ரெடியா ரசம் சாதம்
Climate change times, அப்புறம் உடம்புக்கு முடியல மேலும் தொடர்ந்து ஏதாவது வேலைகள் இருக்கிற நேரத்தில் நீங்க இந்த ரசம் சாதம் try பண்ணலாம்
முக்கால் டம்ளர் அரிசி.கால் டம்ளர் துவரம் பருப்பு.
மஞ்சப்பொடி.
நல்ல பழுத்த தக்காளி ஒன்று.
ஒரே ஒரு பச்சை மிளகாய்.
கொஞ்சம் நல்ல பெரிய அளவு. பெருங்காயம் ..( சமையலில் எப்பொழுதும் பெருங்காயம் சற்று தூக்கலாக இருக்கணும்)
கொஞ்சமா புளி தண்ணிர்..
தேவையான அளவுக்கு உப்பு அவ்வளவுதான் ..
1;3 ratio water
இவை அத்தனையும் மொத்தமா சேர்த்து ரெடி பண்ணி அப்படியே வெச்சுடணும் ..
சாப்பிடுவதற்கு ஒரு பத்து நிமிஷம் முன்பு அப்படியே எடுத்து குக்கரில் வைத்து மூன்று விசில் வைத்து எடுத்து விட வேண்டியது தான் ..
அதன் பிறகு, மிளகு சீரக பொடி, கொஞ்சம் சின்ன வெல்லம், நெய் விட்டு கடுகு போட்டு தாளிக்கணும்..
நன்றாக குழைந்த , One pot Rasam sadam
Ready..
With appalam.👆👆
குழந்தைகள் பெரியவர்கள் உடல் நலம் சரியில்லாத நேரத்தில், வேலை பளு சற்று அதிகமா இருக்கிற நேரத்தில இது அடிக்கடி கை கொடுக்கும் ..
Try பண்ணி பாருங்க......
No comments:
Post a Comment