தென்னக பிரயாகை நல்லூர் வில்வாரண்யேஷ்வரர் ஆலயம்
உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக் (திருவேணி சங்கம்) போன்று மணிமுத்தாறு ஆறு, கோமுகி ஆறு மற்றும் மயூரா நதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. அதனால் நல்லூர் தென்னக பிரயாகை என்று அழைக்கப்படுகிறது
அசுரர்களை கொன்றதால் முருகனுக்கு வீரகத்தி தோஷம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டதன் மூலம் தனது தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற்றார்.
மதுரை மன்னன் வீரபாண்டி தன் தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைக்க எடுத்துச் செல்லும்போது வழியில் இங்கு தங்கினான். காலையில் நீராடி நதிநீரை கலசத்தின்மேல் தெளித்ததும் அந்த அஸ்தி தங்க நிறத்தில் மாற வீரபாண்டியன் அந்த அஸ்தியை இந்த சங்கமத்திலேயே கரைத்து விட்டான். இந்த பிரயாகை கங்கையை விட புனிதமானது.
பாண்டவர்கள் ஐவரும் தனித்தனி லிங்கங்கள் பிர்திஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். ஆற்றின் மறுகரையில் அவர்கள் ஐவரும் தங்கியிருந்த கிராமம் ஐவதுகுடி.
சிறப்புகள்:
சந்திரன் தன் நோய் நீங்க பூஜை-சோமலிங்கேஸ்வரர். முருகன் அசுரைக் கொன்ற பாவம் தீர மயூர நதி தீர்த்தம் உருவாக்கி வழிபட்டு தன் தோஷம் நீங்கினார்.
இக்கோயில் மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மணிமுத்தாறு ஆறு, கோமுகி ஆறு, மயூரா ஆறு ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் வடபுறத்தில் மணிமுத்தாறு ஆறும், கிழக்குப் பகுதியில் கோமுகி ஆறும், தெற்கே மயூரா ஆறும் பாய்கின்றன. இந்த மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் ஒரு உயரமான பகுதியில் கோயில் அமைந்துள்ளது.
ராஜகோபுரத்திற்குப் பிறகு திருமண மண்டபங்கள் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முக மண்டபத்தின் விதானத்தில் மீன் சின்னம் உள்ளது.
மூலஸ்தான தெய்வம் வில்வவனேஸ்வரர் / நல்லநாயக்கர் / தர்மேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் .கிழக்கு நோக்கி இருக்கிறார்.
அவர் கருவறையில் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். தாயார் பிருஹன்நாயகி / பெரியநாயகி என்று அழைக்கப்படுகிறார் . அவள் கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் வீற்றிருக்கிறாள். அவள் சன்னதி கருவறையின் இடது பக்கத்தில் அமைந்துள்ளது. அவளுடைய சன்னதி சன்னதி, அர்த்த மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வீற்றியிருக்கும் பாலாம்பிகையை வேண்டிக் கொள்கின்றனர்.
பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது இவூரில் சிறிது காலம் தங்கியிருந்ததாக கூறுகிறார்கள் . அதற்கு ஏற்றாற்போல் இக்கோயிலில் பஞ்சபாண்டவர்கள் பூஜித்த லிங்கங்கள் உள்ளன
பீமன் மணலால் சிவலிங்கத்தை செய்து பூஜித்து அவர் வராததால் கோபத்தில் தன் கதையால் சிவனின் தலையில் அடித்தார் உடனே இறைவன் காட்சி தந்தார் என்று கூறுகிறார்கள் . இவ் மண்ணால் ஆனா பிளவு பட்ட லிங்கம் இறைவனின் கருவறை முன் மண்டபத்தில் வலது ஓரத்தில் இன்றும் உள்ளது ,
ஆற்றை கடந்தால் அங்கு பஞ்ச பாண்டவ்ர்கள் தங்கி பூஜித்த சிறு சிறு கோயில்கள் உள்ளது .
இக்கோயில் கடக ராசி உள்ளவர்கள் பார்த்து அருள் பெறவேண்டிய தலம் .ஒரு காலத்தில் வில்வமரங்கள் உள்ள காடுகளுக்கு நடுவே எம்பெருமான் உள்ளதால் இவருக்கு வில்வனேஸ்வர் என்ற பெயர் கிட்டியது .இன்றும் ஊருக்கு வெளியே சுற்றிலும் ஆறுகளால் சூழப்பட்டு நிறைய மரங்களுக்கு இடையே ரம்யமாக அமைதியாக காட்சி அளிப்பார் .
வடக்கு திசை நோக்கிய முருகன் :
இங்கு முருகனும் வடக்கு நோக்கிய சன்னதியில் பெரிய திருஉருவமாக உள்ளார். இது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு.
முருகன் அசுரர்களை அழித்தபோது வீரகத்தி தோஷம் பீடித்தது, அதனை போக்க முருகன் இந்த முக்கூடலில் வந்து இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றதாக ஐதீகம்.
அமைவிடம் :
சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வேப்பூர் என்ற ஊரில் இறங்கி விருத்தாசலம் பேருந்து ஏறி கண்டபங்குறிச்சி என்ற இடத்தில் இறங்கி 4 கிமீ சென்றால் இவ்வூரை அடையலாம். அல்லது விருத்தாசலம் சென்று பேருந்து நிலையத்தில் இருந்து தடம் எண் 7 ,22 மற்றும் ஆனந்தன் பேருந்துகள் நேரிடையாக செல்கின்றன . இங்கிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது .
No comments:
Post a Comment