Sunday, March 10, 2024

முற்பகல் செயின்..65

 முற்பகல் செயின்..65

By N Krishnamurthy 

எட்டரை மணிக்கு ஆதித்யா,தேன்மொழி ஆபீஸ் நண்பர்கள் மண்டபத்துக்குள் நுழைந்தனர். சீட்டி அடித்தும், உரக்க குரல் எழப்பியும் எல்லோர் கவனத்தையும் அவர்கள் கவர்ந்தனர்.

சுயம்புலிங்கம் மனைவி கனகவல்லியுடனும்,ஒரே மகன் குற்றாலத்துடன் வந்து சேர்ந்தார்.

காலை டிபன் சுவை அட்டகாசமாக இருந்தது.

முஹுர்த்த நேரம் வந்ததும், ஆதித்யா தேன்மொழி கழுத்தில் தாலியை கட்டி அவளை தன் மனைவியாக ஆக்கிக் கொண்டான்.

மங்கலவாத்யம் முழங்கியது.  

பெரியவர்களுக்கு இருவரும் நமஸ்காரம் செய்தனர்.

பின்பு அவளை அழைத்துக் கொண்டு போய் வந்திருந்தவர்கள் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தான் ஆதித்யா.

வந்திருந்தவர்கள் வரிசையில் செண்பக ராஜ் இருந்ததைப் பார்த்து தேன்மொழி திடுக்கிட்டாள்.

இவனுக்கு யார் பத்திரிக்கை கொடுத்திருப்பார்கள் என தேன்மொழி யோசித்தாள்.

செண்பகராஜ் தன்னுடைய மனைவியையும், குழந்தையும் அழைத்துக் கொண்டு வந்து தேன்மொழியிடம் "என்ன தேன்மொழி என்னை மறந்து விட்டாயா. நான்  செண்பகராஜ் "என்று கூறினான்." இது என் மனைவி இனியா, மற்றும் இது என் மகள் குமுதா" என்று கூறினான்." நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்" என்று ஒப்புக்கு கூறிய தேன்மொழி ஆதித்யாவிடம் 

"இவர் என்  கிளாஸ்மேட் செண்பகராஜ்" என்று அறிமுகப்படுத்தினாள்.

 "ஓ. அப்படியா" என்று கூறிய ஆதித்யா " நைஸ் டு மீட் யு செண்பகராஜ்" என்று கூறி கை கொடுத்தான். 

இது போன்றே வள்ளிநாயகம் தனது சகலை சுயம்புவை ஆதித்யாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பின்பு க்ரூப் க்ரூப்பாக பிரிந்து போட்டோ எடுத்துக்கொண்டார்கள். 

அன்று மாலை 4 மணி வரை மண்டபத்தில் இருந்தவர்கள், அதற்குப் பின் கிளம்பி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த இன்னொரு வேனில் ஆதித்யா குடும்பமும்,சுப்ரமண்ய பிள்ளை குடும்பமும்  கடையநல்லூரை அடைந்தது. 

சுப்ரமணிய பிள்ளை வீட்டில் ஓர் அறை முதல் இரவுக்காக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

முதல் இரவு அறையில் விடப்பட்டதும் ஆதித்யாவும், தேன் மொழியும் பேச ஆரம்பித்தார்கள். ஆதித்யாவிடம் தேன்மொழி"  கடைசி இருபது  நாட்கள் உங்கள் நடவடிக்கையை சரியில்லை. பல விஷயங்கள் நீங்கள் என்னிடம் மறைத்து விட்டீர்கள் என்று என் உள் மனது சொல்கிறது "என்று கூறினாள். பின்பு ஆதித்யா

" நீ சொல்லுவது சரிதான். அந்த விஷயத்தை  நான் உனக்கு அப்பொழுதே சொல்லி இருந்தால், நீ மிகவும் கவலை அடைந்து இருப்பாய்" என்று கூறி தன் பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த செண்பக ராஜின் கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். அதை வாங்கி படித்த தேன்மொழி மயக்கம் போடாத குறையாக " என்னங்க இது இவ்வளவு அபாண்டமா  எழுதி இருக்கிறான். யாராயிருக்கும் " என்றாள். பிறகு ஆதித்யா அவளிடம்  நடந்துவற்றையெல்லாம்  ஒன்று விடாமல் விவரித்தான். அதற்குள் தேன்மொழி " யாருங்க இந்த கையெழுத்து எக்ஸ்பர்ட். உங்களுக்கு தெரிந்தவரா "என்றாள் உடனே ஆதித்யா" நான் தான் அந்த எக்ஸ்போர்ட். வீட்டில் ரூம் கதவை சாத்திக்கொண்டு உன்னுடைய ஆட்டோகிராப் புக்கையும் இந்த கடிதத்தையும் வைத்து, ஒரு பூத கண்ணாடியின் உதவியால்  இரண்டும் ஒரே கையெழுத்து தான் என்று புரிந்து கொண்டேன்" என்று கூறினான். "நீங்க பெரிய ஆள் தான்" என்று கூறிய தேன்மொழி "இந்த கடிதத்தை நம்பாமல்,என் மேல் நம்பிக்கை வைத்து இவ்வளவு தூரம் செய்துள்ளீர்களே. நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்"என்றாள்.

"இப்படி நீ நன்றி சொல்லலாம்" என்று அவன் அவள் காதில் ஏதோ கூறினான்."சீ" என்றாள் தேன்மொழி வெட்கத்தில்

" தேன்மொழி விளக்கை அணைக்கட்டுமா" என்றான் ஆதித்யா. "இதையெல்லாம் கேட்டுக் கொண்டா செய்வார்கள் "என்றாள் தேன்மொழி. உடனே ஆதித்யா எழுந்து சென்று  விளக்கை அணைத்தான். விளக்கை மட்டுமா அணைத்தான்?

No comments:

Post a Comment