Saturday, February 13, 2021

மிளகாய் வயல்களிடையே ஒரு ஆன்மீகப்பயணம் பகுதி 7

 🌶🌶🌶🌶🌶🌶மிளகாய் வயல்களிடையே ஒரு ஆன்மீகப்பயணம்..(v.v), பகுதி 7 

நாங்கள் தங்கியிருந்த யக்ஞ வாடிகா முக்கூர் நரசிம்மாசார் சுவாமிகள் மட்டபல்லிநாதன் மீது கொண்ட பக்தியால் ஏற்படுத்திய தங்குமிடம்...அவரது திரு உருவசிலைக்கு நித்ய ஆராதனம் நடை பெறுகிறது..கோசாலையும் அமைத்து பராமரிக்கிறார்கள்.மட்டபல்லியின் கிருஷ்ணா நதிக்கு மறுபுறம் மீண்டும் ஃபெர்ரியில் கடந்து ஷேர் ஆட்டோ ஏறி நரிக்குடிஎன்ற ஊரை அடைந்து அங்கிருந்து 20 கிமீ ல் வாட பல்லி அடையலாம்.4) வாட பல்லி..கிருஷ்ணா மற்றும் மூசி நதிகள் சங்கமிக்கும் இடமான இந்த நதிக்கரையில் கோயில் கொண்டுள்ளான் எம்பெருமான் வாடபல்லி நாதன். அதே நதிக்கரையில் அபூர்வமான சிவனும் கோயில் கொண்டுள்ளான். இத்தல வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது. இதனைக் குறித்த முக்கூர் சுவாமிகளின் விளக்கம் இன்னும் ஆனந்தம்.

“வாடபல்லி ஷேத்திரத்திற்குத் `தீபாலயம்’ என்று பெயர். மூசி நதியும் கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும்படியான ஷேத்திரம். அப்படிப்பட்ட ஷேத்திரத்திலே அகஸ்தியருக்குச் சேவை கொடுத்தான் எம்பெருமான்.

வாடபல்லியிலே, பூமாதாவோடு சேர்ந்த மூர்த்தியாக அவன் காட்சியளிக்கிறான். அங்கே கிருஷ்ணா நதிக்கரையிலே ஈஸ்வரன் ஆலயம் இருக்கிறது. அந்த ஈஸ்வர மூர்த்தி சிரஸிலிருந்து கங்கையானது சலசலவென்று பெருகிவருகிறது — இன்றைக்கும் பார்க்கலாம் — கங்கையானது கொட்டிக்கொண்டே இருக்கிறது.

ஈசுவராலயத்தைத் தாண்டி உள்ளே கோட்டைக்குள்ளே நரசிம்ஹன் ஆலயம். தீபாலயம் என்று அதற்குப் பெயர். கார்த்திகை மாதத்திலே அங்கே யக்ஞம் பண்ணுவதுண்டு. `தீபாலயத்தில் யக்ஞம் பண்ணு’ என்று லஷ்மி நரசிம்ஹன் ஆக்ஞாபித்தான். அது எங்கு இருக்கிறது என்று முதலில் தெரியவில்லை. அப்புறம் விசாரித்தால் இந்த இடம் என்று சொன்னார்கள். ஆச்சர்யமான ஷேத்திரம் அது. பகவானுடைய மூக்குக்கு நேரே ஒரு தீபம் இன்றைக்கும் எரிந்துகொண்டு இருக்கிறது. அவன் திருவடிக்கு நேரே ஒரு தீபம் எரிந்துகொண்டிருக்கிறது — ஜூவாலை.

கர்ப்பகிருஹத்தினுள்ளே காற்று புகக்கூட இடமில்லை. அவ்வளவு நெருக்கமான இடம். அந்த இடத்திலே மூக்குக்கு நேரே இருக்கிற ஜூவாலை மாத்திரம் ஆடிக்கொண்டே இருக்கும். அங்கே போகிறவர்களுக்கு நன்றாகத் தெரியும். கீழே இருக்கிற தீபம் அப்படியே ஆடாமல் இருக்கும். மூக்குக்கு நேரே இருப்பது மட்டும் ஆடும்! இதிலிருந்து என்ன தெரிகிறது? எம்பெருமானுடைய மூச்சுக் காற்றானது அப்படியே அந்த தீபத்தின் மேல் காற்றுப்பட்டு அலைகிறது. அவ்வளவு ஜீவ களையோடு பரமாத்மா அங்கே எழுந்தருளியிருக்கிறான்” என்று முக்கூர் சுவாமிகள் தனது ‘குறையொன்றுமில்லை' புத்தகத்தில் வாடபல்லியை வர்ணித்துள்ளார்.வாட பல்லிநாதன் தரிசனத்துடன் நான்கு ஷேத்திரங்கள் முடிந்தாலும் கடினமான காட்டில் கோயில் கொண்டுள்ள ஐந்தாவது நரசிம்மரை தரிசிக்க வேண்டாமா? 5)கேதாவரம்...ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள வாடபல்லியில் இருந்து 60 கி.மீ.ள தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில். 11ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட கேதவர்மா என்ற மன்னரின் பெயரால் ஊருக்கு இந்தப்பெயர் வந்தது. இவரது பக்கத்து நாட்டை ஆட்சி செய்த யாதவ மன்னர் ஒருவரின் கனவில், நரசிம்மர் தோன்றி கேதவரம் மலையில் ஓரிடத்தில், தான் இருப்பதை உணர்த்தினார். இந்தத் தகவலை கேதவர்மாவுக்கு தெரிவித்தார்

யாதவமன்னர். கேதவர்மா மலையில் ஏறி சுயம்புவடிவ நரசிம்ம வடிவம் இருப்பதை பார்த்தார். உடனடியாக அங்கு கோயில் கட்டினார். அங்கு போதிய இடம் இல்லாததால், அடிவாரத்தில் ஒரு கோயில் கட்டி விழாக்களை நடத்தினார்.

அடிவாரக்கோயிலில் லட்சுமியுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் சந்நதியும் உள்ளது. இந்த தலத்தில் ஸ்ரீகிருஷ்ணவேணி உத்திர வாஹினியாய் எம்பெருமானின் வடக்கு பக்கத்தில் ஓடுகிறாள். பெருமாளோ பர்வதத்தின் மேலேயும், நதிக்கரையிலுமாக இரு மூர்த்திகளாக வீற்றிருக்கிறான். இங்கு பெருமாள் கேதவரநாதனாக வணங்கப்படுகிறா ன்.பஞ்ச நரசிம்ம யாத்திரை நிறைவு..படங்கள்1) முக்கூர் ஸ்வாமிகள் திரு உருவச்சிலை2) கேதாவரம் நர சிம்மர்3)வாடபல்லி நரசிம்மர்... அடுத்து...ஸ்ரீசைலம் நோக்கி...தொடரும்




No comments:

Post a Comment