகுல் நெட்டில் போய் பார்த்தால் இந்த கோவில்களுக்கு எத்தனை வழி காட்டிகள் இந்திய பூராவும் இருக்கிறார்கள்.. அதனால் அந்த பக்கங்களில் நாம் ரொம்ப பிரபலம் போலும
பஸ்ஸில் ஸ்கூல் போகும் பிள்ளைகள் நிறைய இருந்தார்கள். நான் கண்டக்டரிடம் “ஞாங்கள் இ ஸ்தலத்திற்கு புதிய ஆளானும். கொறச்சு அம்பலம் வரும்போழ் பறையனும் கேட்டோ! என்று கூற, அதற்கு அவர் “ஏய் அதொண்ணும் குழப்பமில்ல ஞான் அம்பலம் வாதல் தன்னே விடாம்” என்று பறைந்தார். வாசு சிரித்துக்கொண்டே “எஸ்.வி. நீ ஒன்னா பார்த்துட்டே இரு, அந்த இடம் வரும்போது அவன் நம்மளை மறந்துடுவான்,” என்றான் ஆனால் ஒரு ஏழு கிலோ மீட்டர் தூரமே இருந்தபடியால் ஒரு பதினைந்து நிமிஷத்திலேயே “புலியூர் அம்பலம் எறங்ககானாயிட்டு ஆள் உண்டோ?” என்று கூறிக்கொண்டே எங்களைப் பார்த்து இறங்கச் சொன்னான்.நான் வாசுவை திரும்பி பார்த்து இது கவர்ன்மென்ட் பஸ் இல்ல. பிரைவேட்டானும்
கேட்டோ” என்றபோது அவன் சிரித்துகொண்டே “என் கணிப்பு தவறித்தான் போச்சு” என்று சொல்ல நாங்கள் இறங்கினோம்.
ஆனால் அவன் கரெக்ட்டாக கோவில் வாசலில் இறக்கினான். அப்ப! எவ்வளவு படிகள். இந்த ஸ்தலம் பீமன் பிரதிஷ்ட்டை என்று சொன்னார்கள். கோவிலும் பீமன் மாதிரி பெரிய பெரிய தூண்களுடன் பிரமாண்டமாய் இருந்தது. முகப்பு தோரண வாயிலை கடந்து உள்ளே போன போது பீமன் கதையும் கோயில் வாசல்புறம் வைக்கப்பட்டு இருந்தது. நான் 75-ல் போனபோது இந்தனை உயர படிக்கட்டு அமைப்பு நுழை வாயிலும், இந்த கதையும் இல்லை. வழக்கமாக வாங்கும் புஷ்பாஞ்சலி அர்ச்சனை டிக்கெட்டு களை வாங்கி நம்பூத்ரி அர்ச்சகரிடம் கொடுத்தேன். அவர் எங்கள் நட்சத்திரங்களை கேட்டு அர்ச்சனை செய்தார். (நம் ஊரில் கோத்ரம் கேட்பார்கள். கேரளத்தில் வெறும் நட்சத்திரம் தான் கேட்கிறார்கள். இந்த ஒரு க்ஷேத்திரத்தில் மட்டும் புஷ்பாஞ்சலி என்று நான் 1975-ல் சொல்லியபோது இதோ வருகிறேன் என்று போன டிக்கெட் கொடுக்கும் இடத்தில் இருந்த போத்திமார் உடனே எங்கள் எதிரிலேயே கொத்து கொத்தான விருட்சி புஷ்பங்களை தொடுத்து ஒரு மாலையாக்கி குடுத்து பெருமாளுக்கு சாத்த சொன்னார்.. இந்தமுறை அப்படி யொன்றும் காணோம்.)
ப்ரஸாதம் கையரவை சந்தனமும் சில விருட்சி பூஇதழ்களும் ஒரு துண்டு வாழை இலையில் வைத்து எங்கள் உள்ளங்கையில் போட்டார். நம்மாழ்வர் அருளிய .அந்த க்ஷேத்தரத்து பதிகத்தை அங்கே சொல்லலாமா என்று கேட்டபோது இதற்க்கு என் அனுமதி வேண்டுமா என்பதுபோல் புன்னகைத்து எதிரே இருந்த மண்டபத்தை காட்டினார். அங்கே உட்கார்ந்து தனியனை சேவித்துவிட்டு திருவாய்மொழி, எட்டாம் பத்து, ஒன்பதாம் பதிகம் பாசுரங்களை சேவித்தோம்.
கருமாணிக்கமலைமேல் மணித்தடந்தாமரைகாடுகள்போல்
திருமார்புவாய்கண்கை உந்திகாலுடையாடைகள் செய்யபிரான் .
