❤️ தேங்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்புஅரை கப்
பெரிய வெங்காயம்1
பச்சை மிளகாய் 2
தக்காளி1
உருளைக்கிழங்கு1
கேரட்1
பீன்ஸ்2
புளிக் கரைசல்கால் கப்
உப்புதேவைக்கேற்ப
சர்க்கரை1 டீஸ்பூன்
மல்லித் தூள்2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல்அரை கப்
கொத்தமல்லி இலை1 கைப்பிடி
தண்ணீர் தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை :
முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் களைந்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 3-4 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்பு அத்துடன் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து உப்பு மற்றும் சர்க்கரை தூவி, நன்கு பிரட்டி விட வேண்டும்.
பிறகு அதில் மசாலாப் தூள்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, தண்ணீர், புளிக் கரைசல் சேர்த்து மூடி வைத்து காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும். அதற்குள் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் மூடியைத் திறந்து, பருப்பை மசித்து ஊற்றி ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு தூவி, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லி இலையைத் தூவினால், தேங்காய் சாம்பார் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :
இதை சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
No comments:
Post a Comment