தன் வினை....-22
By N Krishnamurthy
"இதை யாராவது வேண்டாதவர்கள் செய்திருக்கலாம்" என்று சிதம்பரம் சொன்னபோது ஜகனுக்கு என்னவோ சௌஜன்யாவின் முகம் கண்ணில் தோன்றியது. இதற்குப் பிறகு ஜகன் சிதம்பரத்திடம் " நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்" என்றான். "சொல்லு ஜகன்" என்றார் சிதம்பரம். "வினயாவுக்கு சௌஜன்யான்ற க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒத்தி இருக்கா. இவா ரெண்டு பேரும் நகமும், சதயும் மாதிரி இருப்பா. கொஞ்ச நாளாவே இவ ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்கா. நான் வினயாவுக்கு ப்ரொபோஸ் பண்ணினதக்கு அப்புறம் தான் இவா ரெண்டு பேரும் பிரிஞ்சா. எனக்கு என்னவோ சௌஜன்யாவுக்கு என் மேல் ஒரு கண்ணு இருக்கும் என்று சந்தேகம். சௌஜன்யா அம்மாவுக்கு பூர்வீகம் கேரளா . ஒருவேளை சௌஜன்யா இத பண்ணி இருக்கலாமோ" என்று கேட்டான் ஜகன்.
இதைக் கேட்ட சிதம்பரம் " என்னால இத உறுதியாக சொல்ல முடியல. இருந்தா கூட ரொம்ப வருஷம் க்ளோசா இருந்த ஒரு பெண் தன்னுடைய பிரண்டுக்கு இப்படி பண்ணியிருப்பாளா? அப்படி பண்ணியிருக்கான்னு வெச்சிண்டாலும், நிச்சயம் தனி மனுஷியா இத பண்ணியிருக்க முடியாது. யாராவது வெளியில ஹெல்ப் எடுத்துண்டு இருக்கணம். இதையெல்லாம் வெச்சு பாக்கச்ச அந்த பெண் இதை பண்ணியிருக்கமுடியும்னு நேக்கு தோணல. ஆனா அந்த Possibility ஐ Rule out செய்யவும் முடியாது" என்றார். அதன் பிறகு சிதம்பரம் " இதை யார் செய்தான்றது இப்போ முக்கியமில்லை . நம்ப என்ன செய்யணம்னு பாக்கணம். பேஷண்ட்க்கு என்ன வியாதி என்று தெரிஞ்சசூட்த்து. இனிமே அதுக்கு உண்டான மருந்த நம்ம பாக்கணும். இதுக்கு மருந்து, செய்வினையை திருப்பி எடுக்கிறதுதான்" என்று கூறினார். இதை கேட்ட கணேசன்" நான் இதை கதைல படிச்சிருக்கேன் உண்மையிலே என் பொண்ணுக்கு இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கல. இதுக்கெல்லாம் பரிஹாரம் உண்டா. பரிஹாரம் பண்ணா சரியா போவாளா" என்றெல்லாம் கேட்டார். அதற்கு சிதம்பரம் " தோ பார்டா கணேசா. நம்பிக்கைதான் வாழ்க்கை. மொதல்ல நம்பணம். அதுக்கப்புறம் பகவான் இருக்கான். நம்ம யாருக்கும் மனுசால கூட கெடுதல் நினைக்கல. அப்படி இருக்கும்போது பகவான் நம்பளை கை விட்டூட மாட்டான். நீங்க இப்போதைக்கு நிம்மதியா மெட்ராஸ் கிளம்பி போங்க. நேக்கு ரெண்டு நாள் டைம் கொடு. இது விஷயமா நான் ஆலோசனை பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன்' என்றார். கணேசன் அவர் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு " சிதம்பரம் சார் உங்களை தான் இந்த விஷயத்துல மல போல நம்பி இருக்கேன்" என்று கண்ணில் நீர் துளிக்க சொன்னார்.
அவர் தோளை தட்டிக் கொடுத்த சிதம்பரம் "என்னை நம்பாதே. அதுக்கு பதிலா அந்த பெருமாளை நம்பு. எல்லாம் சரியாயிடும்" என்று ஆறுதல் கூறினார். பின்பு மூவரும் ரூமை விட்டு கிளம்ப நினைத்தபோது சிதம்பரம் கணேசனிடம் "பரிகாரம் பண்ண கொஞ்சம் செலவாகும் கணேசா, உன்னால முடியுமா" என்று கேட்டார் உடனே கணேசன் "முடியர்தோ, இல்லையோ, பண்ணி தானே ஆகணும் .அவ கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் சேத்து வச்சிருக்கேன்
.அதலேந்து எடுத்து பண்ணிட வேண்டியது தான்"என்றார். ஜகன் சிதம்பரத்திடம்" சார். நீங்க பணத்தை பத்தி கவலைப்பட வேண்டாம். எவ்வளவு செலவானாலும் நானே பாத்துகறேன். எனக்கு என் வினயா நல்லபடியா திரும்பி வரணும் சார் "என்றான் குரல் தழுதழுக்க. இதைக் கேட்ட சிதம்பரம் அவனை இறுக அணைத்து கொண்டு " நீ ஒரு அதிசய பிறவிப்பா. வேற யாராவது இருந்தா, இப்படி நடந்திருந்தால், நிச்சயதார்த்தம் முடிஞ்சா என்ன, நல்லவேளை கல்யாணம் நடக்கலையேன்னு சொல்லி, அந்த பொண்ண கை விட்டுருப்பான்" என்று கூறினார் .இதைக் கேட்ட ஜகன்"சார் . உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். நிச்சயதார்த்தத்துக்கு முன்னாடியே நான் இவதான் என் மனைவியின்னு மனசுக்குள்ள நிச்சயம் பண்ணிட்டேன். அப்பவே வினயா நேக்கு மனைவி ஆயிட்டா. அதனால இப்ப நான் வினயவை மனைவியா தான் பார்க்கிறேன். என் மனைவி உடம்பு குணம் ஆகணும்னு எனக்கு அக்கறை இருக்காதா. நிச்சயதார்த்ததுக்கு அப்புறம் எனக்கே இப்படி ஆயிருந்தா கூட என் வினயா என்ன சரி பண்ண நல்லபடியாக முயற்சி எடுத்து இருப்பான்னு நேக்கு தெரியும்" என்றான். இதைக் கேட்ட சிதம்பரம் " உனக்கோசரமாவது வினயா நல்லபடியா ஆகணம்னு பிரார்த்தன பண்ணிக்கறேன்" என்றார். மூவரும் திரும்பி கணேசன் ரூமுக்கு வந்தார்கள். "நான் போயிட்டு வரேன்"என எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார் . வினயா இன்னும் உறக்கத்திலிருந்தாள்.
ஜகன் " நானும் உங்க கூட பஸ் ஸ்டாண்ட் வர ரேன் சார்" என்றான். "அவசியம் வாப்பா" என்றார் சிதம்பரம். இருவரும் பேசிக் கொண்டே பஸ் ஸ்டாண்ட்டை அடைந்தார்கள்
No comments:
Post a Comment