தன்வினை .... - 4
By N Krishnamurthy
ஜகன் அந்த இடத்தை விட்டு அகன்றவுடன் சௌஜன்யா வினயாவிடம், "இந்த ஆள பத்தி என்ன நெனக்கிற" என்றாள்.
"தன்மையாக பழகுகிறார். கொஞ்சம் கெடிபிடியாக இருப்பார் போலிருக்கு" என்றாள் வினயா. அதற்கு சௌஜன்யா "அம்மா. பரதேவத. நான் உங்கிட்ட கேட்டேன் பார் "என்றாள். "என்ன சொல்ற நீ" என்றாள் வினயா."சொல்றேன் சொரக்காய்க்கு உப்பில்லேன்னு. நான் கேட்டது இந்த ஆளுக்கு ஒன் ஈஸ்ட் டு டென் ஸ்கேல்ல எவ்வளவு மார்க் போடலாம் "என்றாள். வினயா " எதுக்கடி வீண் வம்பு" என்றாள். சௌஜன்யா வினயாவைப்பார்த்து கொஞ்சம் கர கரத்த குரலில்,ஜகன் மாதிரி "இது போல பேச்சை நான் ரசிக்கமாட்டேன் "என்றதும் வினயாவிற்கு சிரிப்பு வந்தது.
ஜெகனை பற்றி ஒரு சிறிய வர்ணனை கொடுக்கப் போகிறேன் .
கிட்டத்தட்ட ஐந்து அடி பதினோரங்குலம் உயரம். பேண்டினுள் முழுக்கை சட்டையை இன் பண்ணிக் கொண்டிருந்தான். தலை நிறைய படியப்படிய வாரிய முடி. வினயா அளவுக்கு நிறம் இல்லாவிட்டாலும், நல்ல சிகப்பு நிறத்தில் சேர்த்தி. எந்தப் பெண்ணும் அவனை பார்த்தால், ஒரு முறைக்கு இரு முறை பார்க்காமல் இருக்க மாட்டாள். பெண்களுடன் பழகும் போது எப்படி பேச வேண்டும், எப்போது பேச்சை நிறுத்த வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு போனஸ் ந்யூஸ். ஜகனுக்கு இன்னும் மணமாகவில்லை. ஒரே தங்கை ( வயது 23) அதிதிக்கு மணம் முடித்த பின்தான் தனது திருமணம் என்ற கொள்கையில் பிடிப்பாய் இருந்தான்.
ஒரு மணிக்கு கையில் கொண்டுவந்திருந்த டிபன் பாக்ஸிலிருந்து உணவை கேன்டீனில் வைத்து சாப்பிட்டார்கள்
இருவரும்.மூன்று டேபிள் தள்ளி வேறொரு இளையனுடன் ஜகன் உணவருந்திக்கொண்டிருந்தான்.
ஜகன் கொடுத்த வேலையை முடிக்க ஐந்து மணி ஆகிவிட்டது.
ஜகனிடம் சென்று "வேலையை முடித்து விட்டோம்" என்றனர். " சரி.நாளை நான் செக் செய்கிறேன்" என்றவன் "இன்னும் பத்து நிமிடத்தில் ஆபீஸ் பஸ் கிளம்பும் .நீங்கள் போகலாம்" என்றான் .
இருவரும் பில்லர் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர். பஸ் கிளம்பியதும் சௌஜன்யா மெல்லிய குரலில் வினயாவைப்பார்த்து "அந்த ஆள் ரெண்டு அழகிகள் எதிர்ப்புறம் இருந்தும் அனவசியமாக பார்க்கவில்லை. பார்த்தாயா" என்றாள். வினயா அவளைப்பார்த்து "ரெண்டு அழகியா. நான் ஒரு அழகிதானே அவர் எதிரில் இருந்தேன் " என்றாள். சைஜன்யா அவளை அடிக்கிற மாதிரி கையை ஒங்கி "கொன்னுடுவேன். அப்போ நான் அழகி இல்லேங்கறயா" என்றாள் பொய்க்கோபத்துடன். "அப்படி சொல்வேனா.
நீ பேரழகி ஆயிற்றே "என்றாள். "அப்படி போடு அரிவாள "என்றாள் சௌஜன்யா.
பில்லரில் இறங்கியதும், போஸ்டல் காலனிக்கு நடப்பதற்கு முன் வினயா அவளிடம் " ஜகன் நினைப்பிலேயே இருக்காதே. என்னையும் அப்பப்போ நெனச்சிக்கோ"என்றாள்.இதைக்கேட்டு சிரித்த சௌஜன்யா "பை" சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
வினயா ஒப்புக்கு அப்படி சொன்னாளே தவிர அவள் மனம் முழுதும் ஜகனே நிறைந்திருந்த மாயத்தை அவள் உணர்ந்தாள்.
என்ற மிஸ்ஸியம்மா பட சினிமா பாடல் அப்போதைய அவள் மன நிலைக்கு ஏற்றதாயிருந்தது.
No comments:
Post a Comment