Thursday, March 14, 2024

உப்பு அடை

 *காரடையான் நோன்பு ஸ்பெஷல் !* 👆👇

 உப்பு அடை:  👆👇 

தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் துண்டுகள் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1
ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு,
எண்ணைய் தேவையானது

 தாளிக்க:

கடுகு,உளுத்தம் பருப்பு,பெருங்காயம்,

கறிவேப்பிலை

 செய்முறை

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டிய வைகளை தாளித்து இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காரா மணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை தூவிக் கொண்டே கிளறவும்.

மாவு நன்றாக வெந்ததும் வடை போல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும். அடை ரெடி.

அனைவருக்கும் காரடையான் நோன்பு 14.3.2020 வாழ்த்துக்கள் !

No comments:

Post a Comment