Thursday, April 18, 2024

பெரியவா மகிமை

Saraswati thyagarajan -நாம் காணப்போவது சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நடந்த சம்பவம்! 100% உண்மை!

மஹா பெரியவா பக்தரான ஒருவர் சென்னை ஐ ஐ டி யில் படித்து பெரியவா தர்சனம் ஒவ்வொரு குருவாரமும் தவறாமல் செய்து வந்தவர். 

உயர்  கல்வி அடைந்தவுடன் பெரியவாளிடம் ஆஸி பெறச் சென்றார்.'

அடுத்து என்ன பண்ண போற' என்று கேட்டார் குரு. வெளி நாட்டில் வேலை கிடைத்திருப்பதாக சொன்னார் பக்தர்.

உடனே அங்கெல்லாம் போக வேண்டாம் இங்கேயே நல்ல வேலை கிடைக்கும் என்று சொல்ல, பக்தரும் குரு வாக்ய பரிபாலனம் செய்ய இந்தியாவிலேயே தங்கி விட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அந்த கம்பெனியில் இவரை கனடாவில் தங்கள் கிளையில் உயர் பதவிக்கு மாற்றி விட்டார்கள் 

பெரியவா வாக்கு மட்டுமே கேட்டு அனுசரித்து வந்தவர் ஓடோடி வந்தார் குருவிடம்! 

இப்போ என்ன செய்யறது? வேலை வேற எங்கேயாவது பார்க்கட்டுமா? என பெரியவாளிடம் கேட்க, அவர் உடனே வேண்டாம் கனடாவில் அந்த வேலையிலேயே சேர்ந்துடு ' என்று வாழ்த்தி அனுப்பினார். 

சில ஆண்டுகள் அங்கு வாழ்ந்து கல்யாணமும் நம் முறைப்படி செய்து கொண்டு வாடகை வீட்டில் இருந்தவர் ஒரு புதுவீடு கட்டி வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்ய நாளும் குறித்தாகி விட்டது. 

திடீரென வீடு கட்டும் இன்ஜினீயர்க்கு உடல் நலம் குன்றி அந்த குறித்த நாளில் செல்வது கடினம் எனச் சொல்லிவிட்டார். 

இவரோ அங்குள்ள வழக்கப்படி, தான் குடியிருந்த வீட்டைக் காலி செய்ய  தேதி குறித்து அவர்களிடம் சொல்லியாகி விட்டது. 

இன்ஜினீயர் உடன் பேசி ஒண்ணும் பயனில்லை. பெரியவா கிட்ட முறையிட்டார்.  

திடீரென வீடு கட்டும் மேற்பார்வையாளரிடம் இருந்து அழைப்பு! அந்த சுப முஹூர்த்ததிலேயே நடக்கும்படி ஒர் அதிசயம்! 

புது வீடு புகுமனை விழா அன்று பெரியவா படத்தையும் மங்கள திரவியங்களையும் எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு சென்றார். வீடு கட்டின அனைவரையும் அழைத்திருந்தார். 

இந்து மரபில் வீட்டில் புகும்போது அவரவர் குடும்ப தெய்வத்தை எடுத்துக் கொண்டு முதலில் செல்வது மரபு .அதன்படி இவர் மஹா பெரியவா படத்தை எடுத்துக் கொண்டு உள்ளே செல்லும் சமயம் வீடு கட்டின இன்ஜினீயர் who is the old man, யார்  இந்த பெரியவர்? எனக் கேட்க , இவர்தாம் எங்கள் குல குரு, தெய்வம் எல்லாமே , என பதிலளித்தார்.

அப்போ நடந்த அதிசயம் என்ன தெரியுமா? இந்தப் பெரியவர் தினம் இங்கு வேலை நடக்கும் இடத்தில் வந்து சீக்கிரம் குறிப்பிட்ட நாளில் முடித்துக் கொடுத்து விடு அவன் வீடு இல்லாமல் என்ன செய்வான் என்று கையில் ஒரு குச்சியோடு வந்து நின்று விடுவார் ! 

எனக்கு அவர் மேல் மரியாதை கலந்த பக்தி. வந்த என் நோய் போன இடம் தெரியாமல் வேகமாக போக, அந்த வீட்டை விரைவாக முடித்துக் கொடுத்தேன் என்று சொல்ல அனைவருக்கும் ஆச்சர்யம் கலந்த பக்தி உணர்வு!

எங்கோ அயல் தேசத்தில், தன் பக்தன் வீடில்லாமல் கஷ்டப் படக் கூடாது என அந்த ஸ்தலத்துக்கே சென்று வாதாடி பக்தனுக்கு சாதகமாககச் செய்தது எத்தகைய அனுக்ரஹம்! 

பக்தனின் பூர்ண பக்தியின் பலன்!

அடுத்து மாடியில் பெரிய ஹால். அது முழுதும் பெரியவா படங்கள்! பூஜை அங்குதான்!  ஒரு நாள் பெரியவா பக்தனின் மகன் 3 வயதுக் குழந்தை கையைப் பிடித்து என் பூஜை அறை எங்கே அழைத்துச் செல் எனக் கேட்க குழந்தையும் மாடிக்கு தாத்தாவைக் கூட்டிச் செல்கிறான்! இது சொப்பனத்தில்! ஏன் என் படம் மட்டும் இருக்கு புதுப் பெரியவா படம் ஏன் இல்லை? அப்பா கிட்ட சொல்லி அவர் படத்தையும் வெச்சு பூஜை பண்ணச் சொல் என்று சொல்லி மறைந்து விட்டாராம்! 

மறு நாள் அந்த குழந்தை அக்ஷரம் பிசகாமல் அப்பாவிடம் அப்படியே சொல்லிக் அன்றைய தினம் முதல், அவருக்கும் சேர்த்து பூஜை !! 

இதுதான் பெரியவா மகிமை! 

எங்கெல்லாம் பெரியவா நாம ஸ்மரணம் இருக்கோ, அங்கெல்லாம் பெரியவாளும் இருப்பா. அவர் கடாக்ஷமும் இருக்கும்!

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

No comments:

Post a Comment