கர்நாடகா ஸ்பெஷல் "மத்தூர் வடை"
இந்த வடையை பதினைந்து நிமிடங்களில்
செய்து விடலாம். ரொம்ப சுலபம் சுவையாக இருக்கும்.
தீடிரென வரும் விருந்தினர்களுக்கு விரைவில் செய்து கொடுக்கலாம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு 1/2 கப்
மைதா 1/4 கப்
ரவை1/4 கப்
வெங்காயம் (2) பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
நெய் 1 டீஸ்பூன்
எண்ணெய் பொறிக்க
தேவையான அளவு உப்பு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மாவு வகைகளை சேர்த்து நன்கு கலந்து கொண்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லி, கறி வேப்பிலை, உப்பு, நெய் எல்லாம் சேர்த்து முதலில் நன்கு கைகளால் கலந்து கொண்டு சூடான எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து தண்ணீர் சிறிதளவு தெளித்து பிசைந்து கொள்ளவும்.
எண்ணெய் மிதமான சூட்டில் காயவைத்து மாவை வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் கனமும் இல்லாமல், மெலிதாகவும் இல்லாமல் தட்டி பொறித்து எடுக்கவும். மத்தூர் வடை ரெடி !!! 👆
No comments:
Post a Comment