இன்றும் திராவிட மாடல் மாதிரி இலவச மழை பொழிகிறது. Enjoy.
தன்வினை....-20
By N Krishnamurthy
கணேசன் பேச ஆரம்பித்தார்.
" உங்கப்பாவுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி நீங்க திருச்சிக்கு போனதக்கப்புறம் மூணு வருஷம் சொந்த ஊர்ல இருந்தோம். அப்புறம் மெட்ராஸ் போய்ட்டோம். விவேகானந்தா காலேஜ்ல பி.எஸ்.சி முடிச்சு,சர்வீஸ் கமிஷன் எழுதி சென்ட்ரல் கவர்ன்மண்ட் வேலைல சேர்ந்தேன். கல்யாணம் ஆச்சு. நேக்கு ஒரே பொண்ணு .நேக்கும் விமலாவுக்கும் வினயா பொறந்தா. சமீபத்ல வினயாவுக்கு நிச்சயதார்த்தம் கூட முடிஞ்சது. அதுவரை நண்ணா போயிண்டிருந்த என் வாழ்க்கை, நான் பண்ண பூர்வ ஜென்ம பாவத்தாலயோ, என்னவோ நில தடுமாறி போய்ட்டது. எத்த தின்னா பித்தம் தெளியும்ன்ற நெலமைக்கு ஆளாய்ட்டோம்"என்று அவர் கூறியபோது அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
இதைக்கண்ட சிதம்பரம் " நீ ஆம்பளடா. அழலாமா. அந்தகடவுள் எல்லா சுகத்தையும் தொடர்ச்சியா கொடுக்கறதில்லை. சுகம் அதிகமா போறபோது நமக்கு ஒரு மதமதப்பு வந்தூடறது. அதிகமா ஸ்வீட்டா சாப்ட்டா வயித்தல மந்தம் ஏற்படர்து. உடனே அந்த காலத்ல இதுக்கு நம்ப அம்மா ,பாட்டி எல்லாம் என்ன பண்ணுவா, ஞாபகம் இருக்கா. நமக்கு அப்போ பேதிக்கு கொடுப்பா.வயத்து உபாத தீந்தூடும். அது போல பகவான் உனக்கு கசப்பு மருந்த கொடுத்திருக்கான். இதுக்கப்புறம் எல்லாமே நல்லதா இருக்கும் " என்று கூறி " கொஞ்ச நேரம் முன்னாடி தகராறு பண்ணிண்டி ருந்தாளே அவதான் உன் பொண்ணு வினயாவா" என்று கேட்டார். இவரும் அந்த கூத்தையெல்லாம் பார்த்து இருக்கிறார் போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்ட கணேசன் தலையை குனிந்தபடி "ஆமாம்"என்றார் .
"ஆமாம்,உனக்கு ஒரே கொழந்தேன்னு சொன்ன. அப்போ உங்க கூட இருந்த பையன் யார். தெரிஞ்சவனா" என சிதம்பரம் கேட்டார். கணேசன் "அவர் தான் வினயாவுக்கு நிச்சயம் பண்ணியிருக்கற பையன் "என்றார்.
உட னே சிதம்பரம் " எதுக்கு இப்படி தலைய குனிஞ்சுகற.வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த காலத்துல பசங்க எல்லாம் வித்தியாசமா யோசிக்கறா. அதனால்தான் அப்பா, அம்மாவினுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்கறது இல்ல" என்று சொன்னார். அதற்கு கணேசன் " சிதம்பரம் சார்.என் பொண்ணு வினையா அப்படிபட்டவ இல்லை. நான் கிழிச்ச கோட்ட தாண்டாதவ. ரெண்டு மாசமா அவள ஏதோ படுத்திண்டு இருக்கு. நிச்சாயதார்த்தம் முடிஞ்ச கொஞ்ச நாளைக்கப்பறம் அவ சித்த பிரம பிடிச்ச மாதிரி இருக்கா.
டாக்டர் கிட்ட காட்டி மருந்து ,மாத்தரையும் கொடுத்திண்டிருக்கோம். குணம் தெரியல. குல தெய்வம் சார்ங்கபாணியை தர்சனம் பண்ணலாம்னு வந்த எடத்ல இப்படி ஆய்ட்த்து" என்றார் கணேசன்.
