Monday, March 4, 2024

முற்பகல் செயின்..55

 முற்பகல் செயின்..55

By N Krishnamurthy 

அன்று இரவு எல்லோரும் கடையநல்லூரில் பொதிகை எக்ஸ்பிரஸை பிடித்தார்கள். ஸ்டேஷனுக்கு வழி அனுப்ப, பிள்ளையும்,அவர் மூத்த பிள்ளையும் வந்திருந்தார்கள். எல்லோருக்கும் கிட்டத்தட்ட அருகருகே இடம் கிடைத்தது. வழக்கம்போல மதுரையைத் தாண்டியவுடன் கையில் கொண்டு வந்திருந்த சப்பாத்தியையும், தக்காளி சட்னியையும்,  சாப்பிட்டார்கள். ஆதித்யா மறக்காமல் 5 லிட்டர் கேனில் தாமிரபரணி தண்ணீர் கொண்டு வந்திதிருந்தான். அதை எல்லோரும் பருகினார்கள்.

திரு, நித்யா, தேன்மொழி மற்றும் ஆதித்யா தாம்பரத்தில் இறங்கிக் கொண்டார்கள்.  தனக்கு எக்மோர் தான் சௌகரியம் என்று கூறி மேற்கொண்டு ட்ரெயினில் காசிநாதனும், காந்திமதியும் பயணித்தார்கள்.

தாம்பரம் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த தேன்மொழி ஒரு ஆட்டோ பிடித்து அவளுடைய ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள். திரு , ஆதித்யா மற்றும் நித்யா டாக்சி பிடித்து வீட்டிற்கு திரும்பினார்கள்.

இவர்கள் வந்தவுடன் நமச்சிவாயம் "என்னப்பா. நீங்க போனதெல்லாம் சவுகரியமா முடிஞ்சுதா .இரவு ட்ரெயின்ல நல்லா தூங்கினீர்களா" என்றெல்லாம் கேட்டார். திரு "ஆமாம் அப்பா. எல்லாம் சௌகரியமாக முடிந்தது. உங்க பேரனுக்கு கல்யாண தேதியும் நிச்சயம் செய்து விட்டோம்" என்றார். அதைக் கேட்ட நமச்சிவாயம் "அடடா அப்படியா.எந்த தேதி" என்று கேட்டார். இதற்குள் கோமதியும் வந்து  அவர்களுடையடைய சம்பாஷணையில்  கலந்து கொண்டாள். எல்லா விவரத்தையும் திரு விளக்கமாக நமச்சிவாயத்திடமும்,கோமதியிடமும் கூறினார். "கேக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா" என்றார் நமச்சிவாயம் .

ஆதித்யா அவர்கள் இருவரிடமும் " அப்பா,அம்மா அமெரிக்கா போறதுக்கு முன்னம் கல்யாணம் பண்ணணன்ற நிர்பந்தத்தால் நீங்க ரெண்டு  பேரும் இல்லாமலேயே நிச்சயதார்தத்தை முடிக்க  வேண்டியதாயிடுச்சு" என்றான் குற்ற உணர்வுடன்.

" ஆதித்யா.இதல வருத்தப்பட என்னஇருக்கு. நாங்க வரலேன்னா என்ன.அதான் உங்க அந்த தாத்தா,பாட்டிதான் வந்திருந்தாங்களே.அப்புறம் என்ன"என்று அவனை தேற்றினார்.

அங்கு தாயாரித்த பத்திரிக்கையை திரு அவரிடம் காட்ட,  அவர் அதில் சிறு திருத்தங்களை செய்தார். அன்றே தமிழிலும், ஆங்கிலத்திலும் பத்திரிக்கை அடிக்க ஏற்பாடானது. 

அந்த வாரம் வியாழக்கிழமை அன்று நித்யாவும், திருவும்  வித்யாவை பார்க்க பெங்களூருக்கு சென்று விட்டார்கள்.

 வெள்ளிக்கிழமை மாலை தேன்மொழியுடன்  மெரினா பீச் சென்றிருந்த ஆதித்யா, அவளுடன் ஒரு மணி நேரம் கழித்த பின்னர் அவளுடன் வீட்டிற்கு வந்தான்.வழக்கம் போல ஞாயிறு மாலை வரை தேன்மொழி அங்கிருந்தாள்.ஞாயிறு இரவு அவளை அவளது ஹாஸ்டலில் விட்டு விட்டு வீடு திரும்பினான் ஆதித்யா.

திங்கள் காலை, தனக்கு ஆபிசில் தெரியப்போகும் அதிர்ச்சி செய்தி தெரியாமல் அவன் ஆபிஸ் கிளம்பினான். வழக்கம்போல வார முதல் நாளான திங்கள் சாதரணமாக போகும் என நினைத்திருந்தவனுக்கு அப்படி ஒரு செய்தி வந்து அவனை புரட்டிப்போடும் என அவன் எண்ணிப்பார்க்கவே இல்லை. கதை சீராக போய்க்கொண்டிருக்கும் போது இப்படி ஒரு திருப்பம் வரும் என்று நானே நினைக்கவில்லை.என்ன செய்வது? எல்லாம் அவன் செயல்.

No comments:

Post a Comment