❤️ காலிஃப்ளவர் சாம்பார்
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் 1
துவரம் பருப்புகால் கப்
வெங்காயம்1
தக்காளி2
பச்சை மிளகாய்4
இஞ்சி பூண்டு விழுது2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழைஒரு கைப்பிடி
பட்டை2
கிராம்பு4
ஏலக்காய்2
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும். பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
காலிஃப்ளவரை தனித்தனி பூக்களாக பிரித்து எடுத்து தேவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்த சுடுத்தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடித்த மசாலாவை போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கி விட்டு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கி பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் வேக வைத்த பருப்பு மற்றும் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
பருப்பு கலவை கொதித்ததும் காலிஃப்ளவரை தண்ணீரை வடித்து விட்டு கொதிக்கும் குழம்பில் போட்டு ஐந்து நிமிடம் வைத்திருந்து வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான காலிப்ளவர் சாம்பார் தயார்
No comments:
Post a Comment