திருமாலெம்மான் செழுநீர்வயல் குட்டநாட்டுத்திருப்புலியூர்
அருமாயன் பேரன்றிப்பேச்சிலள் அன்னைமீர் இதற்கென்செய்கேனோ
சாதரணமாக கேரளாவில் அர்ச்சகர்கள் பெருமாள் திருநாமம் (பெயர்) கேட்டால் அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றால் அந்த ஊர் பெயரை சொல்லி, கூட’அப்பன்’ என்ற வார்த்தையை சேர்த்து சொல்லி விடுவர். உதாரணமாக குருவாயூரப்பன் என்றமாதிரி. அதே மாதிரிதான் திருகாட்கரை அப்பன், திருமூழிக்களத்தப்பன் என்று சொன்னார்கள். ஆனால் செங்கன்னூர் திருப்பதிகளில் சிற்றாற்று-ல் இமயவரப்பன் என்று ஆழ்வார் தந்த பெயரை சொன்னார். இங்கே திருப்புலியூரில் அருமாயன் என்ற அழைத்ததால் மாயவரப்பன் என்று சொல்லுகிறார்கள். ஆழ்வாரும் மலைநாட்டு திருப்பதிகளில் எல்லா பெருமாளையும் அப்பன் என்ற பெயரால் அழைக்கிறார்.
“மணி 9-15 ஆகிவிட்டது. வா போகலாம். பதினோரு மணிக்குள் திருவண்வண்டூர் சேவித்து விட்டால் தேவலை”. என்று சொல்லி பஸ் பிடித்து செங்கன்னூர் வந்து திருவண்வண்டூர் பஸ் பிடித்து சுமார் பத்து மணிக்கு திருவண்வண்டூரை அடைந்தோம் எல்லா ஊர்களும் சென்கன்னூரில் இருந்து ஆறு, ஏழு கிலோ மீட்டருக்குள் இருந்தபடியால் பஸ்கள் பதினைந்து, இருபது
நிமிஷங்களில் போய்விடுகிறது. மேலும் அரசு பஸ்களை இங்கு எதிர்பார்ப்பார் யாரும் இல்லை. பிரைவேட் பஸ்கள் போட்டி போட்டுகொண்டு பறக்கின்றன.
ஏழு திருவண்வண்டூர்
பஞ்ச பாண்டவர்கள் தங்களது வனவாச காலத்தில் பாரதம் பூராவும் சுற்றி வந்ததாக ஒரு தகவல் பாரதத்தில் உள்ளது. அவ்வாறு வரும்போது அவர்கள் பரசுராமர் ஆண்ட தற்பொழுதைய கேரளா தேசத்தை மிக்க விரும்பி சிலகாலம் அங்கே தங்கியிருந்ததாகவும், தங்களுக்கு மீண்டும் ராஜ்ஜியம் கிடைக்க வேண்டி ஸ்ரீ விஷ்ணுவுக்கு ஆளுக்கு ஒருவர் ஒரு இடத்தில் ஆலய பிரதிஷ்டை பண்ணியதாகவும் வரலாறு. இந்த ஐந்தினையும் ஆழ்வார் விசேஷித்து பாடியுள்ளது அவர்களுக்கு ஒரு பாக்கியம் என்று அடியேன் நினைக்கிறேன். திருச்சிற்ராறு, யுதிஸ்டிரனும், திருப்புலியூர் பீமனும், திருவாரன்விளை அர்ச்சுனனும், திருவன்வண்டுர் நகுலனும், திருக்கடித்தானம் சஹாதேவனும் பிரதிஷ்டை செய்ததாக ஸ்தலபுராணம் கூறுகிறது. இதில் நாம் ஏற்கனவே மூன்றை முடித்து விட்டோம்.இப்பொழுது திருவன்வன்டூரை சேவிக்க வந்துள்ளோம். இதோ அந்த கோயில்:
உத்தரியத்தை சுற்றிக்கொண்டு கோவிலின் உள்ளே பிரவேசித்தோம்.
கோவில் விஸ்தாரமாகவே உள்ளது. நம்ஊர்கள் மாதிரி அங்கே கோவில் நிலத்தை ஆக்ரமித்து கடைகள் எங்கும் நான் பார்க்க வில்லை. அதனால் விஸ்தாரமாக தெரிகிறதோ என்னவோ.வழக்கமாக வாங்கும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு நம்பூத்ரி அர்ச்சகரிடம் கொடுத்துபிரசாதமாக சந்தனமும் விரிச்சிபூ இதழ்களையும் பெற்றோம்.
