Sunday, April 14, 2024

தஞ்சை பாரம்பரிய சமையல்

 தஞ்சை பாரம்பரிய சமையல்

தஞ்சை மாவட்டத்தில் வைக்கிற வெங்காயக்குழம்புக்கு ஒரு தனி ருசியும் மணமும் உண்டு .

காய் போட்டும் வைக்கலாம் காயே போடாமலும் வைக்கலாம் ஏன்னா அந்த குழம்புக்கு கதாநாயகியே சின்ன வெங்காயம் தான். சின்ன வெங்கா யத்தை முழுசா போடக்கூடாது வத்தக்குழம்புக்குத்தான் முழுசா போடனும். 

ஒவ்வொரு குழம்புக்கும் வெங்காயத்தை ஒவ்வொரு மாதிரி வெட்டனும் சமைக்கிறவங்களுக்கு அந்த ட்ரிக் நல்லாவே தெரியும். அதை கடைசியா சொல்றேன்

இந்த குழம்புக்கு சின்ன வெங்காயத்தை இரண்டா வெட்டி இரண்டு தக்காளி போதும்.  அதன் பிறகு தேங்காயை துருவி அதுல கொஞ்சம் சோம்பு வைச்சு அரைச்சு எடுத்துக்கனும்.  

இப்ப ஒரு பாத்திரத்தை அடுப்பில் எண்ணெய் ஊற்றி  கொஞ்சம் வெந்தயம் போட்டு பொன்னிறமா வெந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு ரொம்ப வதக்கக்கூடாது 

லேசா வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய தக்காளியும் போட்டு அதுல கொஞ்சம் மஞ்சள் தூள், குழம்பு மசாலா,  போட்டு அது மேல கொஞ்சம் புளியை கரைச்சு விட்டு (ரொம்ப புளி தேவையில்லை) கொஞ்சம் உப்பு போட்டு நாலஞ்சு கொதி வந்ததும் அரைச்சு வைச்ச தேங்காயை போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு இறங்கினால் தெருவே மணக்கிற வெங்காய குழம்பு ரெடி ஆகிடும். 

காய் இருந்தால் காய் சேர்த்துக் கலாம் காய் இல்லன்னா கவலையே இல்லை காய் இல்லாமலே அருமையா இருக்கும் சுட சுட இருக்கிற சாதத்துல அந்த குழம்பை விட்டு சாப்பிட்டா அந்த மாதிரி இருக்கும். 

இந்த மாதிரி குழம்பை அதிகமா விட்டு சாப்பிடக் கூடாது லைட்டா விட்டு தான் சாப்பிடனும் அப்பதான் சூப்பரா இருக்கும்.

அப்புறம் அந்த வெங்காயம் வெட்டுற முறை சொல்றேன் பாருங்க. 

பொரியலுக்கு பெரிய வெங்காயம் சேர்த்தால் நல்லா இருக்கும் அதை பொடியா கட் பண்ணனும் நீள நீளமா வெட்டக் கூடாது. 

ரசம், சாம்பாருக்கு நீளமா வெட்டனும். சின்ன வெங்கா யத்தை வெங்காய குழம்புக்கு இரண்டா வெட்டனும்,   

வத்தக்குழம்புக்கு முழுசா போடனும்.  வெங்காயம் வெட்டுறதுல இத்தனை ஸ்டைல் இருக்கு. 

அப்புறம் குழம்பு வகைகளுக்கு சேர்க்கிற மசாலா பார்த்திங்கன்னா வெங்காய குழம்புக்கு தேங்காயோடு  சோம்பு சேர்த்து அரைக்கனும்.  சாம்பாருக்கு சீரகம் சேர்க்கனும் . இந்த மாதிரி நிறைய இருக்கு. 

அந்தந்த குழம்புக்கு அதததை சேர்ந்தால் தான் இந்த குழம்புன்னு கண்டு பிடிக்க முடியும். 

மாற்றி சேர்ந்தால் என்ன குழம்புன்னு சாப்பிடுறவங்க குழம்பி போய்டுவாங்க. 

நிறைய பேர் மாத்தி மாத்தி சேர்ப்பதால் தான் குழம்பின் குணமே மாறக் காரணம்.  

நிறைய பேருக்கு சீரகத்துக்கும் சோம்புக்கும் வித்தியாசம் தெரியல. எதுக்கு சோம்பு போடனும் எதுக்கு வெந்தயம் போடனும் எதுக்கு சீரகம் போடனும்னு தெரிஞ்சாலே சமையல் கைவந்த கலைதான். 

இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சமையல் முறை இருக்கு 

அதை தயவு செய்து மாத்திடாதிங்க.

No comments:

Post a Comment