Monday, November 1, 2021

மாம்பழ சாம்பார்

 :

சாம்பார் ஸ்பெஷல்.....

❤️மாம்பழ சாம்பார்

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
துவரம்பருப்புஅரை கப்
மாம்பழம் 2
பெரிய வெங்காயம் 2
தக்காளி 3
புளிஎலுமிச்சை அளவு
மிளகாய்தூள் 2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள்1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள்அரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் 
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

  மாம்பழத்தை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். துவரம் பருப்பு மற்றும் மஞ்சள்தூள், வெங்காயம், தக்காளி, மிளகாய்தூள், தனியா தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள். பருப்பு முக்கால்பதம் வெந்தபின் புளியை அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி பருப்பில் ஊற்றுங்கள்.

  இது பச்சை வாசனை போக கொதித்ததும் மாம்பழத்தை கையால் லேசாக பிசைந்து சேருங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சேருங்கள். இப்போது சுவையான மாம்பழ சாம்பார் தயார்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்.

No comments:

Post a Comment