🌶🌶🌶மிளகாய் வயல்களிடையே ஒரு ஆன்மீகப்பயணம்.( v.v) பகுதி 3...
. மறுநாள் ஆந்திராவின் புதியதலைநகரும்,சரித்திர சிறப்பு பெற்ற நகரமான அமராவதி சென்று அமரேஸ்வரரை தரிசித்து பின் மட்டபல்லி செல்ல திட்டம்.விடுதி திரும்பி கூகுளில் வழி தேடுகிறேன்.போனில் 1000 க்கும் மேற்பட்ட மெசேஜ்கள்.
எனது 25 க்கும் மேற்பட்ட குழுக்களிலிருந்து..ஆன்லைனில் ஒரு புதிய கால் .ஒருவர் நம் குழுவில் முஸ்லீம்கள் நுழைந்து ஆபாச புகைப்படம் அனுப்புவதாக சொல்லி கட் ஆகிறது.பதட்டமடைந்து அனைத்து குழுக்களில் தேடியதில் தமிழும் வைணவமும் குழுவில் ஏராளமானவர் உள்ளே நுழைந்து ஏதேதோ பதிய குழுவின் பெண்களும் ஸ்ரீவைஷ்ணவர்களும் தெறித்து ஓட ஒரே கலாட்டா..குழு லிங்க் ஒன்றில் விளம்பரம் தந்ததன் விளைவு.குழுவில் இசுலாமியர் ஊடுருவல் என்றும், பாகிஸ்தான் ,துபாய் எண்கள்,என்றும் ஹேக்கர்கள் வந்து போனை செயலழிக்க வைப்பார்கள் என்றும் ஒரே களேபரமாய் பேச்சு..ஒருவர் லிங்கை செயலிழக்க வைக்க சொல்கிறார்..257 ஐ தாண்டியதால் add member ல் நுழைய முடியவில்லை..நண்பர் செல்வத்தை தொடர்பு கொள்ள இயலவில்லை..யாரை வெளியேற்றுவது எனதெரியாமல் மீண்டும் போன் செய்த நண்பரையே தொடர்பு கொண்டு அவரை அட்மினாக பதவி பிரமாணம் 😃செய்ய வைத்து எதிரிகளை விரட்டுகிறோம்.
மற்ற நண்பர்களும் உதவ குழு கட்டுக்குள் வர இரவு 11 மணி ஆகிறது.. நான் அமராவதியை மறந்து உறங்கச்செல்கிறேன்..கனவில் பாகிஸ்தான் உளவுத்துறை எனது குழுவை முடக்க சதிதிட்டம் தீட்ட அதை இந்து இளைஞர் முறியடிக்கிறார்..😂மறுநாள் அமராவதியை அடைகிறோம்..
சமீபத்தில் ஆந்திராவின் புதிய தலைநகராக நவீன அமராவதி நகரை உருவாக்க பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டியுள்ளார். கிருஷ்ணா நதிக்கரையோரம் உள்ளது அமராவதி கி.பி. 2ம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 1800 வரை அமராவதி ஆந்திராவின் கலாசாரத் தலைநகராகத் திகழ்ந்தது. அமராவதி என்றால் தெலுங்கில் ‘எப்போதும் வாழ்ந்திடும் நகரம்’ என்று பொருளாகும்.
அசோகப் பேரரசால் மதப் பிரசாரம் செய்ய அனுப்பப்பட்ட ஒரு புத்த பிட்சு, இங்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிவரை இது ஆந்திரர்களின் தலைநகராக இருந்தது. அமராவதியில் உள்ள அமரேஸ்வரா கோயில் உலகப்புகழ் பெற்றது.அக்கோயிலின் 5000 கோடி பெறுமான நிலங்கள் நம் ECR ரோடில் அரசியல் வியாதிகள் பிடியில்..
அமராவதி நகரில்தான் புத்தர் ‘காலச்சக்ரா’ எனப்படும் போதனைகளை உபதேசம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கு, புத்தரின் புனித எலும்பு ஒன்று புதைக்கப்பட்டு அதன்மேல் ஸ்தூபம் ஒன்று கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள பெளத்த ஸ்தூபங்களிலேயே இதுதான் உயரமானது. இது அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதுகிறார்கள். இந்த ஸ்தூபத்தை சுற்றிலும் கி.பி.150லிருந்து 200ம் ஆண்டிற்குள்ளாக பெளத்த குருவான நாகார்ஜுன் சுற்றுச்சுவர்களை அமைத்தார்.
இந்த ஸ்தூபியில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் புத்தரின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும் எடுத்துரைக்கின்றன. அமராவதி நகரம், சதவன்ஹனாஸ் மகாராஜாக்களின் ஆளுகைக்குள் வந்தபோது அமராவதி ஸ்தூபம் சுண்ணாம்புக்கற்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டதுடன், புத்தரின் முழு உருவச் சிலைகள் வடிக்கப்பட்டன. புத்த மதத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அமராவதி ஸ்தூபம் மண்ணுள் புதையுண்டது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி Colin Mackenzie.கி.பி 1796ம் ஆண்டு அமராவதி நகருக்கு வந்த இவர்தான் புதைந்து கிடந்த புத்த ஸ்தூபியைக் கண்டுபிடித்து தோண்டி எடுத்தார்.
அப்போது ஸ்தூபியுடன் முன்பு இணைந்திருந்த சிற்பங்களையும் கண்டுபிடித்து புதுப்பித்தார். புத்தர் தியான நிலையில் அமர்ந்துள்ளதைப் போல் பிரம்மாண்ட சிலை இங்கு உள்ளது. அமராவதியில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தில் 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலைகள், தாமரை மற்றும் பூர்ணகும்பா உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் ஏராளமாக உள்ளன. அமராவதியின் நற்பேறு மற்றும் செல்வச் செழிப்பைக் குறிக்கும் வகையிலான கலைப் படைப்புகள் ஏராளமாக உள்ளன.கோயிலுக்கு அருகில் இறங்கிக்கொண்டோம்.
கோயில் வளாகத்திலேயே தங்கும் விடுதி அமராவதி நதிக்கரையில்...கோயிலில் அமரலிங்கேஸ்வர்ர் 15 அடி உயரத்தில் மெலிந்த வடிவில் வெண்ணிறத்தில் சுண்ணாம்புக்கல்லில் அருள் பாலிக்கிறார். ,அருகில் தனி சன்னிதியில் வேணுகோபாலரையும் தரிசித்தோம்.மறுநாள் புத்தர்சிலை, புத்தமத மியூசியம் கண்டோம்..
மட்டபல்லி செல்ல பேருந்து தேடியபோதுதான் தெரிந்தது... கிருஷ்ணாவின் தென்புறம் அமராவதி இருப்பதும் மட்டபல்லி செல்ல வடகரை செல்ல வேண்டுமென்றும் நதியைக்கடக்க விஜயவாடாவை விட்டால் பாலம் இல்லை என்பதும்..இரவு கலாட்டாவில் இதை பார்க்க மறந்த என்னைபார்த்து அமரேஸ்வரர் புன்னகைக்கிறார்..( நாளை ...வேதாத்ரி நோக்கி )
No comments:
Post a Comment