சிதம்பரம் "கவலய விடு. எல்லா டாக்டர விட பெரிய டாக்டரான பெருமாள் காதுலே உன் கஷ்டத்தை போட்டூட்டயோன்னோ.இன்னமே அவர் பாத்துப்பார் "என்று ஆறுதல் கூறினார்.
தன்வினை....21
"மேக்கொண்டு என்ன பண்றதா உத்தேசம் " என்றார் சிதம்பரம். இக்கட்டான தருணத்ததிலும் கணேசன் "மேக்கொண்டு என்ன பண்றது. லாட்ஜுக்கு தான் போகணம்"என்று ஜோக்கடித்தார்."என்னனடா நீயும் ஜோக்கடிக்கற"என்றார் சிதம்பரம். கணேசன்"பூவோட சேந்த நாறும் மணம் பெறும்ன்ற மாதிரி உங்க கிட்டேந்து ஜோக் அடிக்கறது தொத்திண்டூட்த்து"என்றார். சிதம்பரம் "That is the spirit டா கணேசா. கஷ்டம் வரும்போது நம்ம தலய குனிஞ்சுண்டே இருந்தா கவல நம்ப முதுகுல ஏறி அழுத்தும்.அப்போதான் நம்ப தல நிமிர்ந்து நிக்கணம் " என்றவர்
" வாடா,நானும் உங்கூட லாட்ஜுக்கு வரேன்" என்றார். இருவரும் லாட்ஜை நோக்கி நடந்தார்கள்.
ரூம் கதவை தட்டினார் கணேசன். ரூம் உள்ளே பலத்த சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கழிந்த பின்னர் ரூம் கதைவை பாதி திறந்த ஜகன் யார் கதவை தட்டியது என பார்த்தான். கணேசனுடன் ஒரு அன்னியர் நிற்பதை கண்டதும் கொஞ்சம் தயக்கம் காட்டினான் அவன். "பரவாயில்ல தொறங்க. சார் நமக்கு வேண்டியவர்தான் "என்றார் கணேசன். கதவு முழுவதுமாக திறந்ததும் இருவரும் உள்ளே நுழைந்தனர். சிதம்பரத்தை பார்த்த வினயா இன்னும் உரத்த குரலெடுத்து "யார்டா நீ. உன்னால ஒண்ணும் பிடுங்க முடியாது. உன்ன தீத்து கட்டீடுவேன் "என்று கத்த ஆரம்பித்தாள். "கதவை அடைங்கோ" என்றார் சிதம்பரம் உரத்த குரலில்.
வினயா இருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து, சிதம்பரத்தை அடிக்க கை ஓங்கினாள். அவளது ஓங்கிய கையை இறுக்கி பிடித்த சிதம்பரம் கண்களை மூடி
என்று ஆரம்பித்து குமார தந்த்ரத்தில் கூறப்பட்ட சுப்ரம்மண்ய பிரசன்ன மாலா மந்திரத்தை முழுவதும்( ஏழு நிமிடம் எடுத்துக்கொண்டு) சொன்னார். அவர் ரெண்டாவது வரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே வினயாவின் கை பிடி தளர்ந்தது. அவள் கண்கள் சொருக ஆரம்பிக்க, அவள் கீழே விழப்போனாள். அவளை விமலாவும், கணேசனும் தாங்கிப்பிடித்தார்கள்.
ஸ்லோகத்தை ஓதி முடித்த சிதம்பரம் கண் திறந்து கணேசனிடம் " இது ஹயக்ரீவரால் உபதேசிக்கப்பட்ட சத்ரு சம்ஹார மந்த்ரம். இதை நான் உனக்கு எழுதி தருகிறேன். நீ தினமும் குளித்துவிட்டு இதை சொல்லணம். துர்சக்தி அணுகாமல் இது நம்மை பாதுகிக்கும்"என்றார். வினயா ஆழ்ந்த உறகத்திலிருந்தாள்.
