Monday, November 1, 2021

வெள்ளரிக்காய் சாம்பார்

 ❤️ வெள்ளரிக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
வெள்ளரிக்காய் கால் கிலோ 
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2 
தக்காளி 1 
துவரம் பருப்பு 1 கப்
கடுகுஅரை டீஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன் 
மல்லி தூள் அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை 1 கைப்பிடி 

செய்முறை :

  வெள்ளரிக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கி பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கவும்.

  ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை எடுத்துக்கொண்டு, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்.

  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் சீரகம் போடவும்.

  அதன் பின்னர் நறுக்கின வெங்காயம் மற்றும் வெள்ளரிக்காய் போட்டு வதக்கவும்.

  நன்றாக வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

  வேக வைத்து எடுத்த துவரம் பருப்புடன் சிறிது தண்ணீர் விட்டு இதில் சேர்க்கவும். மேலும் 15 நிமிடம் வேக விடவும்.

  பின்னர் அதில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். இப்பொழுது சுவையான வெள்ளரிக்காய் சாம்பார் ரெடி. 

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :

 இதனை சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment