குட்டிச்சாத்தான் வசியம்
குட்டி சாத்தான் வசிய மந்திரம் மிகவும் ரகசியமாக இதுவரை பாது காக்கப்பட்டுள்ளது.
**கேரளாவில் மட்டும் பல மலையாள மாந்திரீகர்கள் இதை இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள். காரணம் அவர்களுக்கு மந்திர சித்தி விரைவில் கிடைக்கிறது*
பலரும் அறிந்து கொள்ள வேண்டு மென்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டு வந்த அரிய மந்திர மான குட்டி சாத்தான் வசிய மந்திரத் தையும் வழி முறைகளையும் வெளியிடுகிறேன்.
இது குரு மூலமாக பயின்று உபதேசம் பெற்றால் தான் வேலை செய்ய ஆரம்பிக்கும்...
வசிய முறை
வெள்ளிக்கிழமை இரவு மூன்று மணிக்கு எழுந்து குளம் அல்லது நதியில் ஸ்நானம் செய்து, மந்திர ஜப அனுஷ்டானம் முடித்து இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு கீழ் காணும் மந்திரத்தை உச்சாடனம் செய்து ஜெபிக்கவேண்டும்.
நாற்பத்தெட்டு நாட்கள் இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.
இம்மந்திரத்தை ஜெபிப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சைவ சாத்வீக உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்,
அதுவும் தாமாகவே சமைத்து சாப்பிட வேண்டும். யாருடனும் பேசுவதோ, தாம்பத்திய உறவுகளோ கூடாது.
தென்னை ஓலையில் பச்சையாய் கிடுக்கு முடைந்து அதில் தான் படுத்துறங்க வேண்டும்.
குட்டிசாத்தான் வசிய மூல மந்திரம்
இதை தினமும் 1008 முறை என நாற்பத்தெட்டு நாட்கள் உரு ஏற்றிஜெபிக்க வேண்டும்.
குட்டி சாத்தான் உங்களை தேடி அவரே வந்து விடுவார் :
மேலே சொன்னதை முறைப்படி செய்திருந்தால், நாற்பத்தெட்டாவது நாள் ஒரு சிறு மனித ரூபம் விபூதி பையும், பிரம்பும் கொண்டு வரும்.
உங்கள் கண்களுக்கு நன்றாகவே புலப்படும்.
அந்த சிறு மனித ரூபம் வந்து நீங்கள் பூஜை செய்யும் குளத்தின் ஓரமாய் தன் விபூதி பையையும்,பிரம்பையும் வைத்து விட்டு முழங்கால் ஆழ ஜலத்தில் இறங்கி ஸ்நானஞ்செய்வது போல் இறங்கும்.
அந்த சமயத்தில் பயப்படாமல் சீக்கிரம் மேற்படி சென்று பையையும் பிரம்பையும் எடுத்துக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் போய் நின்று கொண்டால், இக்குட்டி சாத்தான் அவ்வளவு ஜலத்தில் இறங்காமல் விபூதி பையையும்,பிரம்பையும் கொடுவென்று கேட்கும்.
அப்போது நீங்கள் “நான் நினைக்கும் போதெல்லாம் வந்து நான் வேண்டுங்காரியங்களைத் தடையின்றி செய்வதாகச் சிவ பெருமான் மீது ஆணையிட்டுக் கொடு” என்று சொல்ல வேண்டும்.
அது ஆணையிட்டு சத்யம் செய்து கொடுத்த பின் விபூதி பையையும், பிரம்பையும் கொடுத்து விடவும்.
( குட்டி சாத்தான் சத்தியத்திற்கு கட்டப்பட்டவை )
பின்னர் இது நம்முடனே இருக்கும். இக்குட்டி சாத்தான் மந்திர சித்தி பெற்றவரின் கண்ணுக்கு மட்டுமே தெரியும், மற்றவர்க்கு இதன் உருவம் தெரியாது.
*குறிப்பு* : தாம் எதை சாப்பிட்டாலும் தனக்கு பின்புறம் உள்ள சாத்தானுக்கு காட்டி விட்டு தான் சாப்பிடவேண்டும்.
அப்படி செய்யா தவரை குட்டி சாத்தான் என்ன செய்யும் என்பது சொல்ல முடியாத வொன்று. ஆனால் அவர் தங்களுடன் இருக்கும் வரை இதை கடைபிடித்து தான் ஆகவேண்டும்.
No comments:
Post a Comment