பின்பு சிதம்பரம் கணேசனிடம்," வினயாவுக்கு இப்படி ஆறதுக்கு முன்னாடி உங்க ஆத்துல ஏதாவது துர் சகுனம் தென்பட்டதா "என்று கேட்டார். கணேசன் "ஆமாம். அதை துர்சகுனமான்னு சொல்ல முடியல. எனக்கு நிலப்படில இருக்க கம்பி குத்தி காயம் ஆய்டுத்து"என்றார். "இன்னும் ஏதாச்சும் நடந்ததா. ஞாபகப்படுத்தி பாருங்கோ"என்றார் சிதம்பரம். விமலா "ஆமாம்.காரணமே இல்லாம துளசி செடி பட்டு போச்சு. அத்தோட இல்லாம கிச்சன்ல எப்பவும் ஓடிண்டிருக்க பல்லி கூட்டம் இப்பெல்லாம் தல கிட்டறதே இல்ல "என்றார். இதையெல்லாம் கேட்ட சிதம்பரம் " சிவ சிவா. இவ்வளவும் நடந்திருக்கு" என்றார்.பின்பு அவர் கணேசனயும், ஜகனையும் பார்த்து "நம்ப கொஞ்சம் தனியா பேசணமே"என்றவர் "ரிசப்ஷனுக்கு போலாமா"என்றார். ஜகன் "எனக்கு தனி ரூம் இருக்கு சார். அங்க போலாமா" என்றான்.
"சரி"என்று சிதம்பரம் கூற, மூவரும் ஜகனுடைய அறைக்கு சென்றார்கள். சென்றவுடன் கணேசன்"மறந்தூட்டனே. இது தான் ஜகன். வினயாவுக்கு நிச்சயமாயிருக்கற மாப்பிள்ளை "என்று சிதம்பரத்திடம் கூறிவிட்டு ஜகனிடம் "சார் தான் சிதம்பரம். ஆதில நாங்க ஒரே ஊர்ல இருந்திண்டிருந்தோம். கோவில்ல என்ன பாத்து அடையாளம் கண்டு பிடிச்சார் " என்றார்.
"Nice to meet you sir" என்று கை கொடுத்தான் ஜகன். அவனது கைகளை குலுக்கிய சிதம்பரம் Nice to meet you too" என்றவர் "இந்த காலத்ல இப்படி ஒரு இளைஞனை பாக்றது சந்தோஷமாயிருக்கு "என்றார்.
பின்பு கணேசனை பார்த்து "ஏண்டா ரொம்ப நாளைக்கப்புறம் பாக்கறோம். காபி வாங்கி தர மாட்டேங்கற"என்றார். ஜகன் உடனே "நான் காபிக்கு ஆர்டர் பண்றேன்"என்றான். "யார் ஆர்டர் பண்ணா என்ன. நேக்கு வேண்டியது ஸ்ட்ராங் கும்பகோணம் டிகிரி காபி"என்று சொல்லி சிரித்தார். ஜகன் ரூம் சர்வீசை கூப்பிட்டு மூன்று காபிக்கு ஆர்டர் செய்தான். காபி வந்ததும் அதை குடித்து முடித்த சிதம்பரம் "ரெண்டு பேரும் கவனமா கேளுங்கோ. வினயாவுக்கு பிடிச்சிருக்கறது பைத்தியம் இல்லை. யாரோ வேண்டாதவா அவளுக்கு செய்வினை பண்ணியிருக்கா "என்றார். இதைக்கேட்ட கணேசன் அதிர்ந்து போனார். ஜகன் இதை நம்ப முடியாதவனானான்.
"பகவான் நீங்க சொன்ன மூணு சமிக்ஞைகளால உங்களுக்கு இதை காமிச்சுகொடுத்திருக்கான்"என்றார்.
" எங்களுக்கு வேண்டாதவா யாரும் இல்லையே" என்றார் கணேசன். சிதம்பரம் அவரிடம் "வேண்டாதவர் என்றால் பர்மனண்ட்டாக வேண்டாதவர்ளாக இருக்கணம்னு அவசியமில்லை. ஏதோ சில காரணங்களுக்காக சமீபத்தில் கூட வேண்டாதவர்களாக யாராவது ஆகியிருக்கலாம். For example, ஜகன் வினயாவை கல்யாணம் பண்ணிகறதை பிடிக்காத யாரவது கூட இத பண்ணியிருக்கலாம் " என்றார்.
No comments:
Post a Comment