ஜவ்வரிசி ஊத்தப்பம்
தேவையானவை:
இட்லி அரிசி – 4 கப்,
உளுந்து – ஒரு கப்,
ஜவ்வரிசி – கால் கிலோ,
வெங்காயம் – 2,
கடுகு,
உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும். மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும்.வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லைச் சூடாக்கி, மாவைக் கெட்டியாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment