Saturday, February 6, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 72

🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 72 🌹🌹🌹
அருள்மிகு மாயப்பிரான் திருக்கோவில் :-
திருப்புலியூர் (குட்டநாடு)
மூலவர்: மாயப்பிரான்
தாயார்: பொற்க்கொடி நாச்சியார்
உற்சவர்: மாயப்பிரான்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: புருஷோத்தம விமானம்
தீர்த்தம்: பிரஞ்ஞா ஸரஸ், பூஞ்சுனை தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ பொற்க்கொடி நாச்சியார் ஸமேத ஸ்ரீ மாயப்பிரான் ஸ்வாமிநே நமஹ

ஊர்: குட்டநாடு
🌺🌺 திருப்புலியூர்:-
பூகோளத்தை காக்கும் புண்ணியனாம் இறைவன் நாராயணன் புலிதேவதை என்னும் அசுரப் பெண்ணை அழித்ததால் இத்தலத்திற்கு "திருப்புலியூர்" என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

🌺🌺 தலவரலாறு :-
ஒரு முறை சிபி சக்கரவர்த்தியின் மகனாக விருசாதார்பி என்பவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அப்போது அவனது நாட்டில் கொடிய வறுமை ஏற்பட்டது. அச்சமயத்தில் அவனது நாட்டிற்கு சப்தரிஷிகளும் வருகை புரிந்தனர்.

அவர்களிடம் மன்னன் தனக்கும் தன் நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை போக்கும்படி வேண்டினான். அவர்கள் தமது தவ வலிமையால் நாட்டை செழிப்புறச் செய்தனர்.

இதனால் மன்னன் ரிஷிகளுக்குக் கொடுப்பதற்காக மந்திரிகள் மூலம் தங்கத்தையும், பழங்களையும் அனுப்பி வைத்தான். இதை ரிஷிகள் வாங்க மறுத்து விட்டனர்.

ரிஷிகளின் இந்தச் செயலால் மன்னன் மிகவும் மனமுடைந்தான். மாபெரும் யாகம் ஒன்றை நடத்தி அதில் தோன்றிய தேவதையைக் கொண்டு சப்தரிஷிகளையும் சமாதானம் செய்வதற்காக அனுப்பி வைத்தான்.

ஆனால் அப்பெண்ணோ அசுரத் தன்மையால் முனிவர்களை அடக்க எண்ணினாள். இதனையறிந்த ரிஷிகள் தானம் பெற்றால் தங்களுக்கு பொன்னாசை ஏற்படும் என்று தங்களைக் காக்க "அகிலத்தைக் காக்கும் ஜகத்ரக்ஷகனான திருமாலை" வேண்டினார்கள்.

இவர்களது வேண்டுதலை ஏற்ற திருமால், புலித்தேவதையை தடுத்து காத்ததால், இத்தலம் "திருப்புலியூர்" என்றானதாகக் கூறப்படுகிறது.
மாயமாக வந்த தேவதையை அடக்கிய பிரான் என்பதால் இத்தல இறைவனுக்கு "மாயபிரான்" என்பது திருநாமம்.

🌺🌺 மங்களாசாசனம் :-
"அன்றி மற்றோர் உபாயமென் தண்துழாய் கமழ்தல்
குன்ற மாமணி மாட
மாளிகைக் கோலக் குழாங்கல் மல்கி தென்திசைத்
திலதம் புரை குட்டநாட்டுத்
திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம்
இவள் நேர்பட்டதே!!!"

- நம்மாழ்வார்.

🌺🌺 சிறப்புகள் :-
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் குறிப்பிடும் குட்டநாடு பகுதியில் அமைந்துள்ள மலையாள நாட்டு திவ்யதேசம்.
திருமகள் பிராட்டி பொற்க்கொடி நாச்சியார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

நம்மாழ்வார் - 11, திருமங்கையாழ்வார் - 1, ஆகியோர் 12 பாசுரங்கள் பாடியருளியுள்ள திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம்:-
ஆலப்புழா மாவட்டம், செங்கனூரிலிருந்து 5 கீ.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. செங்கனூர் இரயில் நிலையத்திலிருந்து மாவேலிக்காரா செல்லும் பேருந்து மார்க்கத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு மாயப்பிரான் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு பொற்க்கொடி நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில்:-
அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோவில் - திருவாறன் விளை திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment