தன்வினை....-12
By N Krishnamurthy
திருமண மண்டபம் கிடைக்காததால் திருமணம் ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டது.
ஜகனும்,வினயாவும் அடிக்கடி வெளியே சந்தித்துக்கொண்டார்கள். சில விடுமுறை நாட்களிள் ஜகன் அவளை அவள் வீட்டிற்கே வந்து வெளியே அழைத்துச்செல்வான்.
இதற்கிடையில், சௌஜன்யா விரக்தியின் விளிம்பில் இருந்தாள். ஒரு நாள் கஸ்தூரி அவளிடம் " உனக்கும், வினயாவுக்கும் என்னடி பிராப்ளம் " என்று கேட்டாள். " அம்மா அவளைப் பற்றி என்கிட்ட பேசாத. அவ ஒரு நம்பிக்கை துரோகி" என்று கூறினாள் சௌஜன்யா.
கஸ்தூரி அவளிடம் மீண்டும் "இருவரும் எழஞ்சிண்டிரிந்தீங்க.இப்போ இப்படி எலியும், பூனையுமா ஆய்ட்டேங்க. உனக்கும்,அவளுக்கும் அப்படி என்னடி பிராப்ளம்" என்று மீண்டும் கேட்டாள்
" அம்மா. அவளைப் பத்தி என்கிட்ட பேசாத. அவ ஒரு பசுத்தோல் போத்திய புலி" என்று கூறினாள் சௌஜன்யா. கஸ்தூரி " என்ன ஆச்சு சொல்லு" என்றாள் கஸ்தூரி. " நல்ல பழகற மாதிரி பழகி, என் முதுகுல குத்திட்டா அவ" என்றாள் சௌஜன்யா. " " என்ன நடந்ததுன்னு சொல்லாம பூடகமா பேசுறயே " என்றாள் கஸ்தூரி. " இதுக்கு மேல நான் சொல்ல மாட்டேன் " என்று சொல்லி சௌஜன்யா தன்னுடைய ரூம் கதவை சாத்திக் கொண்டாள்.
சௌஜன்யா இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. நினைத்து நினைத்து பார்த்ததில் விரக்தியும், துன்பமே அவளுக்கு அதிகமாக இருந்தது. ஏதாவது செய்து விட வேண்டும் என்று அவள் துடித்தாள். ஆனால் என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை.
எப்போதெல்லாம் எதிர் வீட்டில் இருந்த கோபாலன் நம்பூதிரிக்கு பணமுடை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அவர் சௌஜன்யாவிடம் கடன் வாங்கிச் செல்வார். அன்றும் அவர் அது போல் தான் வந்திருந்தார். சௌஜன்யா மொட்டை மாடியில் இருக்கிறாள் என்று கேள்விப்பட்டு அவர் அங்கே சென்றார்
சௌஜன்யா கண்ணீர் வடித்து கொண்டிருந்ததை பார்த்து" எந்தா. மோளே. எந்தரு ப்ரயாசம் (என்ன பிராப்ளம்) என்று கேட்டார்." ப்ராப்ளம் ஒண்ணும் இல்லை" என்று மழுப்ப பார்த்தாள் சௌஜன்யா. நம்பூதிரி விடுவதாக இல்லை. ஒரு வழியாக நடந்ததை எல்லாம் கூறினாள் சௌஜன்யா. நம்பூத்ரி யோசித்துப் பார்த்தார். கடனாக காசு பெறுவதை விட கொஞ்சம் தொழில் செய்தே காசு பறிக்கலாம் என்று தீர்மானத்திற்கு வந்தார். அவளிடம் "உனக்கு என்ன அந்த பையன் ஜகன் வினயாவை விட்டு விலகி உன்ன விரும்பணம். அவ்வளவு தானே " என்று கூறிவிட்டு அவள் காதில் ஏதோ கூறினார்.
அவர் சொன்னதை கேட்ட சௌஜன்யா அவரை கலவரத்துடன் பார்த்து "இது தப்பு இல்லையா"என்று கேட்டாள். அதற்கு நம்பூத்ரி "அந்த குட்டி பண்ண காரியம் மட்டும் ஞாயமா"என்று கேட்டார்.
" இதுக்காக ஞான் ஒரு ஸ்பெஷல் பூஜை பண்ணணும். கிட்டத்தட்ட பத்தாயிரம் செலவாகும்" என்றார்.
"நான் நாளைக்கே பணத்துக்கு ஏற்பாடு பண்றேன். ஆனா இது யாருக்கும்தெரிய வேணாம் "என்றாள். "உன்னையும், என்னையும் தவிர ஒரு ஈ,காக்காவுக்கு கூட தெரியாது" என்றார் நம்பூத்ரி. என் பூஜையின் பலனை பத்தே நாள்ல நீ பாப்ப. பத்து நாளைக்கு அப்புறம் அந்த ஜகன் வினயாவை விட்டுட்டு, ஓம் பக்கமே கதியாக கிடப்பான்"என்றார். "இது தப்பில்லையா ",என்றாள் சௌஜன்யா மறுபடியும். சிறிது குற்ற உணர்வுடன் "இல்லவே இல்ல. இங்க்லீஷ்ல All is fair in love & war ன்னு சொல்லுவா. பயப்படாத மோளே. இதில் ஒண்ணும் பயப்படமாதிரி இல்ல.
இத யார் பண்ணான்னு யாராலயும் கண்டு பிடிக்க முடியாது. நிறைய பேருக்கு நான் இது மாதிரி செஞ்சு கொடுத்திருக்கிறேன். எல்லாருக்கும் சக்சஸ் ஆயிருக்கு " என்று உறுதியளித்தார் நம்பூத்ரி
No comments:
Post a Comment