முற்பகல் செயின்..64
By N Krishnamurthy
திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு தேன்மொழி லீவு எடுத்துக்கொண்டு கடையநல்லூருக்கு சென்று விட்டாள்.
அவளை ஆதித்யா வழியனுப்பிவைத்தான். "அடுத்தமுறை நீ சென்னை வரும்போது உன் பெயர் மாறியிருக்கும்"என்றான். அது என்ன என்று தெரிந்திருந்தும் அதை அவன் வாயால் கேட்க வேண்டுமென்பதற்காக "என்னவாக மாறியிருக்கும்"என்றாள். " திருமதி தேன்மொழி ஆதித்யா வென உன் பெயர் மாறும் "என்றான் அவன். இதைக்கேட்ட அவளுக்கு காதில் தேன் பாய்ந்த மாதிரி இருந்தது.
திருமணத்திற்கு இரண்டு நாள் முன்னர் முன்பு, இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் பிடித்த ஆதித்யா குடும்பம் நேராக தென்காசியில் இறங்கியது.
அங்கு ஏற்கனவே ஆதித்யா அவர்கள் குடும்பத்திற்காக ஐந்த ரூம்களை புக் செய்து இருந்தான். ட்ரெயின்லிருந்து இறங்கி எல்லோரும் லாட்ஜுக்கு சென்றார்கள்.
வித்யா அவர் கணவர் தாமோதரன் மற்றும் பெண் ரம்யா ஆகியோர் அங்கிருந்து ஒரு டாக்சி வைத்துக் கொண்டு குற்றாலம் சென்றுவர திட்டம் போட்டிருந்தார்கள். அவர்கள் கிளம்பிச் சென்றதும் வெகு நேரம் திரு, நித்யா, நமச்சிவாயம்,கோமதி காந்திமதி மற்றும் காசிநாதன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அன்று மாலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.இதற்கிடையில் சந்திரசேகர் அன்று மாலையே திருமண மண்டபத்திற்கு வந்துவிட்டிருந்தார். அவர் ஆதித்யாவை அழைத்துக்கொண்டு,அவனுடைய ஆபிஸ் நண்பர்களுக்காக புக் செய்யப்பட்டிருந்து பத்து அறைகளை காண்பித்தார்.
இரவு ஏழு மணிக்கு வித்யா குடும்பம் குற்றாலத்திலிருந்து திரும்பி வந்தது. இரவு எட்டு மணிக்கு எல்லோரும் சாப்பிட கிளம்பும் போது, அவசர அவசரமாக இசக்கி முத்து, சந்திர சேகருடன் கையில் சில தூக்குகளை சுமந்து வந்தார். இசக்கி முத்துவை சந்திர சேகர் எவ்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
"நான் தான் தீடீரென்று நினைத்துக் கொண்டு சமையல்காரரிடம் சொல்லி இன்று இரவு உங்கள் எல்லோருக்கும் சப்பாத்தி,குர்மா செய்யச்சொல்லி கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் இன்னும் சாப்பிடவில்லை என்று நினைக்கிறேன்"என்று கூறிய இசக்கி முத்து பாத்திரங்களை அவர்களிடம் அளித்தார்.
ஒரு கிண்ணத்தில் திருநெல்வேலி அல்வாவும் இருந்தது.
சப்பாத்தி,குர்மா சுவை அபரிமிதமாக இருந்தது. குர்மாவில் ஏலக்காயின் மணம் மிகுந்திருந்தது.
இரவு 9 மணி போல வள்ளிநாயகம் வேனில் சுப்பிரமணிய பிள்ளை குடும்பத்தினரும், வள்ளி நாயகம் குடும்பத்தினரும் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.
மறு நாள் திருமணம் களை கட்ட தொடங்கிவிட்டது. இசக்கிமுத்து தான் திருமண வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். சமையலுக்கு வேண்டிய சாமான்கள் எடுத்துக் கொடுப்பதும்,அப்போதைக்கப்போது, மண்டபத்தை சுத்தம் செய்ய வேலையாட்களை முடக்கி விடுவதும், வருபவர்களை வரவேற்பமதுமான வேலைகளை அவர் பார்த்துக் கொண்டிருந்தார் .
இரண்டு பக்க உறவினர்களும் வர ஆரம்பித்தனர்
No comments:
Post a Comment