முற்பகல் செயின்..60
By N Krishnamurthy
மறுநாள் ஆபீஸுக்கு கிளம்பும்போது ஆதித்யா நமச்சிவாயத்திடம் "தாத்தா, இன்றோ நாளையோ எனக்கு கூரியரில் ஒரு பார்சல் வரும். பத்திரமாக வாங்கி வையுங்கள்" என்று கூறி விட்டு சென்றான். பிற்பகல் வீட்டிற்கு ஃபோன் செய்தான் ஆதித்யா. அந்த பார்சல் வரவில்லை.
அன்று இரவு ஆதித்யாவிற்கு சந்திரசேகர் போன் செய்தார்.
"ஒரு குட் ந்யூஸ். தேடிய ஆட்டோகிராப் நோட் கிடைத்து விட்டது. முதலில் வெகு நேரம் தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில் பரண்மீது ஒரு பழைய இரும்பு பெட்டியில் சில வேண்டாத சாமன்களுக்கு மத்தியில் அது இருந்தது.' I always remember you' என்று எழுதி செண்பகராஜ் கையெழுத்திட்டிருக்கிறான். அதை இன்றே உங்களுக்கு கூரியர் செய்துள்ளேன். நாளைக்கு உங்கள் கையில் அது இருக்கும் "என்றார்.
இதைக் கேட்ட ஆதித்யா "உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. நாம் முக்கால் கிணறை தாண்டி விட்டோம்" என்று கூறியவன் அவரிடம் "செண்பகராஜ் இருக்கும் இடம் பற்றி விவரம் தெரிந்ததா" என்று கேட்டான்.
" ஆம். அதை நான் சொல்ல மறந்து விட்டேன். அவன் பாளையங்கோட்டையில் ஒரு பேனல் தயாரிக்கும் கம்பெனியில் டிசைன் இன்ஜினாக வேலை செய்து கொண்டிருக்கிறான் இன்னொரு நல்ல விஷயம் கடவுள் நம் பங்கில் இருக்கிறார் என்பதற்கு. வள்ளிநாயகத்தின் சகலை சுயம்புலிங்கம், பாளையங்கோட்டையில் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக இருந்து வருகிறார். தேவைப்பட்டால் அவருடைய உதவியை நாம் எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினார். இதைக் கேட்ட ஆதித்யா "ஆம், நீங்கள் சொல்வது சரி. எல்லாம் கூடி வருவதாக நான் நினைக்கிறேன் என்று கூறி போனை" வைத்தான்.
மறுநாள் வெள்ளியன்று மாலை இரண்டு மணிக்கு ஆதித்யாவின் வீட்டில் கூரியர் டெலிவரி செய்யப்பட்டது நமச்சிவாயம் ஆதித்யாவுக்கு போன் செய்து " நீ எதிர்பார்த்திருந்த கூரியர் வந்துவிட்டது" என்று கூறினார் . அன்று மாலை ஆதித்யா வீட்டிற்கு வந்ததும், பார்சலை பிரித்து, அந்த ஆட்டோகிராப் நோட்டை வெளியில் எடுத்து செண்பகராஜ் கையெழுத்திட்டிருந்த பக்கத்தை படித்துப் பார்த்தான்.
சனிக்கிழமை மாலை சந்திரசேகருக்கு போன் செய்த ஆதித்யா "ஆட்டோகிராபில் உள்ள கையெழுத்தும், அனாம தேய கடிதத்தில் உள்ள கையெழுத்தும் ஒன்றுதான் என்று கையெழுத்து நிபுணர் கூறுகிறார். எனவே திங்கள் என்று நீங்கள் உங்கள் சகலையை விட்டு செண்பகராஜை திங்களன்று உங்கள் ரூமுக்கு கூட்டுக் கொண்டு வாருங்கள். நானும் திங்கள் என்று காலை உங்கள் ரூமுக்கு வந்து விடுகிறேன்" என்றான்.
திங்கள் காலை ஆதித்யா திருநெல்வேலி சென்று சந்திரசேகருடைய ரூமை அடைந்தான்.
காலை 10 மணிக்கு செண்பகராஜ் வேலை செய்து கொண்டிருந்த பேனல் கம்பெனிக்கு இன்ஸ்பெக்டர் சுயம்புலிங்கம் மப்டியில் போய் சேர்ந்தார். முன் பகுதியில் கம்ப்யூட்டர் முன்பு ஒரு பெண் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளிடம் அவர் "நான் செண்பகராஜை பார்க்க வேண்டும்" என்று கூறினார்." சரி நீங்கள் யார் என்று நான் அவரிடம் சொல்ல வேண்டும்?" என்று கேட்டாள். "அவர் ஊரை சேர்ந்த சுயம்புலிங்கம் வந்திருக்கிறார் என்று கூறுங்கள்"என்றார்.
No comments:
Post a Comment