Thursday, April 18, 2024

தன்வினை....16

 தன்வினை....16

By N Krishnamurthy 

அடுத்த நாள் வினயா குளித்துவிட்டு ஆபீஸ் கிளம்ப ஆயத்தமானபோது விமலா "எங்கடி கெளம்பறா"என்றாள்.

"வேறெங்கம்மா ஆபிசுக்குத்தான் "என்றாள் வினயா.

"நீ இன்னும் ஒரு வாரம் ஆபிஸ் வரவேணாம்னு ஜகன் நேத்து சொன்னாரே "என்றாள். "அப்படியாம்மா சொன்னார். நேக்கு மறந்து போய்ட்த்து"என்று கூறி தன் அறைக்கு திரும்பிச்சென்றாள். 

பதினோரு மணிக்கு வினயாவை சாப்பிட கூப்பிட அவள் அறைக்கு  விமலா சென்றபோது, அவள் பார்த்த காட்சி அதிர்ச்சி ஊட்டியது. தலைவிரி கோலமாக உட்கார்ந்து கொண்டு, வினயா கரியால் தரையில்  என்னவோ எழுதிக்கொண்டிருந்தாள். "என்னடி எழுதற "என்றாள் விமலா. வினயா விமலாவை ஏறெடுத்து பார்த்தபோது விமலா பயந்து போனாள். அவள் கண் செக்கச்செவேல் என்று சிவந்துபோயிருந்தது.

" நான் என்ன எழுதணம்னு எனக்கு காதில சொன்னத நான் எழுதறேன். நீ யார்டி என்ன கேக்க " என்று கூறி பெருங்குரலெடுத்து, பயங்கரமாக  சிரிக்க ஆரம்பித்தாள். "இங்க சித்த வாங்கோ" என்று கணேசனை கூப்பிட்டாள் விமலா.

ஒருவாரம் லீவு 

போட்டிருந்த கணேசன் என்னவோ ஏதோவென்று ஓடோடி வந்தார். அவரும் நிலைமையை கண்டு ஸ்தம்பித்து நின்றார்.  


வினயாவை பார்த்த அவர் " வேணாண்டா செல்லம். இப்படி தரையெல்லாம் எழுதி கருப்பாக்காதே"என்றார்.வினயா ஆக்ரோஷமாக " நீ எனக்கு கட்டளை இடறயாடா.என்னை யாருன்னு நெனச்சிண்டிருக்க. நான் யாரூன்னு சொல்லட்டமா "என்றாள். கணேசன் கொஞ்சம் தைர்யத்து வரவழித்து கொண்டு " நீ யார் சொல்லு பார்க்கலாம் " என்றார். அடுத்த நொடி கீழே விழுந்து புறண்டு அழ ஆரம்பித்தாள் வினயா.பின்னர் கண்களை மூடி மயக்கமானாள். 


ப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டரை அவள் முகத்தில் விமலா தெளித்தாள்.கண் விழித்த வினயா, தாய் தந்தை இருவரும் கவலையுடன் தனதருகில் நிற்பதை கண்டு "என்ன ஆச்சு நேக்கு "என்றவள்,தரை முழுவதும் எழுதியிருப்தை பார்த்து "யார் இப்படியெல்லாம் அசிங்கம் பண்ணியிருக்கா"என்றாள். நடந்ததை விமலா கூற முகத்தில் ஆச்சர்யத்தை கூட்டிய வினயா "நானா இப்படி யெல்லாம் பண்ணேன். நேக்கு என்ன ஆச்சு " என்று அழ ஆரம்பித்தாள். அவளை சமாதானப்படுத்துவது பெரும்பாடாயிற்று.

விபூதி சம்படத்திலிருந்து விபூதியை எடுத்து அவள் நெற்றியில் இட்டாள் விமலா. எப்படி இருந்த பெண் இப்படி ஆய்விட்டாளே என்று ஆதங்கப்பட்ட அவள், "இவள இப்படிப்பண்ணவ குலமே நாசமா போயிடணம்" என்று சொன்னாள் ஆத்திரத்துடன். இதைக்கேட்ட கணேசன் "தோ பார் விமலா,யாரோ புத்தி கெட்டு போய் இப்படி பண்ணியிருக்கலாம். அப்படி இருந்தா அவா அதுக்குண்டான பலன ஆனுபவிப்பா.அதுக்கோசரம் நம்பளும் அவாள சாபமிடறது தப்பு"என்றார்.பின்னர் விமலா வினயாவிற்கும்,கணேசனுக்கும் சாப்பாடு பறிமாறினாள்.வழக்கத்தை விட வினயா அதிகமாகவே சாப்பிடுவதை கண்டு அதிசயப்பட்டாள் விமலா.

No comments:

Post a Comment