🌶🌶🌶🌶மிளகாய் வயல்களிடையே ஒரு ஆன்மீக (ஆட்டோ)ப்பயணம்.
(v.v)பகுதி4...
வேதாத்ரி. நரசிம்மர் கோயில் செல்ல பாலத்தில் கிருஷ்ணாவைக்கடக்க மீண்டும் விஜயவாடா செல்வதைவிட கிருஷ்ணா ந்தியின் இடப்புறமாகவே சென்று படகு மூலமாக க்ருஷ்ணாவை கடந்து விடலாம் என புத்திசாலியாய் நவீன கொலம்பஸாய் மாறி புதிய வழி கண்டுபிடிக்க திட்டமிட்டேன்..
ஆனால் நவம்பரில் விஜயவாடா விபத்தால் படகுப்பயணம் நிறைய இடத்தில் நிறுத்தப்பட்டதாம்..மதியம் மட்டபல்லி யில் சாப்பிட வருவதாயும் ரூம் வேண்டும் எனவும் கூகுளில் தேடி எடுத்த போன் எண் மூலம் முக்கூர் ட்ரஸ்ட் மாமியிடம் சொன்னோம்..மாமி முதலில் வேதாத்ரி போய் பெருமாள் சேவித்து பின் மட்டபல்லி வர இரவாகி விடும் என வயிற்றில் புளி கரைக்க ,அங்குள்ளவர்களிடம் வழி எப்படி போக வேண்டும் என விஜாரிக்கலாம் என்றால் தெலுங்கும் தெரியாது..

பஸ் ஸ்டாண்டில் ஒருவரிடம் தலுங்லிஷில் (தமிழ்+ தெலுங்கு+ இங்லீஷ்)விசாரிக்க க்ரோசூர் என்ற இடம் வரை சென்று அப்புறம் எதோ வாயில் நுழையாத ஊர் பேர் சொல்லி முதலில் ferry ( பெரிய படகு) ஷேர் ஆட்டோ,மீண்டும் சில ஊர் வழியாய் போகச்சொன்னார்..
வந்தது வரட்டும் என்று முதலில் சொன்ன க்ரோசூர் பஸ் ஏறினேன்...மீண்டும் பச்சை மிளகாய் பயிர்களை பார்த்துக்கொண்டே 2 மணி நேர பயணம்..க்ரோசூரிலிருந்து என்னோட மாமனார் எனக்காக பஸ் நேரே வேதாத்ரி விடுவார் என பார்த்தால் அங்கு பஸ் ஸடாண்டே இல்லை..மீண்டும் தலுங்லிஷில் விசாரிக்க ஷேர் ஆட்டோக்காரன் ஒருவன் 300 தந்தால் மடிப்பாடு படகுத்துறை வரை எங்களை மட்டும் விடுவதாக சொன்னான்.
நான் 200 தரோம் எங்களை மட்டும் மேலே உள்ள சீட்டில் உட்கார வைத்து 10 ரூபாய் டிக்கட்டுகளை காலடியில் ஏற்றி கூடுதல் 100 ரூ சம்பாதித்து கொள்ள தாராள மனத்துடன் ( மனைவி முறைத்தாலும்) அனுமதித்தேன்.
குலுக்கல்,நெருக்கல் என 25 கிமீ😂ஷேர் ஆட்டோ பயணம் மடிப்பாடு படகுத்துறையில் முடிந்தது...இங்குபடகு என்றால் தோணி இல்லை...லாரி முதல் சைக்கிள் வரை அனைத்தையும் ஏற்றி அக்கரை சேர்க்கும் ஒரு நகரும் மினி bridge.நாங்கள் போனபோது லாரியை விட பெரிதாய் ஒரு பொக்லைன் ஆட்டோ, கார்,என நிற்க ஓரமாய் ஓவர் வெய்ட்டில் மூழ்கிவிடுமோ என்று life belt ல் ஒரு கண்ணாய் இருக்க 5 நிமிடத்தில் அக்கரை.
தயாராய் ஷேர் ஆட்டோ😲25 கிமீ அதில் பயணித்தால்தான் ஜக்கையாபேட் போய் அங்கு வேறு ஷேர் ஆட்டோவாம்..காலை இட்லிக்குப்பிறகு எதுவும் சாப்பிடாது 100 கிமீ ஷேர் ஆட்டோ பயணமும் பசியும் வயிற்றை பதம்பார்க்க வேதாத்ரி அடைந்தோம்..😩
No comments:
Post a Comment