Monday, November 1, 2021

கிரீன் சாண்ட்விச்

 கிரீன் சாண்ட்விச்:

➖➖➖➖➖➖➖➖

தேவையானவை:

 பிரெட் துண்டுகள் - 6, நெய் - சிறிது, தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், கோஸ் - கேரட் (இரண்டும் சேர்த்து) - கால் கப், துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

சட்னி செய்ய: புதினா - ஒரு கைப்பிடி, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 துருவிய கேரட், கோஸ், பனீர், உப்பு ஆகியவற்றுடன் தக்காளி சாஸ் ஊற்றிக் கலந்துகொள்ளவும். சட்னி செய்ய கொடுத்துள்ள பொருட்களை, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். பிரெட்டின் இருபுறமும் வெண்ணெய் தடவி, ஒருபுறத்தில் சட்னியைத் தடவவும். இதன் மீது கலந்து வைத்துள்ள காய்கறி - சாஸ் கலவையை வைத்து, சட்னி தடவிய மற்றொரு பிரெட் துண்டை வைத்து மூடவும். தோசைக்கல்லில் நெய் சிறிது ஊற்றி சாண்ட்விச்சை இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment