தக்காளி ஜூஸ்
பகிர்வு➡️
Mallika👩🍳
தேவையான பொருட்கள்
உப்பு – ஒரு சிட்டிகை,
மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்,
தேன் – 3 டீஸ்பூன்.
அலங்கரிக்க: புதினா இலை – 7.
செய்முறை விளக்கம்
கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து, தக்காளி போட்டு, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தக்காளியை குளிர்ந்த நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்தால், தோலை சுலபமாக உரித்தெடுக்க முடியும். இப்போது, தக்காளியை நன்றாக அரைத்தெடுத்து, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இதனுடன், மிளகுத் தூள், தேன் கலந்து, 15 நிமிடங்கள் வைத்திருந்து, புதினா இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இப்போது சுவையான தக்காளி ஜூஸ் தயார்.
🌼
தக்காளி ஜாம்
தேவையான பொருட்கள்
சர்க்கரை - 750 கிராம்.
சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி.
செய்முறை விளக்கம்
தக்காளியைச் சுத்தம் செய்து தோல், விதைகளை நீக்கி சதைப்பகுதிகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அவற்றை மிக்ஸி மூலம் கூழாகும் வரை அரைத்து வடிகட்ட வேண்டும் (இதுவே தக்காளி பழக்கூழ்).கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளிக் கூழை பாத்திரத்தில் இட்டு, சிறிது நேரம் வேகவிட்டு ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.
நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால் கெட்டியாக விழ வேண்டும். அதுவரை கலவை வேக வேண்டும்.
இந்தப் பதம் வந்தபின் பாத்திரத்தை இறக்கி வைத்து கொஞ்சம் மட்டும் ஆறவிட்டு, வாய் அகன்ற கண்ணாடி பாட்டில்களில் சூடாகவே நிரப்பி வைக்க வேண்டும்.இந்த நிலையிலேயே முழுவதும் ஆறவிட்டு, அதன்பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும்.
மரப்பலகை மீது வைத்துக் கொண்டால், சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும். இப்போது குளிர்ச்சியான தக்காளி ஜாம் தயார்.
🌼
தக்காளி குருமா
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1 1/2
எண்ணெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
கொத்தமல்லி – தேவைக்கேற்ப
அரைக்க தேவையான பொருட்கள் :
தேங்காய் – 2 துண்டு
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 5 பல்
முந்திரி அல்லது பாதாம் – 10
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு, பெருஞ்சீரகம், மிளகு – தலா 1/2 ஸ்பூன்.
செய்முறை விளக்கம்
முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்.பின் தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம், மிளகு போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பாதியாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு சிறிது வதக்கிய பின் அரைத்து வைத்த மசாலா, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும்.தேவைப்பட்டால் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.இப்போது சுவையான தக்காளி குருமா தயார்.
🌼
No comments:
Post a Comment