ஆத்மானந்தா-13
By N Krishnamurthy
காலை ஆறு மணிக்கு வசந்தி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். நார்மல் டெலிவரி. குழந்தை 3 கிலோ இருந்தான். சதய நக்ஷத்ரம்.
விஷயம் கேள்விப்பட்டதும் தெக்ஷிணாமூர்த்தியும், ராதாகிருஷ்ணனும் வந்து பார்த்தார்கள். தெக்ஷிணாமூர்த்தி ராமச்சந்திரனுக்கு போன் செய்து செய்தியை தெரிவித்தார். நான்காம் நாளே குழந்தையுடன் வீட்டுக்கு வந்தாள் வசந்தி.
அவளை வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து விட்டு,வீட்டிற்குள் நுழைந்து, ஆரத்தி கரைத்து எடுத்துகொண்டு வந்து வசந்திக்கும்,குழந்தைக்கும் ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டிட்டாள் கார்த்தயாயினி.
அன்றிலிருந்து பத்திய சாப்பாடு ஆரம்பிக்கப்பட்டது.பதினொன்றாம் நாள் புண்ணியாஜனத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மிகக் குறைந்த கூட்டமே புண்ணியாஜனத்துக்கு சேர்ந்தது. ராமசந்திரன் திருவனந்தபுரத்திலிருந்து வந்திருந்தான்.
காலையில் புண்ணியாஜனம் முடிந்து மாலையில் தொட்டிலிட்டார்கள் குழந்தைக்கு தெக்ஷிணாமூர்த்தியின் தந்தையின் பெயரான சுந்தர ராமன் என்று பெயரிட்டார்கள். குருவாயூரப்பனை வேண்டிக் கொண்டு பிறந்த குழந்தையாதலால் ஸ்ரீ கிருஷ்ணன் என்றும் நந்த கிஷோர் என்றும் பெயரிட்டார்கள்.
இதன் பின்னர் கிட்டத்தட்ட ஆறுமாதம் வரை கார்த்தயாயினியும், ராதாகிருஷ்ணனும் குருவாயூரிலே தங்கி இருந்தனர்.
கல்பாத்தியிலிருந்த விஜயலக்ஷ்மி பிரசவித்த ஆறுமாதம் கழித்து கைக்குழந்தை மைத்ரியுடன், திருவனந்தபுரம் போகும் வழியில் ,குருவாயூர் வந்து ஒரு வாரம் தங்கினாள்.
அவளுடன் ராதாகிருஷ்ணன் தம்பதிகள் திருவனந்தபுரத்திற்கு போய், ராமசந்திரனுடன் கொஞ்ச காலம் இருந்தனர்.
வசந்தியும்,தெக்ஷிணாமூர்த்தியும் நந்த கிஷோரை நந்து என்றும்,நந்தா என்றும் மாறி மாறி கூப்பிட்டார்கள் .
நந்தகிஷோருக்கு ஆறுமாதம் ஆவதற்கு முன் அன்ன பிரசன்னத்திற்கு நல்ல நாள் குறித்தார்கள்.
சாஸ்திரங்களின்படி, மொத்தம் 16 இந்து சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. அவற்றில் அன்னபிரசன்னம் நிகழ்ச்சியும் ஒன்று. இறைவனின் ஆசிகளோடு குழந்தை பிறந்து முதலாவது திட உணவை ஊட்டும் சடங்கு தான் “அன்னபிரசன்னம்”. பொதுவாக கோவிலில் நடக்கும் இந்த நிகழ்ச்சி.
குருவாயூர் கோயிலில் சோரோணு/அன்னபிரஷன் பிரசத்தி பெற்றது.
சமைத்த சாதம், பாயசம் (அரிசி மற்றும் வெல்லம், அரிசி, சர்க்கரை மற்றும் பால்) வாழைப்பழம் போன்ற அனைத்து பொருட்களையும் ஒரு வாழை இலையில் வைத்து நந்த கிஷோருக்கு வசந்தி ஒவ்வொன்றாக ஊட்டிவிட்டாள்.
இந்த பிரசாதம் சோரூண் ஹாலில் (பழைய டிக்கெட் கவுண்டர் கட்டிடத்தின் முதல் தளத்தில்) நடத்தப்பட்டது.
சோருண் ஹாலுக்குள் நுழைவதற்கு முன் 100 ரூபாய் கட்டணத்தில் டிக்கெட் கவுண்டரில் இருந்து சோரூனுக்கான டிக்கெட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சோரூணு ஃபங்ஷன் புகைப்படங்களை எடுக்க விரும்பினால், அதற்கு ஐந்து படங்களுக்கு 100 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். சோரூணு விழா முடிந்ததும், வரிசையில் நிற்காமல் இந்த டிக்கெட்டைக் காட்டி, கோவிலுக்குள் (நாலாம்பலம்) அப்பா, அம்மா மற்றும் குழந்தை நுழையலாம். இந்தச் சலுகைக்கு ஆன்லைன் முன்பதிவு இல்லை.
இந்த பிரசாதம் தினமும் காலை 5 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை மாலையிலும் நடைபெறும். குருவாயூர் ஏகாதசி நாளில் (முழு நாள்) சோரூண் நடத்தப்படாது.
மைத்ரியின் ஆயுஷோமத்திற்கு திருவனந்தபுரம் சென்றிருந்த வசந்தியும், தெக்ஷிணாமூர்த்தியும் திரும்ப குருவாயூர் வரும்போது ராதாகிருஷ்ணனும், கார்த்தயாயினியும் அவர்களுடனே குருவாயூர் வந்தனர்.
No comments:
Post a Comment