அங்கே அவரும் எங்களை விசாரித்துவிட்டு உங்கள் ஆழ்வார் “வைகல் பூங்கழிவாய்” என்று தொடங்கி பத்து பாட்டு பாடியிருக்கிறார் என்றார். எனக்கோ ஆச்சரியம், எனக்கே அந்த பதிகம் தெரியாது. புஸ்தகத்தை பார்த்துதான் சொல்கிறேன். அவர் தொடக்க வார்த்தையை திருக்காட்கர அர்ச்சகர் மாதிரி எடுத்து கொடுத்ததில் மகிழ்ச்சி. “உங்களுக்கு எப்படி தெரியும்/” என்று நான் கேட்டேன். “தினமும் ரெண்டு மூணு குடும்பத்தார் இங்கே உங்க வைஷ்ணவர்கள் வருகிறார்கள். அதோ பாருங்கள் உங்களுக்கு பின்னாடி கூட ஒருவர் நிற்கிறார் சற்று தள்ளி” என்றார். “அவர்கள் சொல்லி சொல்லி எங்களுக்கு அந்த வார்த்தை மனதில் படிந்து விட்டது. அதை சொன்னால் உங்களுக்கும் சந்தோஷம். எங்களுக்கும் இது ஒரு பழமையான அம்பலம் என்ற பயத்துடன் ஆராதனை பண்ணுகிறோம்.” என்றார். நான் சொன்னேன் ‘நம்மாழ்வார் ஐய்யாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். இந்த கோயில் நிச்சயமாக 5௦௦௦ ஆண்டுகளுக்கு முற்பட்டதே. சரி வருகிறோம். இந்த க்ஷேத்திரத்து பாசுரங்களை சொல்லிவிட்டு போக ஆசை.”. என்றபோது அவர் “இதோ பக்கத்தில் ஒரு புதிய சன்னதி ஹால் மாதிரி கட்டியுள்ளார்கள். அங்கே உட்கார்ந்து நன்றாக சொல்லுங்கள். எல்லோரும் கேட்பார்கள். (5௦ வருஷங்களுக்கு முன்பு நான் அந்த கோவிலுக்கு போன அன்று ஒரு பெருமாள் திருமேனி சிறியது அந்த கோவில் பூமிக்கு அடியில் எதோ தோண்டியபோது கிடைத்து பிரதிஷ்டை பண்ணிக்கொண்டு இருந்த ஞாபகம். அதுதான் அந்த சன்னதியா? என்று கேட்டபோது அவருக்கு பேச நேரம் இல்லை. சேவார்த்திகள் நிறைய காத்திருந்தனர்.”ஆமாம்” என்று எதோ சொன்னார். ஒரு பிரதக்ஷணம் வந்தோம். அந்த மண்டபத்தில் உட்கார்ந்து தனியனை சேவித்துவிட்டு, திருவாய்மொழி ஆறாம்பத்து முதல் பதிகம் சேவிக்க உட்கார்ந்தோம்.
வைகள் பூங்கழிவாய் வந்துமேயும் குருகினங்காள்
செய்கொள் செந்நெலுயர் திருவண்வண்டூருறையும்
கைகொள் சக்கரத்து என்கனிவாய்ப்பெருமானைக்கண்டு
கைகள்கூப்பிச்சொல்லீர் வினையாட்டியேன்
நாங்கள் திருவண்வண்டூரை முடித்தகொண்டபோது மணி 11 ஆகி விட்டது. கோவிலுக்கு வெளியே வந்தபோது எங்களுக்கு சற்றுபின்னல் க்யூவில் நின்றிருந்த வடகலை குடும்பத்தை சந்தித்தோம். அவர்கள் கும்பகோணத்திலிருந்து வந்திருந்தனர். சிறிது பேசிக் கொண்டிருந்து விட்டு கைகூப்பி விடை பெற்றோம்.
பஸ் ஏறி கால் மணி காலத்தில் செங்கன்னூர் வந்தடைந்து LODGE-க்கு சென்று உடை மாற்றிக்கொண்டு ஒரு நல்ல வேஜிடேரியன் ஹோட்டல் தேடிப்போனோம். அவ்வளவு பெரிய ஊரில் ஒரு சரியான ஹோட்டல் இல்லை. செங்கன்னூர் ரயில்வே ஸ்டேஷன்-க்கு போய் VLR ஸ்டாலில் நல்ல சாப்பாடு கிடைத்தது. காரணம் அது ஒரு உடுப்பி காரர் நடத்தியது.. லாட்ஜ் திரும்பி கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்தோம். வாசு கேட்டான் “என்ன எஸ்.வி. மாலை என்ன புரோகிராம்”
நான் சொன்னது: “வாசு! இப்போ மணி பனிரண்டு. திருவல்லவாழ் அதாவது இந்த ஊர்க்காரர்கள் திருவல்லா என்பார்கள். இங்கிருந்து பத்து கிலோ தான். ஒரு அரை மணி நேரத்தில் கொண்டு விட்டு விடுவான். நிறைய பஸ்கள் போகிறது. சரியாக மூன்றரைக்கு கிளம்புவோம் குளித்துவிட்டு. நாலரைக்குள் அங்கே போய்விடுவோம். ஐந்தரை மணிக்கு அங்கிருந்து கிளம்பினால் இங்கே ஆறு மணிக்குள் வந்துவிடலாம். மிஞ்சினால் ஆறரை ஆகும். நேரே திருவாரன்விளை போகிறோம். அங்கே 7-3௦ மணிக்கு முடிந்ததும் மேலே பேசுவோம். இப்போமூணுமணிநேரம்ரெஸ்ட்.சரியா?”என்றபோது“ரொம்பசரி என்றான்”
No comments:
Post a Comment