Sunday, March 10, 2024

முற்பகல் செயின் முடிவுரை

 முற்பகல் செயின் முடிவுரை

By N Krishnamurthy 

முற்பகல் செயின் முடிவுக்கு வந்தது.

வழக்கம் போல அடுத்த சில ஆண்டுகளில் கதை பாத்திரங்களுக்கு என்ன ஆனது என்று சொல்ல கடமை பட்டுள்ளேன்.

1) திருமணம் முடிந்த இரண்டாவது வருடத்தில் ஆதித்யா தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள்  பிறந்தன. ஆணுக்கு பாரதி எனவும் பெண்ணிற்கு மைவிழி எனவும் பெயரிட்டார்கள். 

2) பாரதி தாத்தா,அப்பா போல  உறங்குகையில் ஒரு காலை மடக்கி அதன்  மேல் மற்றொரு காலை போட்டு தூங்கினான்.

3) காசிநாதனும், காந்திமதியும் பெங்களூருக்கு குடியேறினர்.

4)  ஆதித்யா திருமணம் முடிந்த அடுத்த வருடம் திருவும், நித்யாவும் அமெரிக்காவை விட்டு மீண்டும் சென்னையில் குடியேறினார்கள்.

5) நமச்சிவாயத்தின் சம்மதத்துடன், ஆதித்யா அவரது வீட்டை இடித்து அந்த இடத்தில் இரண்டு மாடி கொண்ட புது வீட்டை கட்டினான். தரை மட்டத்தில் கார் பார்க்கிங்கா முற்பகல் செயின் முடிவுரை

முற்பகல் செயின் முடிவுக்கு வந்தது.

வழக்கம் போல அடுத்த சில ஆண்டுகளில் கதைபாத்திரங்களுக்கு என்ன ஆனது என்று சொல்ல கடமை பட்டுள்ளேன்.

1) திருமணம் முடிந்த இரண்டாவது வருடத்தில் ஆதித்யா தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள்  பிறந்தன. ஆணுக்கு பாரதி எனவும் பெண்ணிற்கு மைவிழி எனவும் பெயரிட்டார்கள். 

2) பாரதி தாத்தா,அப்பா போல  உறங்குகையில் ஒரு காலை மடக்கி அதன்  மேல் மற்றொரு காலை போட்டு தூங்கினான்.

3)காசிநாதனும், காந்திமதியும் பெங்களூருக்கு குடியேறினர்.

4)  ஆதித்யா திருமணம் முடிந்த அடுத்த வருடம் திருவும், நித்யாவும் அமெரிக்காவை விட்டு மீண்டும் சென்னையில் குடியேறினார்கள்.

5) நமச்சிவாயத்தின் சம்மதத்துடன், ஆதித்யா அவரது வீட்டை இடித்து அந்த இடத்தில் இரண்டு மாடி கொண்ட புது வீட்டை கட்டினான். தரை மட்டத்தில் கார் பார்க்கிங்காகவும்,மூன்று அறை கொண்ட முதல் மாடி திரு,நித்யா, நமச்சிவாயம், கோமதி வசிப்பதற்காகவும்,மூன்று அறை கொண்ட இரண்டாவது  மாடி ஆதித்யா, தேன்மொழி,குழந்தைகள் தங்குவதற்காகவும் உருவாக்கப்பட்டது.

6) வள்ளிநாயகத்தின் ஒன்று விட்ட தங்கை பூரணியை சந்திரசேகரன் மணந்தான்.

7) செண்பகராஜ் தனக்குப்பிறந்த அடுத்த ஆண் குழந்தைக்கு ஆதித்யா என பெயரிட்டான்.

No comments:

Post a Comment