தக்காளி தொக்கு
தேவையான பொருட்கள்
தக்காளி - 4 (பெரியது)
பச்சைமிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன் (காரத்துக்கேற்ப)
கடுகு - தேவைக்கேற்ப
சீரகம் - 1ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
கொத்துமல்லி தலை - சிறியது
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன்
சர்க்கரை - 1/2ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை விளக்கம்
முதலில் தக்காளியை நன்றாகக் கழுவி, பின் வெங்காயம்,தக்காளி,மிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் கொதித்தவுடன் கடுகு,சீரகம் தாளித்து, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கி,லைட் ப்ரவுன் கலரானதும் தக்காளியைச் சேர்க்கவும்.
தக்காளி ஓரளவுக்கு வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து நன்றாக கிளறி, மூடி போட்டு குறைந்த தணலில் வேகவிடவும். (தண்ணீர் சேர்க்கக்கூடாது).
அவ்வப்பொழுது, மூடியைத்திறந்து தக்காளியைக் கிளறிவிடவும். நன்கு சுருண்டு வரும்போது மீதமிருக்கும் 1டேபிள்ஸ்பூன் எண்ணெயையும் ஊற்றி அடிபிடிக்காமல் கிளறிவிடவும்.
கலவை நன்றாக சுண்டி,எண்ணெய் மிதக்கும் பக்குவம் வந்ததும், சர்க்கரை,பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.நன்கு ஆறியதும் ஈரமில்லாத பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.இப்போது சுவையான தக்காளி தொக்கு தயார்.
🌼
தக்காளி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
நல்லெண்ணை - 200 கிராம்
புளி - 75 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
கடுகு - 10 கிராம்
மிளகாய்த் தூள் - 30 கிராம்
பூண்டு - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை விளக்கம்
முதலில் தக்காளியை நன்றாகக் கழுவி, தண்ணிர் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும்.பின் அடுப்பை பற்ற வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை போட்டு 5 நிமிடம் மூடிவைக்க வேண்டும். இடையில் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும், 10 நிமிடம் ஆனபிறகு தக்காளியை கரண்டியால் அமுக்கி கிளறிவிட வேண்டும்.
பூண்டு உரித்து அம்மியில் தட்டி வைத்து கொள்ள வேண்டும். பிறகு புளியை காம்பு இல்லாமல் சிறிது சிறிதாக உதிர்த்து விட வேண்டும். 5 நிமிடத்திற்குப் பிறகு தட்டி வைத்த பூண்டை தக்காளியில் போட்டு அடிபிடிக்காமல் கிளற வேண்டும்.
பிறகு மிளகாய் தூள் உப்பு போட்டு கிளற வேண்டும். தக்காளி, புளி, பூண்டு வெந்து இறக்கும் நேரத்தில் கடுகு, வெந்தயம், வறுத்து அதில் கொட்டி கிளறி இறக்க வேண்டும்.
எண்ணெயை தனியாக எடுத்து விட்டு மத்தால் நன்றாக கடைய வேண்டும். தக்காளி நன்றாக மசிந்தபிறகு அதே எண்ணெய்யை வைத்து கடுகு போட்டு தாளித்து இதனுடன் சேர்த்து கொள்ளவும்.இப்போது காரமான தக்காளி ஊறுகாய் தயார்.
🌼
தக்காளி குழம்பு
தேவையான பொருட்கள்
நாட்டுத் தக்காளி/பெங்களூர் தக்காளி – தலா 2 (மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்).
பூண்டு – 2 பல்.
பொடியாக நறுக்கிய தேங்காய் – தேவைக்கேற்ப.
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்.
மிளகாய்த்தூள் – 11/2 டீஸ்பூன்.
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்.
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1/2 டீஸ்பூன்.
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – தேவைக்கேற்ப.
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை விளக்கம்
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போடவும்.பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, அரைத்த தக்காளி விழுது அல்லது பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போனதும், சீரகத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.இப்போது சுவையான தக்காளி குழம்பு தயார்.
🌼
தக்காளி சூப்
தேவையான பொருட்கள்
மிகவும் நன்றாகப் பழுத்த தக்காளி - 5
வெள்ளைப் பூண்டு - 4 பல்
வறமிளகாய் - 4 அல்லது 5
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
மல்லி (தனியா) - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை விளக்கம்
முதலில் தக்காளியைக் கழுவி நறுக்கி வைக்கவும்.வெள்ளைப்பூண்டு, இஞ்சி இரண்டையும் தோல் நீக்கி, பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.மல்லியை வறுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஐந்து கப் தண்ணீர் ஊற்றி தக்காளி, வெள்ளைப்பூண்டு, மல்லி, இஞ்சி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுக் கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்தபின் இறக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.பிறகு அதை வடிகட்டி உப்பு சேர்த்து மீண்டும் அடுப்பில் வைக்கவும்.சுமார் 10 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
பின் கடாயில் எண்ணைய் ஊற்றி, கடுகு, சீரகம் தாளிக்கவும்.இதனுடன் கறிவேப்பிலை, மிளகாய் இரண்டையும் சேர்த்து வறுக்கவும்.இதை, சூப்பில் சேர்க்கவும்.இப்போது சுவையான தக்காளி சூப் தயார்.
🌼
No comments:
Post a Comment