Friday, April 5, 2024

தன்வினை .... - 2

 தன்வினை .... - 2

 By N Krishnamurthy 

சௌஜன்யா அம்மா கஸ்தூரிக்கு பூர்வீகம் கேரளாவில் உள்ள அங்கமாலி. ஆனால் இரண்டு தலைமுறைக்கு முன்னரே அவர்கள் குடும்பம்  கோயம்புத்தூருக்கு வந்து செட்டில் ஆகி விட்டிருந்தது.

அவர்கள்  எதிர் வீட்டில் தான் சுந்தரம் வசித்து வந்தார். சுந்தரத்துக்கு கோயம்புத்தூர் தான் சொந்த ஊர். இருவரும் கல்லூரி படிக்கும் போது பழக்கமானார்கள். நெருங்கி பழகினாலும் பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம் தான் அவர்களுடையது. கஸ்தூரி வீட்டு பூஜை அறையில் குருவாயூர் கிருஷ்ணன் படமும், சோட்டானிக்கரா பகவதி படமும் இடம் பெற்றிருக்கும்.

விமலாவின் அப்பா கணேசனுக்கு சொந்த ஊர் கும்பகோணம். அம்மா விமலாவுக்கு நன்னிலம். கும்பகோணம் சார்ங்கபாணிப் பெருமாள்தான் கணேசன் குடும்பத்துக்கு குல தெய்வம். வருடத்திற்கு ஒருமுறையோ, இரு முறையோ கும்பகோணம் சென்று குலதெய்வத்தை வழிபட்டு வருவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார் அவர்.

சௌஜன்யாவும், வினயாவும் பிறர் பார்த்து திருஷ்டி படும் அளவு நட்பில் இருந்தார்கள். முதல் வருஷம்  அவர்கள் பழகுவதை பார்த்த தமிழ் ப்ரொபசர் மனோன்மணி அவர்களுக்கு *இரட்டைக்கிளவி* என்று பெயர்  வைத்திருந்தார். என்றாது  ஒரு நாள் அவர்கள் இருவரும் கல்லூரிக்கு வராவிட்டால் "எங்கே இரட்டைக் கிளவிகளை காணோம் " என்று  அவள் கேட்டதுண்டு. இவர்களை கண்டு அசூயை அடைந்த சில பெண்கள் வேண்டும் என்றே இவர்களை இரட்டைக் கிழவிகள் என்று சொல்லி நையாண்டி செய்து மகிழ்ந்ததும் உண்டு. இதைக்கேட்டால் சௌஜன்யாவுக்கு கோவம் பிய்த்துக் கொண்டு வந்து விடும். வினயா இதை எல்லாம் பொருட்படுத்தவே மாட்டாள்.

" சௌ.இதையெல்லாம் பெரிசாக்காதே. இந்த அற்ப விஷயத்தினால அவர்கள் சந்தோஷப்பட்டா பட்டூட்டு போகட்டமே" என்பாள்.

கல்லூரி வாழ்க்கை மிக ஆனந்தமாக போய்க்கொண்டிருந்தது.இருவரும் படிப்பில் சூரப்புலிகள்.

பாட்டு போட்டிகளில் மட்டும் வினியா பங்கு கொண்டு பரிசு வாங்குவாள்.

பேச்சுப் போட்டியில் சௌஜன்யா கலந்து கொண்டால் பரிசு நிச்சயம் அவளுக்குத்தான்.

ஓணம் அன்று வினையா தன் வீட்டில் தங்க மாட்டாள். காலை ஆறு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு நேராக சௌஜன்யா வீட்டுக்கு சென்று விடுவாள். பண்டிகை முடித்துக்கொண்டு மாலை தான் வீட்டுக்கும் திரும்புவாள். அப்போது சாப்பிட சௌஜன்யாவின் எதிர் FLAT ல் இருந்த கோபாலன் நம்பூத்ரி வருதுண்டு.

மூன்று வருட கல்லூரி படிப்பு  கிடுகிடு என சென்றது. கடைசி பரிட்சை முடித்தாகி விட்டது விடுமுறை நாட்களில் சென்னை முழுவதும் சுற்றிப் பார்த்தார்கள்.

வாரம் ஏதாவது ஒரு தியேட்டர் சென்று சினிமா பார்த்துவிடுவார்கள். 

ஒரு வாரம் கேரளா சென்று வருவதற்காக சௌஜன்யா திட்டமிட்டாள்.   வினயாவையும் வருமாறு கேட்டுக் கொண்டாள்.

வினயாவுக்கும் போக இஷ்டம்தான். ஆனால்  விமலா அவளை தனியாக அனுப்ப மறுத்துவிட்டாள். 

"வினி.அப்போ நானும் போலடி.ட்ரிப்பை கேன்சல் பண்ணிடறேன் "என்றாள் சௌஜன்யா.

" வேண்டாண்டி சௌ.நீ போய்ட்டு வா"என்று ஆறுதல் கூறி வினயா அவளை அனுப்பி வைத்தாள். 

இந்த மூன்று வருட பழக்கத்தில் இந்த முறை தான்  தொடர்ச்சியாக  ஒரு  வாரம் அவர்களும் தனியாக இருந்திருக்கார்கள். அந்த ஒரு வாரம் இவர்கள் இருவருக்கும் பொழுது போவது மிக கஷ்டமாக இருந்தது. சௌஜன்யா கேரளாவில் இருந்து வந்த அன்று காலையிலேயே,

வடக்கஞ்சேரி நேந்திரம் சிப்ஸோடு, வினையா வீட்டுக்கு வந்துவிட்டாள். "எப்படி டீ.சௌ. உன் கேரளா   டிரிப் " என்று கேட்டாள் வினயா.

 " கேரளா நல்லதா இருக்கு. ஆனா நீ  இல்லாம எனக்கு போர் அடிச்சு போச்சு" என்றாள் அவள். இந்த அளவுக்கு அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தார்கள். விமலா இவர்களைப் பார்த்து

 " நீங்க ரெண்டு பேரும் ஒத்துர விட்டு ஒத்துர்  பிரியாம இருக்கீங்க. எப்படி தனித்தனியாக கல்யாணம் பண்ணிண்டு போக போறீங்கன்னு தெரியல" என்றாள் அதைக் கேட்ட சௌஜன்யா " கவலைப்படாதீங்க மாமி. நாங்க ரெண்டு பேரும் ஒரே ஊர்  மாப்பிள்ளையா தான் பாப்போம் .ஒரே தெருவில் தான் குடியிருக்க போறோம்" என்பாள் சௌஜன்யா. அதைக்கேட்ட விமலா "நெனைப்புதான் பொழப்ப கெடுப்புக்குமாம்" என்று கூறி சிரிப்பாள்.

இரண்டு மாதங்கள் கழித்து பரீட்சை ரிசல்ட் வந்தது. இரண்டு பேரும் முதல் வகுப்பில் பாஸ் செய்திருந்தார்கள்.

No comments:

Post a Comment